..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
12:03 PM
Unknown
No comments
வங்கி கிரடிட் கார்டுகளில் ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.அத்துடன் இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்ட் திட்டத்தில் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருவதால் அவற்றின் பாதுகாப்பு முறைகளை ஜூலை மாதத்திற்குள் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.பணம் எடுக்கும் இயந்திரங்களில் மின்னணு சிப் மற்றும் கிரெடிட் கார்ட் உடையவர் பணம் எடுக்கும்போது அவரை அங்கீகரிக்கும்விதமாக அவர் பதிவு செய்யவேண்டிய ரகசியக் குறீயீட்டு எண் போன்றவற்றை செயல்படுத்துமாறு கேட்டிருந்தது. ஆனால் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த இயலாததால் செப்டம்பர் வரை இதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆயினும், தற்போதும் இந்த ஏற்பாடு முழுமையடையவில்லை என்பதால் மீண்டும் இந்தக் கெடுவை நீட்டிக்குமாறு வங்கிகள் கோரியிருந்தன. தொடர்ந்து இந்த காலக்கெடுவை நீட்டிப்பதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. மேலும், இந்தப் பாதுகாப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படாத இயந்திரங்களில் புதிதாக ஏதும் மோசடி நடந்தால் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியே மோசடி நடந்த ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதிலிருந்து தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் கணக்கிட்டு அதிகப்படியான தொகை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இந்த சர்ச்சை குறித்த தீர்மானம் மிகவும் சிக்கலான நடைமுறை என்பதால் முதலீட்டாளர்கள் தாங்கள் இழந்த பணத்தைப் பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றது. பொதுவாக இத்தகைய திட்டங்களில் இரண்டு வங்கிகள் செயல்படுகின்றன. முதலாவது வங்கி முதலீட்டாளர்களுக்கு கடன் அட்டைகளை (கிரெடிட் கார்ட்) வழங்குகின்றது. மற்றொரு வங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களை செயல்படுத்துவதாக அமைகின்றது. எனவே, மோசடிப் புகார் அளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் முதலாவது வங்கி இதனை உறுதி செய்துகொண்டு பாதிப்படைந்தவர்களுக்கு மேலே குறிப்பிட்டபடி பணத்தை வழங்கவேண்டும். அதன்பின்னர் அந்த வங்கி பணம் அளிக்கும் இயந்திரத்தைச் செயல்படுத்தும் வங்கியிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய உத்தரவு கடன் அட்டைகளின் பாதுகாப்பு குறித்த ரிசர்வ் வங்கியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கருதப்படுகின்றது.Banks to pay for credit card frauds, RBI says
**********************************
The Reserve Bank of India has refused to extend the deadline for upgrading security on credit card swipe machines and has ordered banks to compensate cardholders in seven days if any fraud occurs on non-compliant terminals.
10:04 PM
Unknown
No comments
ஒரு காட்டில் புலியை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு கூண்டை வைத்து..அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்திருந்தான்.புலி ஆட்டிறைச்சி மீது ஆசைப்பட்டு உள்ளே வந்ததும் கூண்டு மூடிக்கொள்ளும்..அப்படியான கூண்டு அது.
அதன்படியே, புலி ஒன்று ஆட்டிற்கு ஆசைப்பட்டு உள்ளே செல்ல..கூண்டு மூடிக் கொண்டது.
கூண்டிற்குள் மாட்டிக் கொண்ட புலி..தப்பிக்க வழி தெரியாமல் விழித்த போது..ஒரு மான் அந்தப் பக்கம் வந்தது.
புலி மானிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கூறியது.
அதற்கு அந்த மான்..'உன்னை நான் காப்பாற்றினால் வெளியே நீ வந்ததும் என்னை அடித்துக் கொன்றுவிடுவாயே!'என்றது.
உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, மான் கூண்டின் கதவை திறந்து விட்டது.கூண்டிற்குள் இருந்த ஆடு தப்பினால் போதும் என ஓடி ஒளிந்தது.வெளியே வந்த புலி, 'ஆடும் ஒடி விட்டது..எனக்கோ பசி..உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு மானின் மீது பாயத் தயாராகியது.
உடன் மான் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.
அந்நேரம் ஒரு நரி அங்கு வந்து..நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.
மானைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நீதி வழங்குகிறேன்..நடந்தவற்றை அப்படியே இருவரும் செய்துக் காட்டுங்கள்' என்றது.
பின் புலியைப் பார்த்து..'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்?' என்றது.
புலியும் கூண்டினுள் சென்று..'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது.புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள்.
நரி புலியைப் பார்த்து சொல்லிற்று..'உங்களைக் காப்பாற்றிய மானையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை '
பின் மானிடம், 'ஒருவரைக் காப்பாற்றுமுன் அவரின் தராதரத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்..தகுதியில்லாதவர்க்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.
நாமும் தகுதியற்றவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்வோம்.ஒருவரின் தரம் அறிந்து உதவ வேண்டும்.
10:00 PM
Unknown
No comments
3:23 PM
Unknown
No comments
தெலுங்கு– கன்னட நடிகர்களுக்கு தனி சங்கங்கள் இருப்பதுபோல் தமிழ் நடிகர்களுக்கு சங்கம் உருவாக வேண்டும்.நமக்கென்று தனி சங்கங்கள் இருந்திருந்தால் சினிமா நுற்றாண்டு விழா அழைப்பிதழ்கள் நம் வீடு தேடி வந்து இருக்கும்.”என்று டைரக்டர் பாரதி ராஜா வேதனை போங்க குறிப்பிட்டார்.இளைய தேவன் இயக்கிய ‘ஞான கிறுக்கன்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பாரதிராஜாவும், பார்த்திபனும் பங்கேற்றனர்.
விழாவில் பார்த்திபன் பேசும்போது, “சினிமாவில் ‘ஞான கிறுக்கன்’ போல் இருப்பவர் பாரதிராஜா. அவருக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. சினிமா மேல் பித்து பிடித்த கலைஞன். என்னைப் போன்ற நூறு இயக்குனர்களையும் பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் மலை.அப்படிப்பட்ட இவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்காமல் விட்டுவிட்டனர். நாம் அவரை கவுரவிப்போம்” என்றார். பின்னர் மேடையிலேயே பாரதிராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கினார்.இதைத் தொடர்ந்து பாரதிராஜா பேசும்போது,”சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார். தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில் இருந்தார்கள். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின.கன்னட– தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடித்தது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும்.”என்று பாரதிராஜா பேசினார்.