.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 23, 2013

அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?




திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட  வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. 


நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். 



இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. 


பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

இறைவனை வழிபட என்ன வழிகள்?



ஒருவனால் நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. பணிபுரியும் நேரத்திலும் பக்தி உணர்வுடன் செயல்பட்டால் மனம் தூய்மை பெறும். 


உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். குணத்தையோ, குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேர்ந்துவிடும். 


எதையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க, இறைவனை வேண்டுங்கள், அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். 


இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவனாகிறான். உலகம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள், அவன் தனது கருணையை உங்கள் மீது பொழிவான். 

ஆஸ்கார் விருதை இழந்த விஸ்வரூபம்!


உலகின் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருதினை இழந்துள்ளது விஸ்வரூபம். 



அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுக்கான இந்திய படத்தின் தேர்வு நடந்தது. 


இதில் தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், இங்கிலீஸ் விங்கிலீஸ், லஞ்ச் பாக்ஸ், பிருத்விராஜ் நடித்த மலையாள படமான செல்லுலாயிட், கமலின் விஸ்வரூபம் உள்பட 22 படங்கள் போட்டியிட்டது. 


இறுதி சுற்றுக்கு தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், விஸ்வரூபம் ஆகிய மூன்று படங்கள் வந்தது. 


19 பேரைக் கொண்ட தேர்வு குழு 5 மணிநேரம் தீவிரமாக விவாதித்து, ஆலோசித்து தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட் படத்தை தேர்வு செய்து அறிவித்தனர். 


இதனால் கடைசி வரை நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் ஆஸ்கர் போட்டி வாய்ப்பை இழந்தது.

கார்த்திக்கு வில்லனாகும் சூர்யா!


சென்னையில் நடந்து வரும் சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக சூர்யாவை பேட்டி கண்டுள்ளார் லிங்குசாமி.



சிங்கம் 2 வெற்றியை தொடர்ந்து சூர்யா, லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் லிங்குசாமி, சூர்யாவை பேட்டி கண்டுள்ளார். 


லிங்குசாமி: நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா? 


சூர்யா: வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை. எப்படி எஸ்கேப் ஆயிட்டேன் பார்த்தீங்களா. 


லிங்குசாமி: கார்த்தியும், நீங்களும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் யார் வில்லன், யார் ஹீரோ? 


சூர்யா: அப்படி ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கோம். சினிமால நான் ஹீரோவா நடிச்சாலும் வீட்டுல நான் ஒரு சைலண்ட் வில்லன். 

கார்த்தி ரொம்ப நல்ல பையன். அதனால இரண்டு பேரும் நடிக்கிற படத்தில் கார்த்தி தான் ஹீரோ. நான் வில்லன். அதற்காக கிளைமாக்சுல அடியெல்லாம் வாங்க மாட்டேன். 


லிங்குசாமி: ரஜினி, கமல் ரெண்டு பேரும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் பற்றி உங்கள் கருத்து? 

சூர்யா: ரஜினிசாரும், கமல்சாரும் இருக்கிற சினிமால அவுங்களோட நானும் இருக்கிறேங்கறதே ரொம்ப பெருமையான விஷயம். சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே அவுங்கதான் பென்ஞ் மார்க்.


அவர்கள் சாதனைகளை அவுங்களே உடைச்சாத்தான் உண்டு. வேற யாரும் பிரேக் பண்ண முடியாது. தலைக்கு ஏறாத வெற்றி, தளராத உழைப்பு இந்த இரண்டும் தான் அவர்களை உயரத்தில் வச்சிருக்கு. 


லிங்குசாமி: ஜோவை நீங்கள் சந்திக்காமல் இருந்திருந்தால்? 


சூர்யா: வாழ்க்கை இவ்வளவு அழகானதுன்னு தெரியாமலே போயிருக்கும். 


லிங்குசாமி: உங்கள் பார்வையில் இதுவரை வெளிவந்த தமிழ் சினிமாவில் டாப் டென் எது? 


சூர்யா: நான் சொல்றத ஒண்ணு ரெண்டு வரிசைப்படுத்த வேண்டாம். பராசக்தி, ஆயிரத்தில் ஒருவன், முள்ளும் மலரும், .தண்ணீர் தண்ணீர், 16 வயதினிலே, நாயகன், பாட்ஷா, மறுபக்கம், சேது, பருத்தி வீரன். 


லிங்குசாமி: உங்க நேர்மை பிடிச்சிருக்கு பத்துல உங்க படம் ஒன்றுகூட இல்லையே? 


சூர்யா: கொடுக்க முயற்சி பண்றேன். 


லிங்குசாமி: உங்களை பற்றி வந்த விமர்சனங்களில் உங்களுக்கு பிடிச்சது எது? 


சூர்யா: நேருக்கு நேர் படம் ரிலீசானப்போ உதயம் தியேட்டர்ல போயி படம் பார்த்தேன். அப்போ என்னை நிறைய பேருக்கு தெரியாது. படம் முடிந்து வெளியே வந்த சில ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு படம் சூப்பர். நல்லா நடிச்சிருக்கீங்கன்னு கை கொடுத்து பாராட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. 


திடீர்னு ஒரு ரசிகர் வேகமாக வந்து என் இரண்டு கையையும் பிடிச்சு சூப்பரா சொதப்பி இருக்கீங்க. அடுத்த படத்துலயாவது நடிக்க ட்ரை பண்ணுங்க பாஸ்னு சொல்லிட்டுப் போனார். 


நூறுபேர் பாராட்டினதை விட அந்த விமர்சனம் பிடிச்சிருந்தது. அவரு இந்த விழாவுக்குகூட வந்திருக்கலாம். பாஸ் நான் இப்போ நல்லா நடிக்கிறேனா?
 
back to top