..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
10:21 AM
Unknown
No comments
எல்ஜி நிறுவனம் ஜி2 வரிசையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 16ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.41,500, 32ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.43,500 என்றும் இற்நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும்.
எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
5.2 இன்ச் டிஸ்பிளே,
423 அடர்த்தி பிக்சல்கள்,
2.26GHz குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
13 மெகாபிக்சல் முன் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்
3ஜி,
2ஜி,
Wi-Fi,
புளுடூத்,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்.
3000 mAh பேட்டரி.
6:33 PM
Unknown
No comments
ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார். அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன. இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு நர்சரியில் தோட்டக்காரனாக பணி புரிந்தேன்.அந்த நர்சரி பல ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பில் அமைந்திருக்கும். அதில் ஒரு வரிசையில் சுமார் 90 ஆப்பிள் மரங்கள் நடப்பட்டிருக்கும். அப்போதிருந்தே நான் ஆப்பிள் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு என்னிடம் இல்லை. எனவே எனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் ஆப்பிள் மரத்தையே பல்வேறு ரகங்களை கொண்ட ஆப்பிளை காய்க்கும் மரமாக வளர்க்க திட்டமிட்டேன்.
கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு ரக ஆப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து எனது ஆப்பிள் மரத்தை வளர்த்து வருகிறேன். தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள எனது ஒரே ஆப்பிள் மரத்தில் சமையலுக்கு பயன்படும் அமெரிக்க ஆப்பிள் முதல் 1883ம் ஆண்டு ரகத்தைச் சேர்ந்த வித்திங்டன் பில்பாஸ்கெட், 1908ம் ஆண்டைச் சேர்ந்த எட்டீஸ் மேக்னம் போன்ற பல்வேறு ரகங்களும் எனது மரத்தில் காய்த்து குலுங்குகின்றன என்கிறார் பெருமையுடன். இவரது மரத்தில் காய்க்கும் ஆப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர்.
5:00 PM
Unknown
No comments
சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய ஆராம்பித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிரகங்களின் எண்ணிக்கை பற்றி சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ தெரியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவரை 900க்கும் மேற்பட்ட அன்னிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள் பற்றிய அட்டவணை கண்டுபிடிப்புகளை ஐந்து முக்கிய தரவுத்தளங்களாக பிரித்து, அதில் 900க்கும் மேற்பட்ட புதிய உலகங்கள் நமது உலகுக்கு வெளியே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் அதில் இரண்டு முக்கிய தரவுத்தளங்களின் கணக்குப்படி 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
1992ம் ஆண்டில் முதல் முறையாக பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது ஆகிய 2 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்சார் கிரகம், பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி அதிகமாக புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே இந்த கெப்ளர் தொலைநோக்கி பூமிக்கு அப்பால் உள்ள 3588 புதிய கிரகத்தில் இருந்து அடையாளம் காட்டியுள்ளது. ஒப்பந்தம் முடிவடைய இன்னும் குறைந்தது 90 சதவீதம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
4:58 PM
Unknown
No comments
சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு உட்பட தமிழகதத்தில் மேலும் 7 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது.தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வக்கீலுமான சஞ்சய் காந்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடை யாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண் டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.உதாரணமாக இந்த சட்டத்தின்கீழ் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தஞ்சாவூரில் பாரம்பரியமாக தயாரித்து வரும் கைவினை கலைஞர்கள் பதிவு செய்தனர். இந்த பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி சேலை, சேலம் பட்டு சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலை யாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மேலும் பல பொருட்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
7 பொருட்கள் என்னென்ன?
*சேலம் மாம்பழம்
*ஓசூர் ரோஜா
*ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
*திண்டுக்கல் பூட்டு
*ராஜபாளையம் நாய்
*காரைக்குடி கண்டாங்கி சேலை
*கோடாலிகருப்பூர் சேலை
இந்த 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு கிடைத்துவிடும்.