
வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்தது. சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக பாய்லின் புயல் தாக்குதலில் இருந்து மாபெரும் உயிரிழப்பை ஒடிசா மாநில அரசு வெற்றிகரமாக தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்கள் பாய்லின் கோரத் தாண்டவத்தால்...