.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 7, 2013

இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் - சுற்றுலாத்தலங்கள்!



இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள்
 இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக உள்ள லட்சதீவுகள், அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் 36 தீவுகளை கொண்ட எழிமிகு தீவுக் கூட்டம் தான் இலட்சத்தீவுகள் ஆகும். இத்தீவுகூட்டமானது பல்லவ அரசுக்குட்பட்டு இருந்தது என்பதை ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவகால
கல்வெட்டில் ''தீப லக்ஷம்'' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து அரியலாம்.இத்தீவின் தலைநகரம் காவரத்தி. காவரத்தி, மினிக்கோய், அமினி ஆகிய தீவுகள் இத்தீவுக்கூட்டங்களில் முக்குஇய தீவுகளாகும்.
 
 
அகத்தி தீவு:
 
லட்ச தீவுகளின் நுழைவாயிலாக  அமைந்திருப்பது அகத்தி தீவு.  சுமார் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவு எவ்வித வணிக சந்தடிகள் இல்லாமல் இயற்கையின் பரிசுத்தத்தை பிரதிபலித்துக் கொண்டு காண்பவரை கவரும்படியுள்ளதோடு கோடை சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. இந்த அகத்தி தீவில்தான் உள்நாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.உலகிலேயே ‘ட்யூனா’ மீன் அதிகம் பிடிபடும் இடம் இந்த அகத்தி தீவு. அது மட்டுமின்றி ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்கெலிங் பொழுது போக்கு அம்சங்கள் இங்கு உள்ளன. மேலும் இத்தீவின் கடல் உணவுகளின் சுவை மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் வகையிலிருக்கும். இத்தீவில் மது அருந்த அனுமதியில்லை என்பது குற்ப்பிடத்தக்கதாக்கும்.
 
 
அமினி தீவு:
 
முட்டை வடிவுல் சிறியதாக இருக்கும் இத்தீவானது வெறும் 3 கிலோமீட்டர் நீளமும், 1 கிலோ மீட்டர் அகலமும்
கொண்டு அமிந்துள்ளது. இத்தீவானது எந்த ஒரு ஆரவரமும் இன்றி நிசப்தமாக இருப்பது மனதிற்கு மிகவும்
இதமாக இருக்கும், இங்கு சூரியன் அஸ்தமிக்கும் காட்சியினை இங்குள்ள விடுதிகள் அமைத்துள்ள செயற்கை
மரப்பொருட்களால் அமைக்கப்பட்ட தளங்களில் அமர்ந்து ரசிக்கலாம். அகத்தி தீவிலிருந்து படகின் மூலம் இந்து
அமினி தீவிற்கு எளிதாக வந்து சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பங்காரம் தீவு:
 
ழகிய கடற்கரைப் பகுதிகளோடு 120 ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்போடு அமைந்துள்ள ஒர் எழிழ்மிகு தீவு
பங்காரம் தீவு. இங்கு கடல்வால் உயிரினங்களோடு நிலவாழ் உயிரினங்களும் வசிக்கின்றன. ஸ்கூபா டைவிங்,
ஸ்நார்க்கெலிங் போன்ற கடல்மூழ்கு நீச்சல் மூலம் நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள்,
பவளப்பாறைகளை இங்கு காணலாம். அகத்தி தீவிலிருந்து படகு மூலமாகவோ அல்லது ஹெலிகாப்ட்டர்
மூலமாகவோ இத்தீவிற்கு செல்ல முடியும். இலட்சத்தீவுகளில் மது அருந்த அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே தீவு பங்காரம் தீவு மட்டும்தான்.
 
 
மாலிகு தீவு:
 
ட்சத்தீவு பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள தீவுதான் மாலிகு தீவு என்று அழைக்கப்படும் மினிக்காய்
தீவு ஆகும். 1976 ஆம் ஆண்டு மாலத்தீவும்-இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் இப்படி இத்தீவானது
இந்தியாவிற்கு சொந்தமானது. 10.கிலோமீட்டர் நீளமும் 1 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த
மினிக்காய்த்தீவின் இயற்கை அமைப்பானது மாலத்தீவின் இயற்கை அமைப்பை போன்றே அமைந்துள்ளது .
இத்தீவு முழுவதும் தென்னை மரங்களால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
காவரத்தி தீவு:
 
ட்சதீவுகளின் தலைநகரமாக இருப்பது காவரத்தி தீவு. 4.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த
தீவானது கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும், அகத்தி தீவிலிருந்து 50. கிலோ
மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தீவின் கடற்கரை நீரானது மரகதப் பச்சை நிறத்தில் ஸ்படிகம் போன்று
பிரகாசிக்ககூடியதாக இருக்கிறது.
 
இங்கு நீச்சல் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்கேற்றவாறு நீர்  விளையாட்டுகளும், மரைன் என்ற மியூசியமும் காணப்படுகின்றன.இந்த மரைன் மியூசியத்தில் பலவகையான
மீன்கள், நீர் வாழ் உயிரினங்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இங்குள்ள கடலில் கண்ணாடி அடித்தளத்துடன் அமைக்கப்பட்ட படகுகளில் பயணிப்பதன் மூலம் கடலில் உள்ள பவழப்பாறைகள், கடல் உயிரினங்களை நேரடியாக பார் கண்டு மகிழலாம்.
 

கல்பேணி தீவு:
 
திலக்கம், பிட்டி, செரியம் ஆகிய மூன்று தீவுகள் சேர்ந்ததே கல்பேணி தீவு. இலட்ச தீவுக் கூட்டங்களில் 2.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஆழம் குறைந்த அலைகள் இல்லாத ஸ்படிகம் போன்று தூய்மையான நீருடன் காட்சியளிக்கும் கடல் நீர்பரப்பான ''தரைக்கடல்'' பகுதியாக அமைந்துள்ளது இக் கல்பேணி தீவு. இத்தீவில் 37 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி சென்று பார்த்தால் இத்தீவின் முழு இயற்கை அழகையும் இமைக்காமல் பார்த்து ரசிக்கலாம். கொச்சியிலிருந்து இத்தீவிற்கு நேரடி படகு போக்குவரத்து வசதியுள்ளது.
 

சுஹேலி பார்:
 
கத்தி தீவிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் சுஹேலி வலியக்கரா ,சுஹேலி செரியக்கரா எனும் இரண்டு சிறிய தீவுகளை கொண்ட தீவுதான் சுஹேலி பார் தீவுக்கூட்டமாகும். நீள்வட்ட வடிவில் விளிக்கு வெளிச்சத்தின் விளிம்பை போன்று மரகதப்பச்சை நிறத்தில் பிரகாசிக்கும் தரைக்கடல் பகுதி இத்தீவின் சிறப்பாகும். சுஹேலி வலியக்கரா ,சுஹேலி செரியக்கரா ஆகிய இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே உள்ள ஒரு நீண்ட மணல் திட்டுப் பகுதியானது பலவிதமான பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. மேலும், அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை ''ட்யூனா'' மீன்களை பதப்படுத்தும் தற்காலிக இடமாகவும் இந்த சுஹேலி தீவு உள்ளது.
 

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்!


பெண்களுக்கான பாட்டி வைத்தியம்


பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.

* மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

* மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

* வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.

* இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.

* அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.

* கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.

புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்!



   புத்தகயா மஹாபோதி ஆலயம்

 
புத்தகயா மஹாபோதி ஆலயம்
 
சையே அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் பெற்ற மரம் அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆலயம் மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமர்ந்தவாக்கில் அமைதியின் உருவமாக ஆழ்ந்த தியான நிலையில் புத்தர் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
 
மஹாபோதி ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும்  அதைச் சுற்றியுள்ள நான்கு சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காரணம், அனைத்தும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. கோபுரம் கட்டப்பட்ட காலம் 3-6ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது. சிறப்புக்குரிய மஹாபோதி ஆலயத்தைக் கட்டியவர் அசோக மன்னர். புத்தர் ஞானம் பெற்று சுமார் 250ஆண்டுகளுக்கு பிறகு இதை கட்டியிருக்கிறார். புத்தர் தியானத்தில் அமர்ந்த இடத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இரண்டு பெரிய பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
 
புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால் சிறப்புகுரியதாகிறது.
 
உலகம் முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள். புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல் அறிவிக்கப்பட்டது.
 
எப்படிச் செல்லலாம்?
 
சிறப்புக்குரிய புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம் உள்ளது.

விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்!





ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்: 


விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விஷயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்கும் செயல் பாடாகும். அனைவரும் ஏன் டெஸ்க்டாப்புடன் சிஸ்டம் தொடங்கினால் என்ன? என்று கேட்டனர். இப்படித்தானே, இதுவரை விண்டோஸ் இயங்கியது எனவும் கேள்வி தொடுத்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பின்னூட்டு வந்ததனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் மாற்றியுள்ளது. நேராக சிஸ்டம், முன்பு போல, டெஸ்க்டாப் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற, ஒரு சின்ன செட்டிங் அமைக்க வேண்டும்.


டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties என்பதனைத் தேர்ந்தெடுகக்வும். இங்கு தரப்படும் பல டேப்களில், "When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start' என்பதனைத் தேடிக் காணவும். இந்த செட்டிங் மீது ஒரு டிக் அடையாளம் அமைக்கவும். இனி, உங்கள் விண்டோஸ் 8.1 கம்ப்யூட்டர், ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்காது. இந்த வசதி, ஸ்டார்ட் ஸ்கிரீன் தொடக்கத்தினைப் பார்த்து தயங்குவோருக்கு அருமருந்தாக அமையும். விண்டோஸ் 8.1 வரும் அக்டோபர் 17 முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அப்போது புதிய சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், இந்த செட்டிங் அமைத்துக் கொள்ளலாம்.


புரோகிராம்களை மாறா நிலையில் அமைக்க: 


நம் கம்ப்யூட்டர்களில், இணையம் தேட பல பிரவுசர்களை அமைக்கிறோம். ஆனால், நாம் ஏதேனும் ஓர் இணைய லிங்க்கில் கிளிக் செய்திடும்போது, மாறா நிலையில் (default) அமைத்திட்ட பிரவுசரில் தான் அது திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசரைத் திறந்து இணையத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கிடைக்கும் லிங்க்கில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மாறா நிலை பிரவுசராக செட் செய்யப்பட்டிருந்தால், அதில் தான் அந்த குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்படும்.


இதே போல் தான், நாம் பல மீடியா பிளேயர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் ஆகியவற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிந்து வைத்து இயக்குகிறோம்.


இவற்றில், நமக்குப் பிடித்த புரோகிராமினை எப்படி மாறா நிலைக்குக் கொண்டு வந்து, அதில் திறக்கக் கூடிய புரோகிராம்களை, குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே திறக்கும்படி அமைப்பது. இதனை விண்டோஸ் 8.1ல் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம். 


முதலில் சார்ம்ஸ் பாரினைத் (Charms bar) திறக்கவும். இதற்கு Win key + C ஆகிய கீகளை அழுத்தலாம். இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Change PC Settings என்பதில் தட்டவும். Search and Apps என்பதில் கிளிக் செய்திடவும். Defaults என்ற வகையின் கீழ், நீங்கள் எந்த புரோகிராமினை மாறா நிலையில் அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திடலாம். 


எடுத்துக்காட்டாக, மீடியா பிளேயராக, Windows Media Player என்பதற்குப் பதிலாக, Media Player Classic என்பதனை மாறா நிலையில் அமைக்கலாம். இதே போல குறிப்பிட்ட பைல் வகைகளை எந்த புரோகிராமில் திறக்கலாம் என்பதனையும் அமைக்கலாம். விண்டோஸ் 8.1ல் இதனை புதிய PC Settings அப்ளிகேஷனிலேயே அமைக்கலாம். முன்பு போல, கண்ட்ரோல் பேனல் திறந்து இவற்றை அமைக்க வேண்டியதில்லை.


Click Here

 
back to top