.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 8, 2013

இதய பலவீனத்தை துவக்கநிலையில் கண்டறிந்து தீர்வு காணலாம்!


                              Initial regulatory impact of weakness in the heart of the heart find a permanent solution to the health care expert Lawrence cecuraj   said:

 
பொதுவாக இதயம், ரத்தத்தை உடல் முழுவதும் வினியோகிக்கும் ஒரு பம்ப்பாக உள்ளது. இதயம் இயல்பாக, இதயத்திற்கு வந்தடையும் ரத்தத்தில் 60  முதல் 80 சதவீதம் ரத்தத்தை வெளியேற்றும். அவ்வாறு வெளியேற்றும் அளவு 50 சதவீதத்திற்கு கீழே குறைந்தால் இதய பலவீனமாக  கருதப்படுகிறது. 35 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தால், தீவிரமான அளவில் பலவீனமாகியுள்ளது என்று கூறலாம். இதயம் பலவீனமானால் ரத்தம்  செல்வது குறைகிறது. இதனால் ரத்த சுழற்சி பாதிக்கப்பட்டு ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி கை, கால்கள் வீங்கலாம். சிறிது தூரம் நடந்தாலே மூச்சு  வாங்கும், வயிறு வீங்கும்.


இரவு நேராக படுத்தாலும் மூச்சு வாங்கும். ஓய்விலிருக்கும் போதே மூச்சு வாங்கும். சிறுநீர் அளவு குறைவாக வெளியேறும். பலவீனத்தின் அளவிற்கு  தகுந்தாற்போல் அறிகுறிகள் அதிகமாகும். இதயம் பலவீனமாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு  காரணமாக மாரடைப்பு ஏற்படுவது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இது தவிரவும் அதிக அளவு மது அருந்துதல், சந்ததி ரீதியான  பாதிப்புகள், ஊட்டச்சத்து குறைவு, இதயத்தில் ஏற்படும் தொற்று நோய் தாக்கம், இதய வால்வ்களில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவையும்  காரணமாக உள்ளது.



அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லாவிட்டால் இதய பலவீனம் அதிகமாகி ஓய்விலிருக்கும் போதே  மூச்சு வாங்குவது, அல்லது திடீர் மரணமே கூட ஏற்பட வாய்ப்புள்ளது. துவக்கநிலையிலேயே மருத்துவரை அணுகுவதன் மூலம் என்ன காரணத்தால்  அந்த அறிகுறிகள் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கலாம். இதய பலவீனத்திற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சைகள் அளிப்பதன்  மூலம் துவக்கநிலையிலேயே குறைபாட்டை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். அல்லது குறைபாடு மேலும் அதிகரிக்காமல் பார்த்து  கொள்ளலாம்.



இதய பலவீனத்திற்கு முதல்கட்டமாக மருத்துவரின் அறிவுரைபடி தேவையான அளவுக்கு மட்டுமே நீர் அருந்துதல், உப்பின் அளவை  கட்டுப்படுத்துதல், உணவு முறை கட்டுப்பாடுகள் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். இதனுடன் மருத்துவரின் அறிவுரைப்படி அளிக்கப்படும்  மருந்துகளை சாப்பிடுவதன் மூலமும் இந்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இவ்வாறு மருந்தின் மூலம் மற்றும் உணவு பழக்கம்  மூலமும் கட்டுப்படாத இதய பலவீனத்திற்கு இதய மாற்று அறுவை சிகிச்சையே தீர்வாக இருந்து வந்தது.



ஆனால் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னரே பதிவு செய்து சரியான இதயம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது.  இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னரும் கூட, மாற்று இதயம் உடம்போடு பொருந்துவதற்காக தொடர்ந்து மருத்துகள் சாப்பிட வேண்டும்.  தற்பொழுது இந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக பல நோயாளிகள் சிஆர்டி சிகிச்சையின் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த  சிகிச்சையில் இதயத்தை 3 ஒயர்கள் மூலம் இதயத்தின் செயல்பாட்டை சீராக்குவதன் மூலம் இதயத்தின் பம்ப் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.  இவ்வாறு சிகிச்சை மேற்கொள்பவர்களில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டோர் நலம் பெற வாய்ப்புள்ளது.

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்!

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்


இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள்.

இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள். தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும்.

அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம். ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும்.

உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம். பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள்.

இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும். சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம். குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்.

இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜுஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம். மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது.

அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும். தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும். யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள்.

ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள்.

இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள். நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும்.

அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள். உணவு தட்டை 1-2 இன்ச்க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.

வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.

உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள்.

அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும். உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும்.

வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும். கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.

அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.

தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்:

20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல். இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள்.

அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.

தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு.

அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும். சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டாச்சார்யா !


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நேற்று பொறுப்பேற்றார். நாட்டின் மிகப் பெரிய அரசுடமை வங்கியின் முதலாவரது பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வங்கியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு 57 வயதான அருந்ததி, எஸ்பிஐயின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித்துறை தலைவராக பதவி வகித்தார்.



8 - lady_ARUNDHATI_

 



இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சாரியா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.


57 வயதான அருந்ததி பட்டாச்சாரியா, பணிமூப்பு அடிப்படையில் தலைவர் பதவிக்கு வரும் பட்டியலில் முன்னிலையில் இருந்தார். நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அலுவலராக பதவி வகித்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.பட்டாச்சாரியாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால், வங்கியின் 4 நிர்வாக இயக்குனர் பதவிகளில் ஒன்று காலியாக உள்ளது. 



பொதுத்துறை வங்கிகளின் பெண் தலைவர்கள் வரிசையில் அலகாபாத் வங்கியின் தலைவர் சுபலட்சுமி பன்சே, பாங்க் ஆப் இந்தியா தலைவர் வி.ஆர். ஐயர் ஆகியோருடன் இப்போது அருந்ததி பட்டாச்சாரியா இணைந்துள்ளார். இதேபோல் தனியார் வங்கிகளில் சண்டா கோச்சார் (ஐசிஐசிஐ), சிக்லா சர்மா (ஆக்சிஸ்), நைனா லால் கித்வாய் (எச்.எஸ்.பி.சி.) ஆகியோரும் தலைவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Arundhati Bhattacharya becomes first woman to head SBI

*************************************


 The government on Monday cleared the elevation of Arundhati Bhattacharya as the chairperson of the State Bank of IndiaBSE -1.19 % – the first woman chief of the country’s largest lender – succeeding Pratip Chaudhuri who retired on September 30.

தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!


பட்டம், பதவி எல்லாம் எனக்கு ஒரு தூசுக்குச் சமானம்!” என்று ஓர் அரசியல்வாதி சொன்னால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பாராட்டிக் கை தட்டுவார்கள்.


 ஆனால் விஞ்ஞானிகள் “”உண்மைதான், பட்டம், பதவி என்ற தூசுகள் இல்லாவிட்டால் அவரும் இருக்க மாட்டார்!” என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ஏனென்றால் தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது. பூமியும் இருக்காது. நாமும் இருக்க மாட்டோம். தூசி அவ்வளவு மகத்துவமும் மகாத்மியமும் கொண்டது.


8 - dust space

 



தூசு என்பதில் முக்கால்வாசி } மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் உடலிலிருந்து உதிர்ந்து விழுகிற உயிரற்ற துணுக்குச் செதில்கள்தான். அவற்றைப் பல வகையான சிறு பூச்சிகள் உண்டு வாழ்கின்றன. அத்தகைய சிறு பூச்சிகள் பெரிய பூச்சிகளின் இரையாகின்றன. பெரிய பூச்சிகளைச் சிறிய பிராணிகள் சாப்பிடுகின்றன. சிறிய பிராணிகளைப் பெரிய பிராணிகள் உண்கின்றன. இந்த வரிசைக்கு “உணவுச் சங்கிலி’ என்று பெயர். அதில் தூசு முதல் கண்ணி. இந்த உணவுச் சங்கிலி உயிரினப் பரிணாமத்தில் ஒரு முக்கியமான அம்சம். அதன் கண்ணிகளில் ஒன்று அறுந்தாலும் எல்லா உயிரினங்களுமே அழிந்து போகும்.



தூசியில் நுண்ணிய மண் தூள்கள், கல் பொடி, உலோகத் துணுக்குகள், ரசாயன மூலக்கூறுகள் போன்றவையும் இடம்பெறுகின்றன. அவை நமக்குப் பலவிதமான உதவிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாகப் பகல் நேரத்தில் வெளியில் மட்டுமே வெயிலடித்தாலும் வீட்டுக்குள் வெளிச்சமாக இருப்பதற்குக் காரணம் தூசிகள் சூரிய ஒளியை நாலா திசைகளிலும் பிரதிபலித்துச் சிதற வைக்கின்றதுதான். தூசிகள் இல்லாவிட்டால் நேரடியாக வெளிச்சம் வர முடியாத இடங்களெல்லாம் கன்னங்கரேலென இருட்டாயிருக்கும். பட்டப்பகலில் கூட வீட்டுக்குள் நிறைய விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டியிருக்கும். மின்வெட்டு இன்னும் தீவிரமாயிருக்கும். மரத்தடிகளில்கூட இருள் சூழ்ந்திருக்கும். மின்சாரச் செலவு, கிரசின் செலவு எல்லாம் வானளவுக்கு உயர்ந்துவிடும்.



வளிமண்டலத் தூசிகள் மீது சூரிய ஒளி படும்போது அதற்கு லம்பமான திசையில் நீல ஒளி மட்டும் அதிக அளவில் பூமியை நோக்கித் திருப்பிவிடப்படுகிறது. அதனால் வானம் நீல நிறம் பெறுகிறது. அந்த நிறத்தைக் கடல் பிரதிபலிப்பதால் அதுவும் நீலமாகத் தெரிகிறது.
காலையிலும் மாலையிலும் சூரியன் அடிவானத்தை நெருங்கும்போது தூசிகள் அதன் ஒளியைப் பூமியை நோக்கி வளைக்கும். அப்போது சிவப்பு நிற ஒளி மற்ற ஒளிகளைவிட அதிகமாக வளைவதால் அந்த நேரங்களில் சூரியனும் வானமும் சிவந்து காணப்படுகின்றன. “பொன் மாலைப் பொழுது’ என்று பாடத் தோன்றுகிறது.



மழை வளத்துக்கே தூசிகள்தான் காரணம். கடல்களிலிருந்தும் நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகி வானில் பரவுகிறது. அதன் வெப்பநிலை குறையும்போது அது தூசுத் துகள்களைப் பற்றிக் கொண்டு திரவமாகிறது. தூசுகளில்லாது போனால் நீராவி திரவத் துளியாக மாறி மேகங்களாக உருவாகாது. மழையும் பெய்யாது.



வானில் வெகு உயரத்தில் பறக்கும் விமானங்கள் செல்லும் பாதையில் அவற்றுக்குப் பின்னால் நீண்ட வால்களைப்போல வெண்புகைக் கோடுகள் தோன்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தாழப்பறக்கும் விமானங்களுக்கு அவ்வாறு வால்கள் உண்டாகாது. நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் கிட்டத்தட்ட 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். அங்கெல்லாம் காற்றின் அடர்த்தி குறைவாயிருக்கும். தூசிகளேயிராது. அதனால் அங்கு பரவியிருக்கிற நீராவி, ஆவி நிலையிலேயே நீடித்திருக்கும். அதன் ஊடாக ஒரு விமானம் பறந்து செல்லும்போது அதன் எஞ்சினிலிருந்து வெளிப்படும் புகைத் துணுக்குகளைப் பற்றிக் கொண்டு ஆவி திரவத்துளிகளாக மாறும்; அவையே வெள்ளைப் புகைக் கோடுகளாகத் தெரிகின்றன.



இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தூசி வடிவத்தில்தான் அவதரித்தது. 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன் “பெருவெடி’ என்ற சம்பவம் நிகழ்ந்து பிரபஞ்சம் விரிவடைந்தது. அதில் முதலில் தோன்றிய நுண்துகள்கள் கூடி எலக்ட்ரான்களாகவும் புரோட்டான்களாகவும் நியூட்ரான்களாகவும் திரண்டன. அவை ஒன்றுகூடி ஹைட்ரஜன் அணுக்களாக மாறின. ஹைட்ரஜன் அணுக்கள் திரண்டு விண்மீன்களாக இறுகின. விண்மீன்களுக்குள் அணுக்கருப் பிணைவுகள் ஏற்பட்டு ஹீலியம், கார்பன் இத்யாதி தனிமங்கள் தோன்றின.
விண்மீன்களுக்கு வயதாகிவிட்டபின் அவை வெடித்துச் சிதறின. அவற்றின் துகள்கள் விண்வெளியில் தூசுகளாகப் பரவின. அவை மீண்டும் மேகங்களாகித் திரண்டு இறுகிச் சூரியன் போன்ற விண்மீன்களாகவும் பூமி போன்ற கோள்களாகவும் மாறின. எனவே பூமியின் “பூர்வாசிரம’ நிலை தூசிகள்தான்.



இந்தப் பிரபஞ்சத்தில் இன்னமும் ஏராளமான தூசுப் படலங்கள் மிதந்துகொண்டு தானிருக்கின்றன. அவற்றிலிருந்து புதிய விண்மீன்களும் கோள்களும் உருவாகிக் கொண்டிருக்கக்கூடும். அவை வயதான பின் மீண்டும் வெடித்துத் தூசு மண்டலங்களாகச் சிதறலாம். பழந்தமிழ்ப் புலவர் பரஞ்சோதி முனிவர் “”அண்டங்கள் எல்லாம் அணுவாகி, அணுக்களெல்லாம் அண்டங்களாகிப் பெரிதாய்ச் சிறிதாயினும்” என்று இதே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.



தூசுகள், அளவுக்கு மீறித் திரண்டாலும் ஆபத்துத்தான். சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் வானத்திலிருந்து ஒரு பெரிய விண்கல் பூமியில் வந்து விழுந்தது. அதனால் ஏகப்பட்ட தூசி எழுந்து வானம் முழுவதிலும் அடர்த்தியாகப் படர்ந்து சூரிய ஒளியை மறைத்துவிட்டது. பூமியில் “இருள்’ சூழ்ந்தது. சூரிய ஒளியில்லாததால் தாவரங்கள் பட்டுப்போய் அழிந்தன. அப்போது உலகில் உலவிய டைனாசார்களில் சாக பட்சிணிகளாயிருந்தவை உணவு கிடைக்காமல் முற்றாயழிந்தன. மாமிச பட்சிணிகளாயிருந்தவையும் அசைவ உணவு கிடைக்காமல் அழிந்தன. அப்போதிருந்த உயிரினங்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் வரை முற்றாயழிந்து போனதாகச் சொல்கிறார்கள். கரப்புகள் போன்ற பூச்சிகளும் மூஞ்சுறு போன்ற பாலூட்டிகளும் மட்டுமே மிஞ்சின. அந்தப் பாலூட்டிகளின் சந்ததிகள்தான் இன்றுள்ள மனிதர்களும் மற்ற விலங்குகளுமாகும்.


சிமென்ட் ஆலைகள் போன்ற தொழிற்சாலைகள் வெளியிடும் புகையில் சிமென்ட் துகள்கள் அதிகமிருக்கும். அது ஆலையைச் சுற்றியுள்ள வயல்களிலும் தோப்புகளிலும் உள்ள தாவரங்களின் இலைகளில் விபூதி அபிஷேகம் செய்ததைப்போலப் படிந்துவிடும். அதன் காரணமாகத் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தமக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல் வாடி வதங்கிவிடும். விரைவிலேயே அவை அழிந்து போகும்.


அளவுக்கு மீறித் தூசிகள் காற்றில் பரவியிருந்தால் மனிதர்களும் விலங்குகளும் சுவாசக் கோளாறுகளாலும் நுரையீரல் நோய்களாலும் தோல் நோய்களாலும் பீடிக்கப்படுகின்றனர். சிமென்ட் ஆலைகள், கல்நார்ப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், பாறைக்கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள், பாறைகளைச் செதுக்கவும் மெருகேற்றவும் செய்கிற தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் காற்றில் கல்தூசி நிறைந்திருக்கும். அதைச் சுவாசிக்கிறவர்களின் நுரையீரல்களில் அது படிவதால் “சிலிக்கோசிஸ்’ என்ற கொடிய நோயுண்டாகிறது. அதேபோலப் பெரிய பண்ணைத் தோட்டங்களிலுள்ள காற்றில் மகரந்தத் துகள்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்ற வியாதிகள் உண்டாகும்.


பெரு நகரங்களில் வாகனங்கள் உமிழும் புகையால் மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குளிர்காலங்களில் அந்தப் புகைத்துணுக்குகளில் நீராவி படிந்து தரை மட்டத்தில் மூடுபனியாகப் பரவுகிறது. ரயில்களும் விமானங்களும் மூடுபனி கலையும் வரை காத்திருந்து புறப்படவும் இறங்கவும் நேரிடும். சாலைகளில் வாகனங்கள் பாதை புலப்படாமல் விபத்துக்குள்ளாகலாம்.


குளிர்காலங்களிலும், “போகி’ போன்ற பண்டிகை நாள்களிலும் மக்கள் டயர்களையும் குப்பைகளையும் எரிப்பதாலும் காற்றில் புகையும் கார்பன் துகள்களும் பரவிக் கெடுக்கும். ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிக்கும்போது நச்சு வாயுக்களும் உருவாகி நுரையீரல் புற்றுநோய்கூட உண்டாகும்.


சுற்றுச்சூழலில் மாசு பரவாமல் தடுக்க “மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள்’ என்ற அமைப்புகள் மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் உள்ளன. அவ்வப்போது அவை “தங்களால் முடிந்த’ சில நடவடிக்கைகளை எடுக்கின்றன; எனவே நாம் நமது மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு நடமாடுவதே நல்லது.

 
back to top