மான் கராத்தே படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஹன்சிகா- சிவகார்த்திகேயன் ஜோடி. | |
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். மேலும் நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர். இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம். |
Wednesday, September 25, 2013
ஹன்சிகாவோடு டூயட் பாடும் சிவகார்த்திகேயன்!
5:40 PM
Unknown
No comments
மரத்தின் அவசியம்..(நீதிக்கதை)
8:10 AM
Unknown
2 comments
ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.
அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.
மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.
'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது.
எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்' என்றான் அவன்.
உடனே மரம்..'என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்' என்றது.
'சரி' என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் சென்றான்.
பின் அவன் மரத்தையே மறந்துவிட்டான். அவன் பெரிய மனிதனாக வளர்ந்தான் .பின் ஒருநாள் மரத்திடம் வந்தான்,
மரம் அவனை விளையாட அழைத்தது.
'எனக்கு என் குடும்பத்தை பார்க்கவே நேரமில்லை.எனக்கு வீடு ஒன்று வேண்டும்.அதற்கு உன்னால் உதவ முடியுமா' என்றான்'.
மரம் தன் கிளைகளை உடைத்து இவற்றை வீட்டிற்கு உபயோகப்படுத்திக்கொள் என்றது.
அவனும் பல மரக்கிளைகளை எடுத்து சென்றான்.
மீண்டும் பல நாள் அவன் மரத்திடம் வரவில்லை.வயது முதிர்ந்து கிழவனாக ஒரு நாள் மரத்திடம் வந்தான்.
மகிழ்ந்த மரம் 'இப்போது முன் போல் என்னிடம் விளையாடு' என்றது.
எனக்கு வயதாகிவிட்டது .என்னால் விளையாட முடியாது.ஆனால் எனக்கு உட்கார்ந்து இளைப்பாற ஒரு சாய்வு நாற்காலி வேண்டும் என்றான்.
மரமும் தன் கிளைகளில் ஒன்றை அவனிடம் கொடுத்து நாற்காலி செய்து கொள்ளச் சொன்னது.
சிறிது காலம் கழித்து அவன் மீண்டும் வந்தான். இப்போது மரம் 'எனக்கும் வயதாகி விட்டது.என்னிடம் இப்போது பழங்கள் கூடக் கிடையாது..' என்றது.
'என் வாழ் நாள் முழுவதும் உதவினாய் நீ...ஆனால் ,உன்னைப் பற்றி இதுவரை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே ''என்று வருந்தினான் அவன்.
மரமோ 'அதற்காக வருத்தப்படாதே .யாரோ நட்ட செடியான நான் வளர்ந்து உனக்கு பலனளித்தேன். நீ ஒரு செடியை நடு அது மரமாகி வேறு யாருக்கேனும்
பலனளிக்கும். எங்கள் வம்சமும் வளரும்' என்றது.
நாமும் நம்மால் முடிந்தால் நம் வீடுகளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.
மரத்தினால் சுத்தமான காற்று கிடைக்கிறது. மழை வர மரங்களும் காரணமாக அமைகின்றன் என்பதை நாம் உணர வேண்டும்.
200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்!
8:04 AM
Unknown
No comments
திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று அறிவியல் விழப்புணர்வு கூட்டம் நடந்தது. மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில், விஞ்ஞானிகள் பங்கேற்று வால்நட்சத்திரம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி கூறியதாவது:
ஐசான் என்ற புதிய வால்நட்சத்திரம் வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ள னர். மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம், 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும்.
தொடர்ந்து, வால்நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும்போது சூரியனை உரசிச்செல்வது போல் தோன்றும். அப்போது, வால்நட்சத்திரம் சிதறக்கூடிய வாய்ப்பு உள்ளது. சிதறாமல், நுழைந்து விட்டால், இந்த நு£ற்றாண்டில் பிரகாசமாக தெரியும் வால் நட்சத்திரம் இதுவாகத்தான் இருக்கும்.
இந்திய சந்தையில் அமேசான் Kindle Fire HD 7 விலை குறைவு!
7:44 AM
Unknown
No comments
இந்திய சந்தையில் 7 அங்குல variant கொண்ட அமேசான் Kindle Fire HD 7 டேப்லெட் விலை குறைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.11,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999 ஆகும்.
அமேசான் Kindle Fire HD 7 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்பொழுது 16GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.15,999, அதேபோல் 32GB சேமிப்பு variant டேப்லெட் விலை ரூ.18,999 ஆக இருந்தது. இந்த டேப்லெட் Amazon.in கிடைக்கின்றன.
அமேசான் Kindle Fire HD 7 அம்சங்கள்:
1280x800 பிக்சல் காட்சி தீர்மானம்,
1.2GHz dual-core புரோஸசர் மூலம் இயக்கப்படுகின்றது,
இமேஜினேஷன் SGX540 GPU,
395 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது,
11 மணி வரை தாங்கக்கூடிய 4400mAh பேட்டரி உள்ளது,
1GB ரேம்,
dual-band Wi-Fi,
டால்பி ஆடியோ கொண்ட டூயல் ஸ்டீரீயோ ஸ்பீக்கர்கள்,
முன் எதிர்கொள்ளும் HD கேமரா,
ப்ளூடூத் 3.0 உள்ளது,
ஆண்ட்ராய்டு 4.0.3 இயங்கும்.