..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
8:16 PM
Unknown
No comments
தனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் ‘நையாண்டி’. ‘களவாணி’ சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.’சொட்டவாளக்குட்டி’ என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. பின்பு ‘நையாண்டி’ என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்த தேதிக்கு முன்னதாகவே தனது நையாண்டி படத்தை வெளியிடும் ஐடியாவில் இருக்கிறாராம் தனுஷ். இதனை மறை முகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படம் வெளி வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களே நீங்கள் எதிர்பார்க்கும் தினத்திற்க்கு முன்னதாகவே படம் வெளியாகலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் தனுஷ்.
7:14 PM
Unknown
No comments
என்னென்ன தேவை?
மிகவும் கனியாத வாழைப்பழங்கள்-2
வேர்க்கடலை வெண்ணெய்-1 1/2மேஜைக்கரண்டி
கோகோ தூள்-3/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ்-3 சொட்டு
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு
எப்படி செய்வது?
ஒரு ஜாடியில் வாழைப்பழம், வெண்ணெய், கோகோதூள், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடிக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலகரித்து பரிமாறவும்.
6:28 PM
Unknown
No comments
காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.
பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள். அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டு பின்னாளில் காலிங்கராயன் என மருவியதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும்.
எனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
6:10 PM
Unknown
No comments
நோக்கியா நிறுவனம் அதன் புதிய நோக்கியா Lumia 1020 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா Lumia 1020 அக்டோபர் 11-ம் தேதி முதல் நாடு முழுவதும் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும். நோக்கியா Lumia 1020 ஒரு 4.5-அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
பிளாக் வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற மூன்று வண்ணங்களில் புதிய Lumia 1020 கிடைக்கும். மேலும், இரண்டு அக்சசரி பாகங்கள் கொண்ட Lumia 1020 இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா கேமரா கிரிப் ரூ.7,500 மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஷெல் ரூ.3,200 விலையில் கிடைக்கும்.
நோக்கியா Lumia 1020 அம்சங்கள்:
768x1280 தீர்மானம் கொண்ட 4.5 அங்குல AMOLED ClearBlack டிஸ்ப்ளே
1.5GHz dual-core குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 processor
2GB RAM
உள்ளக சேமிப்பு 32GB
41-மெகாபிக்சல் PureView பின்புற கேமரா
1.2-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் முன் கேமரா
விண்டோஸ் போன் 8
2,000 Mah பேட்டரிNokia introduced the new Nokia Lumia 1020 smartphone