.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 2, 2013

தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!


 Here are some things karutiye public interest. Questions been expressed. Responsible for answering to the state, there will be   medical.


எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.

சந்தேகத்துக்கான விதை:

அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச  அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய்த் தடுப்புக்கு பல்வேறு வகைகளை  சுட்டிக்காட்டினாலும் குழந்தை பருவத்திலிருந்து தடுப்பூசிகள் போடுவது அடிப்படையானது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப இதன் தன்மை  மாறுபடும். எழுநூறு கோடிக்கும் மேல் இன்று உலக மக்கள் தொகை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா இரண்டாவது இடத்தில்  இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசி சந்தையின் மதிப்பு 275 மில்லியன் டாலர். சந்தேகம் இங்கேதான் எழுகிறது.

இந்திய மருத்துவத்துறை - 1990க்கு முன்:


மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துகள் உற்பத்தியில் உலகிலேயே இன்று இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார்  200 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. ஏழை மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவின் மருந்துகளை நம்பித்தான் இருக்கின்றன.  (இன்னொரு பக்கம் இதே இந்தியாவில்தான் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் எந்தவிதமான மருந்துகளையும் வாங்க முடியாதவர்களாக ஏழ்மையில்  இருக்கின்றனர். எவ்வளவு பெரிய முரண்!) இதற்கு காரணங்கள் மூன்று. 1. இந்திய காப்புரிமை சட்டம், 1970. 2. பொதுத்துறை நிறுவனங்கள். 3.  1978ல் உருவாக்கப்பட்ட மருத்துவ கொள்கை. ஆங்கிலேயர் ஆட்சியில்1911ல்  உருவாக்கப்பட்ட தயாரிப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டு பன்னாட்டு  நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அனுமதிக்கப்பட்டன.

அதுநாள் வரை இருந்த மருந்துக்கான காப்புரிமை (றிக்ஷீஷீபீuநீt  றிணீtமீஸீt) செய்முறைக்கான காப்புரிமையாக (றிக்ஷீஷீநீமீss  றிணீtமீஸீt)  மாற்றப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில்  வெவ்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில்  சரிவு ஏற்பட்டது.  சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான ஐ.டி.பி.எல்., எச்.ஏ.எல். ஆகியவை மருந்துகளை  உடனுக்குடன் கிடைக்க வழிசெய்தன.

ஸோ... வேறுவழியின்றி பன்னாட்டு மற்றும் இந்திய தனியார் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்தனர். 1978ல்  உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கை இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் சாதகமான பல அம்சங்களை கொண்டு  வந்தது. அன்றைய தினம் பயன்பாட்டில் இருந்த 374 மருந்துகளும் விலைக் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்  குறைந்து 25 சதவிகிதத்துக்கு வந்து நின்றது.

இந்திய மருத்துவத்துறை - 1990க்குப் பின்:


இந்திய மருத்துவத்துறையின் அபார வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த மூன்று காரணங்களும் 1990க்குப் பின் மெல்ல மெல்ல தேய்ந்துவிட்டன.  பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட நீர்த்து போய்விட்டது. ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் உற்பத்தி இல்லை. ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில்  மிகக் குறைந்த அளவில் உற்பத்தி தொடர்ந்தது. 1978ல் உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கைகளில், 1986, 1994, 2001ல் திருத்தங்கள்  செய்யப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டன. உலக வர்த்தக நிறுவனத்தில் கையெழுத்திட்டு வர்த்தகம் சார்ந்த அறிவுசார்  சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாலும், 1970ம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தில் ஒரு மாற்றத்தை 2005ல் கொண்டு வந்ததாலும்  வெளிநாட்டில் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க முடியாமல் போனது.

இதனால்தான் இன்று மருந்துகள் சராசரி இந்திய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டன. மருந்துகளின் மீதான கட்டுப்பாடு மெல்ல மெல்ல தளர்ந்து  வருவதால், அனைவருக்கும் மருந்து என்பது இப்போது சாத்தியமில்லை. தவிர, மனித ஆரோக்கியத்துக்கான பராமரிப்பில் சுமார் 80 சதவிகிதம்  மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற அடித்தட்டு மக்களே. சுகாதாரம்  இல்லாத சுற்றுச்சூழல், மறுக்கப்படும் அடிப்படை வசதிகள், சுத்தமில்லாத குடிநீர் என அன்றாட பிரச்னைகளுடன் மருந்து விலையும் மக்களை  அதளபாதாளத்துக்கு தள்ளியிருக்கிறது.

மருந்துத் துறையில் தாராளமயம் புகுந்துவிட்டதால், அத்தியாவசியமான மருந்துகளின் உற்பத்தி குறைந்து விட்டது. பதிலாக தேவையற்ற  மருந்துகளின் உற்பத்தி அதிகரித்துவிட்டது. இதனால் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை விண்ணைத் தொட்டிருக்கிறது.சுருக்கமாக சொல்வதெனில் இந்திய மருத்துவத்துறை இப்போது உற்பத்தியிலிருந்து விலகி வர்த்தகத்துக்கு மாறிவிட்டது. ஏற்றுமதிக்காக பெரும்  சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 50  சதவிகித இந்திய மக்களுக்கு தேவைக்கேற்ப மருந்து கிடைக்கவில்லை.

காணாமல் போகும் இந்திய நிறுவனங்கள்:


பெரும் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களை அடுத்தடுத்து இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. சில உதாரணங்கள்.  மேட்ரிக்ஸ் லாப்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மைலன் வாங்கியிருக்கிறது. போலவே டாபர் பார்மா நிறுவனத்தை  சிங்கப்பூரை சேர்ந்த பெரசீனியஸ் கேபியும், ரான்பாக்சியை ஜப்பானை சேர்ந்த டாய்ச்சி சான்க்கியோவும், சாந்தா பையோடெக் நிறுவனத்தை பிரான்சை  சேர்ந்த சனோபி அவெண்டிஸ்ஸும், ஆர்க்சிட் கெமிக்கல்சை அமெரிக்காவை சேர்ந்த ஹாஸ்பிராவும், பிரமல் ஹெல்த் கேரை அமெரிக்காவை சேர்ந்த  அப்பாட்டும் வாங்கியிருக்கின்றன.

இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளின் உற்பத்தி:


சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் மருத்துவத்துறை வளர்ச்சியில் தடுப்பூசி நிறுவனங்களின் பங்கு மகத்தானது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை இறப்பில் அபாயகரமான நிலையில் இருந்த நம் நாட்டை காப்பாற்றியது சுயேட்சையான, சுயசார்பான மருந்து  கொள்கைகள்தான். உதாரணமாக 1967 - 1977ம் ஆண்டுகளில் கடும் முயற்சியால் போலியோ சொட்டு மருந்து குன்னூரில் உள்ள பாஸ்டர் இந்தியா  நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால், பின்னாட்களில் இந்திய அரசு தயாரிப்பை ஏதேதோ காரணங்கள் சொல்லி முடக்கி வைத்தது. அதற்கு பின்னர்  1987ல் மும்பையில் உள்ள ஹாப்கின்ஸ் நிறுவனம் போலியோ சொட்டு மருந்தை தயாரித்தது. இதையும் ஒரு கட்டத்தில் இந்திய அரசு நிறுத்தச்  சொன்னது.

இதன் பின்னர் 1988ல் மத்திய அரசு ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியது. அந்நிறுவனத்தால் முழு உற்பத்தியும் செய்ய முடியவில்லை.  தேவைக்கேற்ப கொடுக்க முடியவில்லை. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. என்றாலும் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்த ஆர்டர்கள்  குறையவில்லை. பதிலாக அதிகரித்தன. 1989ல் குர்கானில் தொடங்கப்பட்ட மிக்ஷிசிளிலி நிறுவனம் (பிரெஞ்சு தொழில்நுட்ப உதவி) தட்டம்மை  தடுப்பூசி தயாரிப்புக்கான வேலையில் இறங்கின. ஆனால், பிரான்ஸ் அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாமல்  போனதால், போடப்பட்ட மூலதனம் மொத்தமும் விரயமாகி, ஒரு கட்டத்தில் இந்த நிறுவனமும் மூடப்பட்டது.

இதனால் நம் நாட்டில் இருந்த தட்டம்மை தடுப்பு மருந்து தேவையை தனியார் நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காக பயன்படுத்த ஆரம்பித்தன.  மொத்தத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளபடி உலக தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தாராளமாக கிடைப்பதில்லை.  ஒரு தட்டுப்பாடு நிலவியபடியே இருக்கிறது. இது செயற்கையான தட்டுப்பாடு. இதுவும் 1990க்கு பிறகுதான் தொடங்கியது. தாராளமயம்  அறிமுகப்படுத்தப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான் என்பதை நினைவில் கொள்க. 1998 - 2001 காலத்துக்குள் மக்களின் அடிப்படை  தேவைகளுக்காக கொடுக்கப்படும் பாரம்பரியமிக்க தடுப்பூசிகளின் உற்பத்தியை குறைத்துவிட்டு, அதிக லாபம் தரக்கூடிய தடுப்பூசிகள் சந்தைக்கு வரத்  தொடங்கியது. இதற்காகவே 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு இந்தியாவில் மூடப்பட்டன. இந்திய மக்கள் சக்கையாக  பிழியப்பட்டார்கள். இது உலக நாடுகளிலும் எதிரொலித்தது.

காரணம், இந்திய உற்பத்தியாளர்களில் பெரும்பான்மையினர் - அதாவது, 9 நிறுவனங்கள் - உலக மக்களின் தேவைகளுக்காக தடுப்பூசி மருந்துகளை  உற்பத்தி செய்து வந்தவர்கள்தான். இதில் எட்டு பொதுத்துறை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் லாபகரமான தடுப்பூசிகள், இந்திய  நாட்டு அட்டவணையில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டன. வலுக்கட்டாயமாக மக்களும், குழந்தைகளும் இதை போட்டுக் கொள்ள வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டன, செய்யப்பட்டும் வருகின்றன.

ஆபத்தான தடுப்பூசிகள்:

உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் கொடூரமான ரசாயன விஷங்கள் கலக்கப்பட்ட தடுப்பூசிகளை யாருக்கும் போடக் கூடாது என்று  எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், லாபம் சம்பாதிப்பதற்காக அவைகள் இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளில் சர்வசாதாரணமாக புழங்குவதாக சொல்கிறார்கள். எனவே, நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் கீழ்க்கண்ட ரசாயன நச்சுகள் அதில்  இருக்கிறதா என்று ஒன்றுக்கு இருமுறை சரிபாருங்கள். குடும்ப மருத்துவர்களின் உதவியை நாடுங்கள்.

அமோனியம் சல்பேட் - வயிறு, குடல் கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; பீட்டா பிராபியோலாக்டோன் - கல்லீரல், வயிற்று புற்று  நோய்களை ஏற்படுத்தும்; லாட்டக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பை உண்டாக்கும்;  எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை  உண்டாகும்; அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா உண்டாகும்; ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோயை  உண்டாக்கும்; டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்;

குளுதரால்டிஹைட் - பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் - ஒவ்வாமை; பாலிமைக்சின் பி பாதரசம் -  வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் கருதப்படுகிறது. மூளை, நரம்பு களில் பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாக கருவில் வளரும்  சிசுவை அடையும்; நியோமைசின் சல்பேட் - சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும். மூளை வளர்ச்சி குறைப்பாட்டை உண்டாக்கும்;  பினால் (கார்பாலிக் அமிலம் / எதிலின்கிளைகால் / பினோஜைதனால்) - செல்களை பாதிக்கும் விஷம்.

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது!

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது



அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக அடிப்படையில் இல்லாமல், பாதுகாப்பு துறையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா இராணுவத்தலைமையகமான பெண்டகன் அதன் 10 பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள ஒத்துக்கொண்டிருப்பதாக இந்திய தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து இந்திய தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்,  விரைவில் அந்த தொழில் நுட்பங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுடன் அடுத்தடுத்து பகிர்ந்துகொள்வதற்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டறியவும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதை உறுதிபடுத்திய அமெரிக்க துணை ராணுவ மந்திரி அஷ்டன் கார்டர், ஒபாமா நிர்வாகம் இப்பொழுது குரூப்-8 நாடுகளின் பட்டியிலில் இந்தியாவை இணைத்துள்ளது என்று கூறினார். இந்த நாடுகள் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை வணிக நோக்கில் அல்லாமல் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கைகளால் பலன்...(நீதிக்கதை)!





ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்....

" இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.

ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.

மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.

மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.

நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.

புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.

தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ...

"நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.

ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம் உள்ளதை

பிறருக்கு வழங்கி வாழ்தலுமே நன்மை பயக்கும்" என்றார்.
 
 

ஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு!




சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தான் ராஜ்பவன் என்று பெயர். ஆனால், ஊட்டியிலும் ஒரு ராஜ்பவன் இருப்பது பலர் அறிந்திராத விஷயம். சென்னை கவர்னர் மாளிகையில் என்ன வசதி உண்டோ, அத்தனையும் இங்கேயும் உண்டு. இந்த ராஜ்பவன் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு. தற்போது, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் 1876ம் ஆண்டு லாரன் ஆசிலம் டிரஸ்ட் அரசு இல்லம் கட்ட முடிவு செய்தது.


அக்கால கட்டத்தில் சென்னை மகாண வைசிராயாக இருப்பவர்கள் கோடை காலத்தில் ஊட்டிக்கு வந்து தங்கி ஒய்வு எடுப்பதற்காகவும், அரசு பணிகளை கவனிக்க இந்த மாளிகை கட்டப்பட்டது. 1888ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 633 மதிப்பில் இம்மாளிகை கட்டி முடிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு கூடுதல் அறை கட்டப்பட்டது. 1904ம் ஆண்டு இந்த மாளிகை முழுவதும் மின்சார இணைப்பு வசதி செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இதற்கு ராஜ்பவன் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இம்மாளிகை தமிழக ஆளுநர் மாளிகையாக அறிவிக்கப்பட்டது.



தமிழக கவர்னர் அல்லது இந்திய குடியரசு தலைவர் ஆகியோர் ஊட்டி வந்தால் இங்கு தான் தங்குகின்றனர்.முன்பு தமிழகத்திற்கு ஆளுநராக வருபவர்கள் பலர் கோடை காலங்களில் அதிக நாள் இங்கிருந்தே நிர்வாகத்தை கவனித்துள்ளனர். மற்ற அரசியல் தலைவர்கள் அல்லது அரசு உயர்பதவிகளில் உள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.  இந்த மாளிகையில் 17 அறை உள்ளது. வரவேற்பு அறையில் பல்வேறு வகையான ஒவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையை சாதாரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கவோ, புகைப்படமோ எடுக்க அனுமதிப்பது இல்லை.


 
back to top