.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 26, 2013

இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?




 விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.   அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன. விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது  என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.


கருங்குழி பற்றி முதன்  முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.   இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது.   இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது. இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி  என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது  என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது  என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது.   சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.  



 இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து  குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை. ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு.  இந்த கண்டுபிடிப்பு மூலம்,  கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார்.



அதென்ன கருங்குழி?


* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி. 


* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள்.


* இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.
 

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது.
 

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
 

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும்.
 

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.
 

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )




ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது.


ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது.


குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது.


முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள் இவ்வளவு இனிக்கிறதே..இதே பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த குரங்கின் குடல் எவ்வளவு இனிக்கும்! அது எனக்கு வேண்டும்." என்றது.


முதலையும் குரங்கிடம் வந்து நயவஞ்சகமாக..'குரங்கே!..நாவல் பழம் தந்த உனக்கு என் மனைவி விருந்திட விரும்புகிறாள்..வா.." என்றதும்.குரங்கும் மகிழ்ந்து..முதலையின் முதுகில் உட்கார்ந்து ஆற்றில்..முதலையின் இருப்பிடம் செல்லத் தொடங்கியது.
 

பாதி தூரம் வந்ததும்..இனி குரங்கால் நீரில் தனித்து ஓட முடியாது என முதலை..'மட குரங்கே!..உண்மையில் விருந்து உனக்கல்ல. என் மனைவிக்குத் தான்.அவள்தான் உன் குடலை சாப்பிட விரும்புகிறாள்" என்றது.


சற்று நேரம் யோசித்த குரங்கு..'முதலையே அதை முதலிலேயே சொல்லக் கூடாதா..நான் என் குடலை கழட்டி மரத்தில் அல்லவா வைத்திருக்கிறேன்..திரும்ப மரத்திற்கு என்னைக் கொண்டு போ. குடலை எடுத்து மாட்டிக்கொண்டு வருகிறேன்..' என்றது.


முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது


வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..'முட்டாள் முதலையே. குடலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.


முதலையும் ஏமாந்து திரும்பியது.


நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.


ஆபத்துக் காலத்தில் நம் மூளையை உபயோகித்து..ஆபத்திலிருந்து விடுபட வேண்டும்.
 

Wednesday, September 25, 2013

முகத்தை பொலிவாக்கும் கற்றாலை ஜெல்!

Aloe vera gel for face bright


அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல்  பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து  தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை..


கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதை அழகுக்கு பயன்படுத்தும் க்ரீமாகவும், முகம் கழுகும் போது உபயோகிக்கும் பேஸ் வாஸாகவும் பயன்படுத்தலாம்.



அலோவேராவின் நன்மைகள்



இது தோலுக்கு ஈரப்பதம் ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்துகின்றனர். கற்றாலை ஜெல்லில் ஹைட்ரேட்டுகள்  கொண்டுள்ளதால்  சருமத்தை இளமையாக்கி, உங்களின் சருமத்தை எந்த நேரங்களில் பார்த்தாலும் புதியதாக தேற்றமளிக்கும் தனமையை கொண்டுள்ளது. கற்றாலையில்  எதிர்ப்பு நுண்ணுயிர் பண்புகளை கொண்டுள்ளதால் முகத்தில் தோன்றும் ஆக்னோ, பருக்கள் வராமல் தடுக்கும். இதில் இயற்கையாக நிகழ்வதற்கு  எதிராக எதிர்ப்பு ஆக்சிஜனேற்றத்தை கொண்டுள்ளதால் வயது மூப்பிலிருந்து சருமத்தை தக்கவைத்துக்கொள்கிறது.




அலோ வேரா உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஏற்படக்கூடிய வலிகளையும், வீக்கங்களையும் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. இது  மருத்துவரீதியாக எரிகாயங்கள், பூச்சி கடி, எக்ஸிமா, வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது. வீட்டிலேயே கற்றாலை  பயன்படுத்தி ஜெல் தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து முகத்திறக்கு அவ்வப்போது பயன்படுத்தலாம். 


முக அழகிற்கு சில டிப்ஸ்!

Stark, austere beauty facial Tips



முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறுடன் கடலை மாவு சேர்த்து தடவலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள்   இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை  காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால்,  முகத்தில் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கலாம்.



முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல்   பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ  வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.



தினமும் இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து  முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும்  மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.



முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும் தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி  சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

 
back to top