.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, October 11, 2013

சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!


      சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
 
கலகலாவல்லவர்களான சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம் 'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு கலைநயத்துடன் சாளுக்கியர் எழுப்பிய 10ஆலயங்களை உலக பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ 1987-ல் அறிவித்தது. இவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. சாளுக்கிய மன்னர்களின் முடிசூட்டு வைபவமும் இங்கு நடந்திருப்பது இன்னொரு சிறப்பு.
 
விருபாக்ஷர் ஆலயம்:
 
சாளுக்கிய பேரரசி லோகமகாதேவி அமைத்த ஆலயம் இது. 'லோகேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்தன் பல்லவர்களை வென்றதன் நினைவாக இதை கட்டியிருக்கிறார். காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டதாக கூறப்-படுகிறது. லிங்கோத்பவர், நடராஜர், உக்கிர நரமிம்மர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
 
சங்கமேஸ்வரர் ஆலயம்:
 
'விஜயேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சாளுக்கிய மன்னர் விஜயாதித்யா சத்யஸ்ரேயா. இந்த ஆலயத்தில் திராவிட கட்டடக்கலை மிளிர்கிறது. உக்கிர நரசிம்மர், நடராஜர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதான கோபுரம் மூன்று அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
 
மல்லிகார்ஜுனா ஆலயம்:
 
விருபாக்ஷர் ஆலயத்தின் சிறிய வடிவம்தான் மல்லிகார்ஜுனா ஆலயம். விருபாக்ஷர் ஆலயம் கட்டப்பட்ட புதிதிலேயே இதுவும் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
 
காட சித்தேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயங்கள்:
 
இவை இரண்டுமே சம காலத்தில் கட்டப்பட்டவை. காட சித்தேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் திரிசூலம் ஏந்திய சிவன் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
 
பாபநாதர் ஆலயம்:
 
ராமாயண, மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் பாபநாதர் ஆலயத்தில் நிறைய உள்ளன. இதே போல கல்கநாதா ஆலயம், ஜெயின் ஆலயம், நாகநாதர் ஆலயம், மகா குட்டேஸ்வரர் ஆலயம் ஆகியவையும் பல வரலாறுகளை உணர்த்தி வருகின்றன.
 
எப்படிப் போகலாம்?
 
பெங்களூரில் இருந்து சுமார் 495 கி.மீ தொலைவிலும், படாமியில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் பட்டாடகல் அமைந்துள்ளது. சுமார் 24கி.மீ தொலைவில் படாமியில் ரயில் நிலையம் இருக்கிறது. பெங்களூரில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.   

பட்டாடகல்லில் ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சாளுக்யா உற்சவம் என்ற பெயரில் மூன்று நாட்கள் நாட்டியவிழா நடத்தப்படுகிறது. வண்ணமயமான இவ்விழாவை வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஆலயங்களின் பின்னணியில் பார்த்து ரசிப்பது பரவசம் தரக்கூடியது.
 
 

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை-1- வரலாறு!


உலகில் முதன் முதலாக வரையப்பட்ட வரைபடத்திலிருந்து நவீன காலம் வரை உள்ள வரைபடங்களை ஒரு பதிவாக இடலாம் என்று இந்த பதிவை ஆரம்பித்துள்ளேன்.



     உலக வரைபடங்கள் பண்டைய காலங்களில் வரையப்பட்டதில் பல்வேறு நிலைபாடுகள் காணப்பட்டன. மனித நாகரிகம் தோன்றிய பொழுது உலகம் ஆப்ரிகா, பாரசீகம், பாபிலோனியா சுற்றிய பகுதி தான் உலகம் என நினைத்துக்கொண்டிருந்தனர் உலகின் முதல் வரைபடமும் அப்படி தான் வரையப்பட்டுள்ளது 
 பின்பு உலகம் தட்டையானது என்ற நினைத்தனர். பின்பு உலகம் உருண்டை என பின்னால் வந்த அறிவியலாளர்கள் கூறினார். இருப்பினும் ஆதி காலத்திலேயே பூமி உருண்டையானது போன்ற வரைபடம் துல்லியமாக வரையப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பூமிக்கு உயர சென்று பார்க்காமல் எப்படி வரைந்திருக்கமுடியும்? மேலே இருந்து வந்த வேற்று கிரக வாசிகள் தான் உதவியிருக்கவேண்டும் மேலும் பிரமிட்களை கட்டியிருக்கவேண்டும் என்பதற்கு பலமான சான்றுகள் உள்ளன எனினும் நிரூபிக்க முடியவில்லை. இனி உலகின் முதல் வரைபடம் பற்றி பார்ப்போம்.



உலகின் முதன்மையான மிகவும் பழமையான நாகரிகமாக கருதப்படும் பாபிலோனியர்களால் வரையப்பட்டது. மேலும் உலகின் முதல் map ஆகவும் இது கருதப்படுகிறது.வரையப்பட்ட ஆண்டு தெளிவாக தெரியவில்லை.


இரண்டாம் நூற்றாண்டு வரைபடம்:









எகிப்து நாட்டை சேர்ந்த Claudius Ptolemaeus (Ptolemy) என்ற கணிதவியல் அறிஞரால் கி.பி 150 இல் வரையப்பட்டது.


நான்காம் நூற்றாண்டு வரைபடம்:








                நான்காம் நூற்றாண்டில் வரையப்பட்ட ரோம் நாட்டு map. மேலும் இது ஐரோப்பா, ஆசியாவின் ஒரு பகுதி(இந்திய), வட ஆப்ரிக்கா கவர் செய்கிறது.


ஆறாம் நூற்றாண்டு வரைபடம்:







அலெக்சாண்ட்ரியா நாட்டை சார்ந்த cosmas Indicopleustes என்ற கிரேக்க துறவியால் கி.பி 550 ஆண்டு வரையப்பட்ட வரைபடம். மேலும் இந்தியாவுடன் வாணிப தொடர்பு வைத்திருந்த இவர் பல முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இவரின் கருத்துப்படி  உலகம் தட்டையானது


ஏழாம் நூற்றாண்டு வரைபடம்:




 



          ஸ்பெயின் நாட்டு அறிவியலாளரால் வரையப்பட்ட வரைபடம் இது வரைந்தவர் பெயர் மற்றும் ஆண்டு தெரியவில்லை..



எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து அடுத்த பதிவில் பார்ப்போமா....





வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)




 
ஒரு வெயில் நாளில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து ஆடிக்கொண்டிருந்தது.


அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் புற்றுக்குச் சென்றுகொண்டிருந்தது.அதைப் பார்த்த வெட்டுக்கிளி ...'இப்போது என்ன அவசரம்...சிறிது நேரம் என்னைப்போல நீ வெயிலில் விளையாடலாமே' என்றது.

அதற்கு எறும்பு...மழைக்காலத்தில் வெளியே எவரும் செல்லமுடியாது...அதனால் அந்நேரம் தேவையான உணவை இப்போதே நான் என் புற்றில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்' என்றது.

'மழைக்காலம் வர இன்னும் நாள் இருக்கிறது'என்று கூறிக்கொண்டே...வெட்டுக்கிளி நடனமாட ஆரம்பித்தது.

மழைக்காலமும் வந்தது.

'தான் சேகரித்த உணவை உண்டு ..தன் புற்றுக்குள்ளேயே இருந்தது எறும்பு....

அப்போது உணவு ஏதும் கிடைக்காததால் எறும்பிடம் வெட்டுக்கிளி வந்து ..சிறிது உணவளிக்க வேண்டியது.

தன்னிடமிருந்த அரிசியில் சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு ....'அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. அப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று எனக்கும் ஏன் இன்று உனக்கும் உதவியது...இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல்..வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்' என்றது.

சோம்பலில்லாமல் கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.



Thursday, October 10, 2013

வியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு!


பால்வெளியில் வியாழனை விடவும் மிகப் பெரிய கோள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
பால்வெளி அண்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும், கோள்கள் உருவான விதம் குறித்தும் விண்வெளி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


அத்துடன் வானவெளியில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து இவர்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம்.


வால் நட்சத்திரங்களின் தோற்றம், அவற்றின் பயணம் போன்ற பல தகவல்களை ஆய்வாளர்கள் தந்துள்ளனர்.


வானவெளியில் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோள் இருப்பது தெரிந்தது.


தொடர்ந்து இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது, ஜப்பான், நியூசிலாந்து, போலந்து மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளிலிருந்தும் இந்த கோள் தென்பட்டது.


இதையடுத்து புதிய கோள் இருப்பதை உறுதி செய்ய ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர்.


இதன் பயனாக பூமியிலிருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் வியாழன் கோளைவிட எட்டு மடங்கு பெரிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறுகையில், வான்வெளியில் புதிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இக்கோளானது “எம்.ஓ.- ஏ.2011 - பி.எல்.ஜி. – 322” என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் சுற்று வட்டப்பாதை குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


 
back to top