உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ஃபேர்ஃபேக்ஸ் ஏற்கனவே பிளாக்பெர்ரியின் 10 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை தலா 9 அமெரிக்க டாலர் (ரூ.562) வீதம் ரொக்கமாக கொடுத்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த பங்குகளின் மொத்த விலை 470 கோடி டாலர் (ரூ.29,375 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் டொரான்டோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ஃபேர்ஃபேக்ஸ். இதன் தலைவர் பிரேம்...
Wednesday, September 25, 2013
நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!
6:25 PM
Unknown
No comments
நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். எனக்கு மேடையில் நடமாடுவது என்றால் பயம். ஒரு சமயம் நான் இங்கு மேடை ஏறிய போது கரண்ட் கட் ஆகி லைட் அணைந்து விட்டது. அது நான் வேண்டுமென்று செய்தது போல் பேசினார்கள்....
ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு!
5:50 PM
Unknown
No comments
ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு வகை செய்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக நந்தன்நிலகேணியை தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் கோடியில் ஆதார் அடையாள அட்டை வழங்கும்...
ஹன்சிகாவோடு டூயட் பாடும் சிவகார்த்திகேயன்!
5:40 PM
Unknown
No comments
மான் கராத்தே படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார்கள் ஹன்சிகா- சிவகார்த்திகேயன் ஜோடி. எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார்.மேலும் நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர்.ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர். இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.இதனைத் தொடர்ந்து...