.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 23, 2013

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்...


சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சேர்க்கை நடக்க இருக்கிறது. 


டிசம்பரில் தொடங்கும் பயிற்சி வகுப்புகளில், தங்கும் வசதியுடன் 200 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியும், தங்கும் வசதியின்றி 100 மாணவர்களுக்கு பகுதி நேரப் பயிற்சியும் வழங்கப்படும்.

எத்தனை இடங்கள்?

300 இடங்கள் கொண்ட இம்மையத்தில், ஆதிதிராவிடர்  123, அருந்ததியர்  24, பழங்குடியினர்  3, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  54, பிற்படுத்தப்பட்டோர்  72, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)  9, மாற்றுத் திறனாளிகள்  9, இதர வகுப்பினர்களுக்கு 6, இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தகுதிகள்

பட்டப்படிப்பு படித்த 21 வயது பூர்த்தியடைந்த, 30 வயதுக்கு மேற்படாத இதர பிரிவினர் விண்ணப்பிக்க தகுதியுடையோர். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு. விடுதியில் தங்கிப் பயிற்சி பெறுவோருக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி செய்துதரப்படும்.

கட்டணம்

முழுநேரப் பயிற்சியில் பயிற்சி பெற இதர பிரிவினர் மட்டும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். பகுதிநேர பயிற்சிக்கு இதர பிரிவினர் ரூ.3000 கட்டணமாக செலுத்தவேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய நபர்கள், அலுவலக வேலைநாட்களில் ஜாதி, வயது, பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நகல்களை, சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்க வேண்டும். 

சென்னை மாவட்ட விண்ணப்பதாரர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் மையத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே ஒப்படைக்க வேண்டும்.

சென்னை, திருச்சி, மதுரை கோவை, நெல்லை, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சை, தர்மபுரி, சிவகங்கை போன்ற இடங்களில் நடக்கும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். இம்மையங்களில் 10.11. 2013 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். 

நுழைவுத் தேர்வில் இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய,  உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள், அடிப்படை எண் அறிவு, புத்திக் கூர்மை, பகுத்தறியும் திறன், புரிந்து கொள்ளும் திறன் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும். 

நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு, சென்னை மையத்தில் வகுப்புகள் நடக்கும். 

நுழைவுத் தேர்வு, மாதிரி வினாத்தாள் 

http://www.civilservicecoaching.com 

என்ற இணையதளத்தில் உள்ளன. 

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2013. 

விவரங்களுக்கு 044 - 2462 1475 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். 

ஐ படத்திற்காக 3வது பாடல் ரெடி!


ஷங்கரின் ஐ படத்தில் தனது மூன்றாவது பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.   

அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் - விக்ரம் கூட்டணயில் உருவாகி வரும் திரைப்படம் ஐ. 

இப்படத்தில் விக்ரமுடன், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். 

தற்போது இளைஞர்களின் தனது புதுபுது டெக்னாலாஜி வரிகளால் கவனம் ஈர்த்த மதன் கார்க்கி இதில் பாடல் எழுதி வருகிறார். 

தற்போது இப்படத்திற்காக இவர் எழுதிய மூன்றாவது பாடல் பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது ஷங்கர் மற்றும் ரஹ்மான் மதன் கார்க்கியை வெகுவாக பாராட்டினார்களாம். 

அதுமட்டுமின்றி இவர் எழுதி சமீபத்தில் வெளியான 'ப்ரேயர் சாங்'கையும் தாங்கள் ரொம்ப ரசித்தோம் என்று தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். 

இது பற்றி தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்த கார்க்கி, கடந்த மாதம் விஜய் சேதுபதி நடித்துள்ள இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்திற்காக நான் எழுதிய 'ப்ரேயர் சாங்க்' பாடல் யூடியுபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது இந்த பாடலுக்கு, ரஹ்மான் சாரிடமும், ஷங்கர் சாரிடமும் இருந்து பாராட்டு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என கூறியிருந்தார்.

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்க!



உடல் அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.


இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.


அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.


இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும் அதைப் பயன்படுத்தினால் எந்த ஒரு பலனும் இருக்காது.


ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.


அதற்கான சில வழிமுறைகளை காண்போம்.


* சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது.
அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால் நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.


* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.


* பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது.


எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


* ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது.

எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.


* தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி தழும்புகளை மறைய வைக்கும்.


அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.


* டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு அதன் இலைகளை தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

டோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’





 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி நேற்றைய போட்டியின் போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அவர் இந்திய அணியில் இடம்பெறும் போது நீண்ட தலைமுடியுடன் இருந்தார். இந்த நீண்ட ஹேர் ஸ்டைல் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பையும் கவர்ந்தது. இந்தியா உலக கோப்பையை வென்ற பிறகு டோனி மொட்டை தலையுடன் காட்சி அளித்தார். தற்போது அவர் வெளிநாட்டு பாணியில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். காதுக்கு மேல் இருபக்கமும் மழித்துவிட்டு நடுவில் மட்டும் கொத்தாக முடி வைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவ்வப்போது ஹெல்மெட்டை கழற்றும்போது இந்த புதிய ஹேர் ஸ்டைல் தென்பட்டது.

 
back to top