.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 25, 2013

குரங்கும்...இரண்டு பூனைகளும்- (நீதிக்கதை)



 
 
இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன....ஆனால் அவைகளுக்குள் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன.


ஒரு நாள் அப்பூனைகளுக்கு அப்பம் கிடைத்தது.அவை இரண்டும் சாப்பிட நினைத்த போது ..அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் சண்டை வந்தது.


பிறகு இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணின .அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.


குரங்கிடம் அப்பத்தை சமமாக பிரித்துத் தரச்சொல்ல குரங்கும் சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்தது.


அப்பத்தை இரண்டாக்கி தராசின் ஒவ்வொரு தட்டிலும் அப்பத்துண்டை வைத்தது குரங்கு.தராசின் ஒரு தட்டு சற்று கீழே செல்ல,குரங்கு அந்த தட்டில் உள்ள


அப்பத்தை ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது .இப்போது மற்றொரு தட்டு கீழே தாழ்ந்தது.அந்த தட்டில் இருந்த அப்பத்தை சிறிது


கடித்து விட்டு மீண்டூம் போட்டது..


இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ...குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை சாப்பிட்டது.


அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் " இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்" என மீதமுள்ளதை கேட்டன


ஆனால் குரங்கோ,மீதமிருந்த அப்பம் 'நான் இது வரை செய்த வேலைக்கு கூலி' என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.


பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்...அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம்.ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.


நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும்,ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும்.
 

ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படத்தின் தலைப்பானது!



ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது.
ஒரு சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி போன்ற பிரபல நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பைதான் அப்படியே புதிய படத்திற்கும் தலைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது என்று சொல்லலாம். 


ஆமாங்க, அதற்கு பதிலாக முந்தைய படங்களில் வரும் டயலாக்குகளை தேடிப் பிடித்து அதனை புதிய படத்திற்கு தலைப்பாக சூட்டி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் டிரன்ட். அந்த வகையில் வருத்தப்டாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது. அதாவது, பாபா படத்தில் ரஜினி பேசிய “கதம் கதம்” (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக்தான் ஒரு படத்துக்கு தலைப்பாகி இருக்கிறது. 


இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான தூயவனின் மகன் பாபு.தூயவன் இயக்குகிறார். இதில் நந்தா, ஒளிப்பதிவாளர் நடராஜ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஷாரிகா நாயகி. தாஜ்நூர் இசையமைக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான் இயக்கும் முதல் படத்துக்கு அவருடைய பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வச்சிருக்கேன் என்கிறார் இயக்குனர்.
 

பிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்!


உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ஃபேர்ஃபேக்ஸ் ஏற்கனவே பிளாக்பெர்ரியின் 10 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை தலா 9 அமெரிக்க டாலர் (ரூ.562) வீதம் ரொக்கமாக கொடுத்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த பங்குகளின் மொத்த விலை 470 கோடி டாலர் (ரூ.29,375 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.





sep 25 - _BLACKBERRY_LOGO
 



கனடாவின் டொரான்டோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ஃபேர்ஃபேக்ஸ். இதன் தலைவர் பிரேம் வாத்சாவை கனடாவின் வாரன் பஃப்பெட் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நலிந்த நிறுவனங்களின் பங்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்து, நிறுவனம் நல்ல நிலைக்கு திரும்பிய பிறகு பங்குகளை விற்று கணிசமான லாபம் பார்ப்பவர் வாரன் பஃப்பெட். 



அதே பாணியில் பிரேம் வாத்சா பிளாக்பெர்ரியை வாங்குகிறார். நவம்பர் 4க்குள் நிர்வாகம் கைமாற வேண்டும். அதற்கிடையில் வேறு யாராவது கூடுதல் விலை கொடுக்க முன்வந்தால் பிளாக்பெர்ரி நிர்வாகம் தாராளமாக ஒப்பந்தம் செய்யலாம். அப்படி விற்கும்போது ஒரு பங்குக்கு 30 சென்ட் வீதம் ஃபேர்ஃபேக்ஸ் கம்பெனிக்கு பிளாக்பெர்ரி கொடுக்க வேண்டும். ராயல்டி, கமிஷன் மாதிரி. இது ஒரு பங்குக்கு அரை டாலர் வரை உயரலாம். 



பிளாக்பெர்ரி நிறுவனம் 1984ல் தொடங்கப்பட்டது. எனினும், 2003ல்தான் முதலாவது ஸ்மார்ட்ஃபோனை விற்பனைக்கு கொண்டு வந்தது. பிசினஸ் ஃபோன் என பெயர் பெற்ற பிளாக்பெர்ரி சமூகத்தின் உயர் மட்ட பிரமுகர்களின் பிரிக்க முடியாத தகவல் தொடர்பு கருவியானது. தலைவர்கள், பிரதமர்கள், மன்னர்கள் பயன்படுத்தும் மொபைல்போனாக பிரபலமானது. அதிபர் ஒபாமா அதன் தீவிர ரசிகர். 


எனினும் ஆப்பிள், சாம்சங் போன்களின் வருகையை தொடர்ந்து பிளாக்பெர்ரியின் மவுசு குறைய தொடங்கியது. சமீப காலமாக கம்பெனி ரொம்பவும் தள்ளாடியது. பிரேம் அதன் பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கியது அதன் பிறகுதான். ஐதராபாத் நகரில் 1950ல் பிறந்த பிரேம், அங்குள்ள பப்ளிக் பள்ளியில் படித்து ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1985ல் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 


Fairfax’s BlackBerry deal seeks to forgo Canada takeover review

*********************************** 

The investor that has struck a tentative $4.7 billion deal to take smartphone maker BlackBerry Ltd private is aggressively touting his group’s Canadian status to avoid the government reviews of foreign takeovers that have plagued recent attempts to buy Canadian companies.

நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்!


நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். எனக்கு மேடையில் நடமாடுவது என்றால் பயம். ஒரு சமயம் நான் இங்கு மேடை ஏறிய போது கரண்ட் கட் ஆகி லைட் அணைந்து விட்டது. அது நான் வேண்டுமென்று செய்தது போல் பேசினார்கள். இன்று லைட் அணைந்தால் நான் பொறுப்பில்லை.



இந்த லயோலா பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்புகளுக்கு கட் அடித்தேன். அதன் பிறகு கல்லூரியே என்னை மாற்றி விட்டது. இந்தக் கல்லூரியில் வெறும் பாடத்திட்டம் மட்டும் சொல்லி தருவதில்லை. வாழ்க்கையையும் சொல்லித் தருவார்கள். இங்கு வந்து விட்டால் நாம் மாறிவிடுவோம். அப்படி ஒரு தூண்டுதலும் ஊக்கமும் கிடைத்து விடும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு சோர்வோ சலிப்போ ஏற்படும் போது இந்தக் கல்லூரிக்குள் வந்து அங்குமிங்கும் சுற்றுவேன். சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். யாருக்கும் தெரியாது அப்படி இங்கு வந்து விட்டு போனாலே போதும் எனக்குள் அப்படி ஒரு சக்தியும் உற்சாகமும் வந்து விடும். அப்படி ஒரு தூண்டுதலை இங்குள்ள சூழ்நிலை கொடுத்து விடும்.



ஏதோ வந்தோம் படித்தோம் என்று இல்லாமல் நாம் யார் நம் லட்சியம் எது நம் பாதை பயணம் என்ன என்பது இங்கு வந்ததும் தெளிவாகப் புரிந்து விடும். இங்கு கற்றுக் கொண்ட சின்ன சின்ன விஷயங்களை வைத்துதான் வாழ்க்கையையே ஓட்டுகிறேன்.இங்கு வந்த பிறகு தான் நான் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்குனர் ஆவது என்று முடிவெடுத்து விட்டேன். இங்கு படித்த போது நூலகத்திற்கு ஓரிரு முறைதான் போயிருப்பேன். இன்று ஒரு விருந்தினராக உள்ளே நுழைந்தது பெருமையாக இருக்கிறது.”என்று விஷால் பேசினார்.




 
back to top