அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து ஒலிவியா கேட்டறிந்தார்.இதையடுத்து, சிறைச்சாலையில் கைதிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சிகளை அவர் கண்டுரசித்தார். நிகழ்ச்சியின் முடிவில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை கைவிடும் வகையிலான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கைதிகளுடன் சேர்ந்து ஒலிவியாவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ(21). கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு...
Wednesday, October 2, 2013
கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடி அறிமுகம்!
11:34 AM
Unknown
No comments
கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.கூகுள் கிளாஸ் அம்சங்கள்: 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது,16 ஜிபி சேமிப்பு வசதி, கூகிள் கிளவுட் சேமிப்பு வசதி,5 மெகாபிக்ஸல் கேமெரா, வீடியோ பதிவுக் கருவிகள், Wi-Fi, புளூடூத்,24 மணி நேர பேட்டரி சேமிப்பு, 42 கிராம் எடை. இந்தக் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, 'ஒகே. கிளாஸ்' என்று சொன்னதும் உடனடியாக...
இந்திய அஞ்சல் துறை – க்ம்பளிட ரிப்போர்ட்!
11:06 AM
Unknown
No comments
நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது.இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது பைசா செலவில் ஒரு கடிதத்தை அனுப்பிவிட முடியும் என்பது ஏழை நடுத்தர மக்களுக்கு எத்தனை சந்தோஷம் தருகின்ற விஷயம்...
மனிதனை போன்றே ரோபோட்டுக்கும் மூளை! இந்திய விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு!
10:38 AM
Unknown
No comments
ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர்.இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார்.எல்லா கன்ட்ரோல்களையும்...