
ஒரு கிராமத்தில் ஆழமற்ற குட்டை ஒன்று இருந்தது.
அதில் பல மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.அவற்றில் ஒரு மீன் அதிக புத்திசாலி,மற்றொன்று ஆழ்ந்த சிந்திக்கும் திறன் கொண்டது.மூன்றாவது மக்கு .
ஒருநாள் சில மீனவர்கள் குட்டை நீரை கால்வாய் அமைத்து பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டு பயந்த ஆழ்ந்த சிந்தனை உள்ள மீன் 'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் விரைந்து கால்வாய் வழியே தப்பி வேறு இடம் சென்றிடுவோம்' என்றது.
ஆனால் மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.புத்திசாலி மீன்'சமயம் வரும்போது புத்திசாலித்தனமாக தப்பி விடுவோம்' என்றது.
ஆனால்..ஆழ்ந்த சிந்தனைக் கொண்ட மீன் அந்த இடத்தை விட்டு..கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.
தண்ணீர் வடிந்ததும் மீனவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்தனர்.
மக்கு மீன் மற்ற குட்டையில் இருந்த மீன்களுடன் சேர்ந்து வலையில் சிக்கியது.
புத்திசாலி மீனோ வலையின் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
வலையை எடுத்துச் சென்று குளத்தில் கழுவும் போது புத்திசாலி மீன் வலையிலிருந்து தன் பிடியை விட்டு விரைவில் குளத்தில் நுழைந்து தப்பித்தது.
மக்கு மீனோ வலையில் சிக்கி இறந்தது.
சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.



4:44 PM
Unknown


கிறது. பேரருவிக்கு சற்று மேலே சென்றால் சிற்றருவி. பெயருக்கு ஏற்றாற்போல சிறிய அருவிதான். பேரருவியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அருவி உள்ளது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் இருக்கிறது. சித்ரா பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேனருவி உள்ளது. இங்கு ஏராளமான தேன்கூடுகள் உள்ளதால் தேனருவி என்று பெயர் பெற்றதாக கூறுகின்றனர். தேனருவி அருகே பாலருவி உள்ளது.
ழாவும் குற்றாலத்தில் நடத்தப்படுகிறது. குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) கோவில் உள்ளது. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகர் இந்த குற்றால நாதர்தான்.