.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 25, 2013

மரத்தின் அவசியம்..(நீதிக்கதை)





ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.

அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.

மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.

'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது.

எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்' என்றான் அவன்.

உடனே மரம்..'என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்' என்றது.

'சரி' என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் சென்றான்.

பின் அவன் மரத்தையே மறந்துவிட்டான். அவன் பெரிய மனிதனாக வளர்ந்தான் .பின் ஒருநாள் மரத்திடம் வந்தான்,

மரம் அவனை விளையாட அழைத்தது.

'எனக்கு என் குடும்பத்தை பார்க்கவே நேரமில்லை.எனக்கு வீடு ஒன்று வேண்டும்.அதற்கு உன்னால் உதவ முடியுமா' என்றான்'.

மரம் தன் கிளைகளை உடைத்து இவற்றை வீட்டிற்கு உபயோகப்படுத்திக்கொள் என்றது.

அவனும் பல மரக்கிளைகளை எடுத்து சென்றான்.

மீண்டும் பல நாள் அவன் மரத்திடம் வரவில்லை.வயது முதிர்ந்து கிழவனாக ஒரு நாள் மரத்திடம் வந்தான்.

மகிழ்ந்த மரம் 'இப்போது முன் போல் என்னிடம் விளையாடு' என்றது.

எனக்கு வயதாகிவிட்டது .என்னால் விளையாட முடியாது.ஆனால் எனக்கு உட்கார்ந்து இளைப்பாற ஒரு சாய்வு நாற்காலி வேண்டும் என்றான்.

மரமும் தன் கிளைகளில் ஒன்றை அவனிடம் கொடுத்து நாற்காலி செய்து கொள்ளச் சொன்னது.

சிறிது காலம் கழித்து அவன் மீண்டும் வந்தான். இப்போது மரம் 'எனக்கும் வயதாகி விட்டது.என்னிடம் இப்போது பழங்கள் கூடக் கிடையாது..' என்றது.

'என் வாழ் நாள் முழுவதும் உதவினாய் நீ...ஆனால் ,உன்னைப் பற்றி இதுவரை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே ''என்று வருந்தினான் அவன்.

மரமோ 'அதற்காக வருத்தப்படாதே .யாரோ நட்ட செடியான நான் வளர்ந்து உனக்கு பலனளித்தேன். நீ ஒரு செடியை நடு அது மரமாகி வேறு யாருக்கேனும்

பலனளிக்கும். எங்கள் வம்சமும் வளரும்' என்றது.

நாமும் நம்மால் முடிந்தால் நம் வீடுகளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

மரத்தினால் சுத்தமான காற்று கிடைக்கிறது. மழை வர மரங்களும் காரணமாக அமைகின்றன் என்பதை நாம் உணர வேண்டும்.

200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper



திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று அறிவியல் விழப்புணர்வு கூட்டம் நடந்தது.  மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில், விஞ்ஞானிகள் பங்கேற்று வால்நட்சத்திரம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி கூறியதாவது:



ஐசான் என்ற புதிய வால்நட்சத்திரம் வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ள னர். மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம், 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும்.



தொடர்ந்து, வால்நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும்போது சூரியனை உரசிச்செல்வது போல் தோன்றும். அப்போது, வால்நட்சத்திரம் சிதறக்கூடிய வாய்ப்பு உள்ளது. சிதறாமல், நுழைந்து விட்டால், இந்த நு£ற்றாண்டில் பிரகாசமாக தெரியும் வால் நட்சத்திரம் இதுவாகத்தான் இருக்கும்.

இந்திய சந்தையில் அமேசான் Kindle Fire HD 7 விலை குறைவு!






இந்திய சந்தையில் 7 அங்குல variant கொண்ட அமேசான் Kindle Fire HD 7 டேப்லெட் விலை குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.11,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999 ஆகும்.


அமேசான் Kindle Fire HD 7 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்பொழுது 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.18,999 ஆக இருந்தது. இந்த டேப்லெட் Amazon.in கிடைக்கின்றன.



அமேசான் Kindle Fire HD 7 அம்சங்கள்:


1280x800 பிக்சல் காட்சி தீர்மானம்,
1.2GHz dual-core புரோஸசர் மூலம் இயக்கப்படுகின்றது,
இமேஜினேஷன் SGX540 GPU,
395 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது,
11 மணி வரை தாங்கக்கூடிய 4400mAh பேட்டரி உள்ளது,
1GB ரேம்,
dual-band Wi-Fi,
டால்பி ஆடியோ கொண்ட டூயல் ஸ்டீரீயோ ஸ்பீக்கர்கள்,
முன் எதிர்கொள்ளும் HD கேமரா,
ப்ளூடூத் 3.0 உள்ளது,
ஆண்ட்ராய்டு 4.0.3 இயங்கும். 

செயலில் கவனம்..... (நீதிக்கதை)





 
ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தாள்.


அவள் தன்னிடமிருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.


ஒருநாள் அப்படிச் செல்லும் போது..இன்று பாலை விற்று வரும் பணத்தில்..சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன்.அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்..அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்..அது பால் கறக்கையில் சண்டித்தனம் பண்ணினால் அதை தலையில் பால் எடுத்துப் போகும் குடத்தால் இப்படி வீசுவேன்....என தன்னை மறந்து..தலையில் இருந்த குடத்தை எடுத்து வேகமாக வீச, அதில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது.குடமும் உடைந்தது.


அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள். 


எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க வேண்டும்.இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும். 
 
 
 
back to top