.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 25, 2013

பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்!


உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ஃபேர்ஃபேக்ஸ் ஏற்கனவே பிளாக்பெர்ரியின் 10 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை தலா 9 அமெரிக்க டாலர் (ரூ.562) வீதம் ரொக்கமாக கொடுத்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த பங்குகளின் மொத்த விலை 470 கோடி டாலர் (ரூ.29,375 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.





sep 25 - _BLACKBERRY_LOGO
 



கனடாவின் டொரான்டோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ஃபேர்ஃபேக்ஸ். இதன் தலைவர் பிரேம் வாத்சாவை கனடாவின் வாரன் பஃப்பெட் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நலிந்த நிறுவனங்களின் பங்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்து, நிறுவனம் நல்ல நிலைக்கு திரும்பிய பிறகு பங்குகளை விற்று கணிசமான லாபம் பார்ப்பவர் வாரன் பஃப்பெட். 



அதே பாணியில் பிரேம் வாத்சா பிளாக்பெர்ரியை வாங்குகிறார். நவம்பர் 4க்குள் நிர்வாகம் கைமாற வேண்டும். அதற்கிடையில் வேறு யாராவது கூடுதல் விலை கொடுக்க முன்வந்தால் பிளாக்பெர்ரி நிர்வாகம் தாராளமாக ஒப்பந்தம் செய்யலாம். அப்படி விற்கும்போது ஒரு பங்குக்கு 30 சென்ட் வீதம் ஃபேர்ஃபேக்ஸ் கம்பெனிக்கு பிளாக்பெர்ரி கொடுக்க வேண்டும். ராயல்டி, கமிஷன் மாதிரி. இது ஒரு பங்குக்கு அரை டாலர் வரை உயரலாம். 



பிளாக்பெர்ரி நிறுவனம் 1984ல் தொடங்கப்பட்டது. எனினும், 2003ல்தான் முதலாவது ஸ்மார்ட்ஃபோனை விற்பனைக்கு கொண்டு வந்தது. பிசினஸ் ஃபோன் என பெயர் பெற்ற பிளாக்பெர்ரி சமூகத்தின் உயர் மட்ட பிரமுகர்களின் பிரிக்க முடியாத தகவல் தொடர்பு கருவியானது. தலைவர்கள், பிரதமர்கள், மன்னர்கள் பயன்படுத்தும் மொபைல்போனாக பிரபலமானது. அதிபர் ஒபாமா அதன் தீவிர ரசிகர். 


எனினும் ஆப்பிள், சாம்சங் போன்களின் வருகையை தொடர்ந்து பிளாக்பெர்ரியின் மவுசு குறைய தொடங்கியது. சமீப காலமாக கம்பெனி ரொம்பவும் தள்ளாடியது. பிரேம் அதன் பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கியது அதன் பிறகுதான். ஐதராபாத் நகரில் 1950ல் பிறந்த பிரேம், அங்குள்ள பப்ளிக் பள்ளியில் படித்து ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1985ல் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 


Fairfax’s BlackBerry deal seeks to forgo Canada takeover review

*********************************** 

The investor that has struck a tentative $4.7 billion deal to take smartphone maker BlackBerry Ltd private is aggressively touting his group’s Canadian status to avoid the government reviews of foreign takeovers that have plagued recent attempts to buy Canadian companies.

நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!


நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். எனக்கு மேடையில் நடமாடுவது என்றால் பயம். ஒரு சமயம் நான் இங்கு மேடை ஏறிய போது கரண்ட் கட் ஆகி லைட் அணைந்து விட்டது. அது நான் வேண்டுமென்று செய்தது போல் பேசினார்கள். இன்று லைட் அணைந்தால் நான் பொறுப்பில்லை.



இந்த லயோலா பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்புகளுக்கு கட் அடித்தேன். அதன் பிறகு கல்லூரியே என்னை மாற்றி விட்டது. இந்தக் கல்லூரியில் வெறும் பாடத்திட்டம் மட்டும் சொல்லி தருவதில்லை. வாழ்க்கையையும் சொல்லித் தருவார்கள். இங்கு வந்து விட்டால் நாம் மாறிவிடுவோம். அப்படி ஒரு தூண்டுதலும் ஊக்கமும் கிடைத்து விடும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு சோர்வோ சலிப்போ ஏற்படும் போது இந்தக் கல்லூரிக்குள் வந்து அங்குமிங்கும் சுற்றுவேன். சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். யாருக்கும் தெரியாது அப்படி இங்கு வந்து விட்டு போனாலே போதும் எனக்குள் அப்படி ஒரு சக்தியும் உற்சாகமும் வந்து விடும். அப்படி ஒரு தூண்டுதலை இங்குள்ள சூழ்நிலை கொடுத்து விடும்.



ஏதோ வந்தோம் படித்தோம் என்று இல்லாமல் நாம் யார் நம் லட்சியம் எது நம் பாதை பயணம் என்ன என்பது இங்கு வந்ததும் தெளிவாகப் புரிந்து விடும். இங்கு கற்றுக் கொண்ட சின்ன சின்ன விஷயங்களை வைத்துதான் வாழ்க்கையையே ஓட்டுகிறேன்.இங்கு வந்த பிறகு தான் நான் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்குனர் ஆவது என்று முடிவெடுத்து விட்டேன். இங்கு படித்த போது நூலகத்திற்கு ஓரிரு முறைதான் போயிருப்பேன். இன்று ஒரு விருந்தினராக உள்ளே நுழைந்தது பெருமையாக இருக்கிறது.”என்று விஷால் பேசினார்.




ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு!


ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு வகை செய்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது.


sep 25 -aadhar

 



இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக நந்தன்நிலகேணியை தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் கோடியில் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.அரசின் சேவைகள், மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்காக அதற்கான மையங்களில் மக்கள்கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசின் மானியங்கள். சலுகைகள், சேவைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது என நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டனர். இது மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணைய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஏற்கனவே கடந்த 2010–ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா, 2010 டிசம்பரில் மேல்–சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவின் (நிதி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா, டெல்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஆதார் அட்டை தொடர்பாக நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–வரவுள்ள பாராளுமன்ற குளிர்காலக்கூட்ட தொடரின்போது இந்திய தேசிய அடையாள ஆணைய மசோதா–2010 (ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணைய மசோதா) கொண்டு வருவோம். சில திருத்தங்கள் செய்வதற்காக இந்த மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழுவால் திட்டக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் விரைவில் அதை மத்திய மந்திரிசபை கூட்டத்தில் வைப்போம். குளிர்காலக்கூட்ட தொடரின்போது அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.


ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.ஆதார் அடையாள அட்டை ஒருவரின் அடையாளத்தை காட்டுகிறது. உறைவிட சான்றாக பயன்படுகிறது. ஆதார அடையாள அட்டை பெறுவது தாமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்றுதான். கட்டாயம் அல்ல”என்று அவர் கூறினார்.


Govt plans to give aadhaar legal weight

*********************************** 

A day after questions were raised in the Supreme Court over the legality of the Aadhaar project, the government on Tuesday fast-tracked a draft bill to give legal backing to the Unique Identification Authority of India (UIDAI) that issues the 12-digit number.The court had said no person should be denied welfare benefits or services for not possessing the unique identification number in what is being seen as set back to the UPA’s showpiece direct transfer cash scheme in an election year.

ஹன்சிகாவோடு டூயட் பாடும் சிவகார்த்திகேயன்!


மான் கராத்தே படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஹன்சிகா- சிவகார்த்திகேயன் ஜோடி. 

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார்.

மேலும் நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர்.
இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
 
back to top