.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, October 12, 2013

இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது - இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதற்கு!!


பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

12 - varon arora u n award winner

 


உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களே பங்கேற்க முடியும். இந்த விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ. அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாமாடோவின் தோரே நேற்று அறிவித்தார்.
இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்வு பெற்றார். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.


மேலும் வியட்னாம், டிரினிடாட் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தேர்வாகி இருக்கிறார்கள். வெற்றி பெற்ற 10 பேரும் நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Indian youth wins UN award

*********************************************
 


A young man from India is among 10 people from around the world selected for a prestigious United Nations award in recognition of their work as entrepreneurs and use of technology to change the world. 

நம் மரணத்தை கணித்து சொல்லும் ‘கடிகாரம்’!


ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை அவர் மரணமடையும் நேரத்திற்கு நெருங்கிய செகன்ட வரை கணித்து கூறக்கூடிய கைக்கடிகாரமொன்றை ஸ்வீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். மேலும் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


ஆனால், தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌ கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூற்ப்படுகிறது.




12 - tec deathwatch-

 


பிரெடிக் கொல்டிங் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம் ‘மரண கைக்கடிகாரம்’ என அழைக்கப்படுகின்றது. இந்தக் கைக்கடிகாரம் மரணமடையப் போகும் நேரத்தை கணித்துக் கூறுவது மட்டுமல்லாது மரணமாகும் கணத்தை கவுண்ட்- டவுன் செய்யவும் ஆரம்பிக்கிறது.


இந்த கைக்கடிகாரம் அதனை அணிந்துள்ளவரின் வயது, மருத்துவ பிரச்சினைகள் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கங்கள் என்பன தொடர்பான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பயன்பாட்டாளர் பதிலளித்ததும் அது அத்தகவல்களை பகுப்பாய்வு செய்து அவர் மரணமடையும் தருணத்தை கணக்கிட்டு எண்ண ஆரம்பிக்கிறது. இந்த ரிக்கர் கைக்கடிகாரத்தின் விலை 59 அமெரிக்க டாலராகும். இந்த கைக்கடிகாரமானது எஞ்சியுள்ள நம் வாழ்வின் அளவை அறிந்து அதனை பயனுள்ளதாக வாழ பயன்பாட்டாளர்களுக்கு உதவும் என பிரெடிக் கூறுகிறார்.


அத்துடன் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஆனால், தற்போதுள்ள முறையில் 
இறந்த நேரம் உத்தேசமாகவே  ‌கொடுக்கப்படுகிறது. 


இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூறுகிறார்.

Friday, October 11, 2013

'சுட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை யானைகள்'!



யானைகள், மற்ற விலங்குகளைப் போலல்லாமல், ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது.


ஜிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம், யானைகள், முழுமையாக நிரப்பப்பட்ட உணவு வாளிகளை, மனிதர்கள் சுட்டிக்காட்டும்போது, காலியான உணவு வாளிகளிடமிருந்து பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டவையாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.


சுட்டிக்காட்டும் சைகை, மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவு, உயிர்வாழ மிகவும் முக்கியமாக உள்ள சிக்கலான சமூகங்களில் , மிகவும் பயனுள்ள ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்று மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ந்திருக்கின்றன என்பதை இது காட்டுவதாக இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய ஸ்காட்லாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்ட் பைர்ன் கூறினார்.

அமைதிக்கான நோபல் பரிசு!


2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.

11 - nobel pease winner

 


இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.

 
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (ஓ.பி.சி.டபுள்யூ) வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.


நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு 1997ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றும் இந்த அமைப்பின் ரசாயன ஆயுத ஒழிப்பு குழுவினர், தற்போது சிரியாவில் ரசாயன ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Nobel Peace Prize 2013:

******************************************
 

The weapons watchdog the Organisation for the Prohibition of Chemical Weapons has been announced as the winner of the Nobel Peace Prize 2013.

 
back to top