
மைசூரில் 403-ஆவது தசரா விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திர சேகரகம்பாரா இந்த விழாவைத் தொடக்கிவைத்தார்.10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நவராத்திரி என்றால், மைசூர் தசரா விழாவை நினைவுக்குக் கொண்டு வராமலிருக்க முடியாது. அத்தனை உலகப் புகழ் பெற்ற பெருங் கொண்டாட்டம் இது! மைசூரில் ஆண்டுதோறும் தசரா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான ஆரம்பம்...