.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 25, 2013

அமேசனின் புதிய இயங்குதளத்துடன் அறிமுகமாகியது Kindle Fire HDX டேப்லட் - Amazon Kindle Fire HDX new!





 முதற்தர ஒன்லைன் வியாபார சேவையை வழங்கிவரும் அமேசன் நிறுவனம் தனது தயாரிப்பில் டேப்லட்டினை அறிமுகப்படுத்தியிருந்தமை அறிந்ததே.



இந்நிலையில் தற்போது Fire OS 3.0 எனும் புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுதுடன் அதனை அடிப்படையாகக் கொண்ட Kindle Fire HDX எனும் டேப்லட்களையும் அறிமுகம் செய்துள்ளது. 



7 அங்குலம் மற்றும் 8.9 அங்குல அளவுடைய தொடுதிரையுடன் கூடியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டேப்லட்களில் 2.2GHz Qualcomm Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியன காணப்படுகின்றன. 



இவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB மற்றும் 64GB ஆகிய கொள்ளளவுகளை உடைய பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 



 




 


7-வது ஊதியக்குழு நியமனம் : பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு..!




 மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இடையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி மட்டும் விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தப்படுவது வழக்கம். இதுவரை 6 சம்பள கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக, 6வது சம்பள கமிஷன் கடந்த 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது.


இது தனது அறிக்கையை கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசிடம் கொடுத்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதங்கள் உயர்த்தி வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு நிலுவை தொகை வழங்கப்பட்டது இதை தொடர்ந்து, மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு 6வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பள விகிதங்களை மாற்றி அமைத்தன.



6வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில், 7வது சம்பள கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஊழியர்கள் சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.



மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஜனவரி 1ம் தேதி முதல் 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Seventh Pay comission aoopinted by Prime minister Manmohan singh
 

குரங்கும்...இரண்டு பூனைகளும்- (நீதிக்கதை)



 
 
இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன....ஆனால் அவைகளுக்குள் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன.


ஒரு நாள் அப்பூனைகளுக்கு அப்பம் கிடைத்தது.அவை இரண்டும் சாப்பிட நினைத்த போது ..அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் சண்டை வந்தது.


பிறகு இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணின .அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.


குரங்கிடம் அப்பத்தை சமமாக பிரித்துத் தரச்சொல்ல குரங்கும் சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்தது.


அப்பத்தை இரண்டாக்கி தராசின் ஒவ்வொரு தட்டிலும் அப்பத்துண்டை வைத்தது குரங்கு.தராசின் ஒரு தட்டு சற்று கீழே செல்ல,குரங்கு அந்த தட்டில் உள்ள


அப்பத்தை ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது .இப்போது மற்றொரு தட்டு கீழே தாழ்ந்தது.அந்த தட்டில் இருந்த அப்பத்தை சிறிது


கடித்து விட்டு மீண்டூம் போட்டது..


இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ...குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை சாப்பிட்டது.


அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் " இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்" என மீதமுள்ளதை கேட்டன


ஆனால் குரங்கோ,மீதமிருந்த அப்பம் 'நான் இது வரை செய்த வேலைக்கு கூலி' என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.


பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்...அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம்.ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.


நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும்,ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும்.
 

ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படத்தின் தலைப்பானது!



ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது.
ஒரு சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி போன்ற பிரபல நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பைதான் அப்படியே புதிய படத்திற்கும் தலைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது என்று சொல்லலாம். 


ஆமாங்க, அதற்கு பதிலாக முந்தைய படங்களில் வரும் டயலாக்குகளை தேடிப் பிடித்து அதனை புதிய படத்திற்கு தலைப்பாக சூட்டி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் டிரன்ட். அந்த வகையில் வருத்தப்டாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது. அதாவது, பாபா படத்தில் ரஜினி பேசிய “கதம் கதம்” (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக்தான் ஒரு படத்துக்கு தலைப்பாகி இருக்கிறது. 


இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான தூயவனின் மகன் பாபு.தூயவன் இயக்குகிறார். இதில் நந்தா, ஒளிப்பதிவாளர் நடராஜ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஷாரிகா நாயகி. தாஜ்நூர் இசையமைக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான் இயக்கும் முதல் படத்துக்கு அவருடைய பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வச்சிருக்கேன் என்கிறார் இயக்குனர்.
 
 
back to top