|
Monday, September 23, 2013
வியக்க வைக்கும் விருதுநகர்! - சுற்றுலாத்தலங்கள்!
6:48 PM
Unknown
No comments
தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!
6:35 PM
Unknown
No comments
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த கேலக்ஸி நோட் 3 யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.
சாம்சங் கேலக்ஸி நோட் 3யின் விலை ரூ. 49,990 ஆகும். கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 22,990 ஆகும்.
5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல் கொண்ட கேலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிரசாஸர் உடன் வந்துள்ளது.
13 மெகாபிக்சல் கமெரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கேலக்ஸி நோட்3யில் 3ஜிபி ராம் உள்ளது.
கேலக்ஸி நோட்3யில் 4k வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரியுடன் கிடைக்கிறது.
IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0, புளுடூத் 4.0, 3,200mAh பேட்டரி, LTE Cat4 support apart DC-HSPA+ 42Mbps GSM / EDGE ஆகிய சிறப்புகள் இதில் உள்ளன.
கேலக்ஸி நோட்3 லெதர் பினிஷிங்குடன் அழகிய வடிவில் வந்துள்ளது. இதன் கவர்கள் கண்களை கவரும் வகையில் 10 வண்ணங்களில் உள்ளன.
கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச்சில் 320*320 பிக்சல்ஸ் ரெசலூஸன் கொண்ட 1.63 இன்ஞ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.
800MHZ பிராசஸர், 512எம்பி ராம், 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.
கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் 1.9 மெகாபிக்சல் கமெரா மற்றும் 315mAh பேட்டரி கொண்டுள்ளது.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள ரப்பர் வாரை பல வண்ணங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள சிறப்பான விஷியம், சாம்சங் நிறுவனம் 70க்கும் அதிகமான அப்பிளிகேஷன் தயாரிப்பவர்களுடன் இணைந்து நிறைய அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட்வாட்ச்சை உருவாக்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப் ( IE 11 )!
6:27 PM
Unknown
No comments
இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும்.
உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Microsoft Internet Explorer 11 எனும் இப்பதிப்பானது முன்னைய பதிப்புக்களை விடவும் 30 சதவிகிதம் வேகம் கூடியதாகக் காணப்படுகின்றது.
எனினும் இந்த உலாவியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியவாறே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!
6:21 PM
Unknown
No comments
கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. 15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இவற்றில் Core i7 Processor பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 8 GB RAM காணப்படுகின்றது. Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கணனிகளில் சேமிப்பு நினைவகமாக 256 GB தரப்பட்டுள்ளது. இவற்றின் விலையானது 999.99 டொலர்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |