
கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.கூகுள் கிளாஸ் அம்சங்கள்: 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது,16 ஜிபி சேமிப்பு வசதி, கூகிள் கிளவுட் சேமிப்பு வசதி,5 மெகாபிக்ஸல் கேமெரா, வீடியோ பதிவுக் கருவிகள், Wi-Fi, புளூடூத்,24 மணி நேர பேட்டரி சேமிப்பு, 42 கிராம் எடை. இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, 'ஒகே. கிளாஸ்' என்று சொன்னதும் உடனடியாக...