.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 14, 2013

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்!

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்தது. சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.


14 - odisa

 


இதன் காரணமாக பாய்லின் புயல் தாக்குதலில் இருந்து மாபெரும் உயிரிழப்பை ஒடிசா மாநில அரசு வெற்றிகரமாக தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்கள் பாய்லின் கோரத் தாண்டவத்தால் பலத்த சேதத்தை சந்தித்து நிலை குலைந்து போய் உள்ளன.


பாய்லின் புயல் தாக்குதலில் சிக்கி 23 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாய்லின் புயல் நேற்று காலை ஒடிசாவில் இருந்து பீகாருக்கு சென்றது. இதைத் தொடர்ந்து ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


மக்களின் உயிரைக் காப்பாற்றவே மீட்புப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்படும் என்று ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அதற்கு ஏற்ப ராணுவ வீரர்களும், தேசிய மேலாண்மை பேரிடர் மீட்புக் குழுவினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள்.


பாய்லின் புயலால் ஒடிசாவில் மட்டும் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்ட மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.


பாய்லின் நடத்திய கோரத்தாண்டவத்தில் சுமார் 2½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக அழிந்து விட்டன.


பாய்லின் சீற்றத்துக்கும், மழை வெள்ளத்துக்கும் 14,500 கிராமங்களில் மக்களின் சொத்துக்களுக்கு கடும் நாசம் ஏற்பட்டுள்ளது. 15 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புயல் வேகத்தால் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.


5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டன. மீனவர்களின் வாழ்வா தாரங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 2400 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவு, உடைக்கு ஏங்கியபடி உள்ளனர். ஒடிசா மாநில அரசு இத்தகைய சேதத்தை எதிர்பார்த்து 5 டன் உணவு தானியங்களை கை இருப்பு வைத்திருந்தது.


அந்த உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒடிசா மாநில அரசு மிகத் திறமையாக எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருந்ததால், மாபெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.


அதோடு நிவாரண பணிகளும் திட்டமிட்டப்படி தொடங்கி நடந்த வருகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொடுத்து விடுவோம் என்று ஒடிசா மாநில அரசு அறி வித்துள்ளது.

‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்!

நடிகர் விஜய்க்கும் ஆட்சியாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருவது தமிழகத்துக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் என்பதற்காகவே அவருடைய சுறா, வேட்டைகாரன், காவலன் போன்ற படங்களை அன்றைய ஆட்சி முடக்கியதால், அவர் அதிமுகவிடம் சென்று சரண் அடைந்தார். பின்னர் ஆட்சி மாறியபின், அவருடைய பிறந்தநாள் அன்று நடக்க இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்து கூட்டத்தை நடத்தவிடாமல் அதிமுக ஆட்சியும் கடந்த ஆட்சி போல தொந்தரவு செய்தது.



 தலைவா படத்துக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்து படத்தை சிறிதுகாலம் முடக்கி வைத்தது என ஆட்சியாளர்களிடம் படாதபாடு பட்டுவந்தார் விஜய்.இதற்கிடையில் சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் என்ன பேசப போகிறார் என்பதை முன்னரே எழுதி வாங்கி படித்துப் பார்த்துதான் அனுமதித்தார்களாம்.


14 - vijay

 


இதையெல்லாம் எண்ணிப்பார்த்த விஜய், இனிமேல் அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தால்தான் தன்னுடைய எதிர்காலத்திற்கு நல்லது என்று முடிவு செய்துள்ளார் என்றும் எந்த ஆட்சி வந்தாலும் நம்மை வளரவிட மாட்டார்கள். எனவே இப்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்தே தீரவேண்டும் என்ற முடிவில் உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன..


எனவே ரசிகர் மன்ற தலைவர்களுடன் ஒரு ரகசிய மிட்டிங் நடத்த திட்டமிட்டார். தமிழ்நாட்டில் எங்கு மீட்டிங் நடந்தாலும் சிக்கல் என்பதை அறிந்து, ஜில்லா பட ஷூட்டிங் நடக்கும் கேரளாவிற்கு ரசிகர் மன்ற தலைவர்களை மட்டும் ரகசியமாக வரவழைத்து கேரள தலைநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிகிறது.அபபோது “நாம் யார் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய சக்தியை வெளிக்காட்டினால்தான் தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் நம்மை பார்த்து பயப்படும். அதற்கு இப்போதிருந்தே நம்மை நாம் தயார் செய்ய வேண்டும்” என ரசிகர்களிடையே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளாராம்.


இந்த ரகசிய மீட்டிங் முடிந்து கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில். இப்போதுதான் கோலிவுட்டில் சிறிதுசிறிதாக ரகசியம் கசிந்து வருகிறது என்பது அடிசினல் தக்வல்.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்!

அடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. Samsung Galaxy Fame:

3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.



2. LG Optimus L4 II Dual: 

இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3.8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.



3. Nokia Lumia 520:

இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன்.
மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.


4. Panasonic T11:

நல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.


5. Micromax Canvas Fun A76:

1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக் ஆனது தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது.


இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. 


இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல் பெயர்களை காட்டாதவாறு மாற்றம் செய்யும் வசதியை நிறுத்தியிருந்தது. 


அதே போல தற்போது இந்த வசதியினை (Search Privacy Setting) முற்றிலுமாக நிறுத்தப்போவதாக கடந்த வியாழக்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.


 
back to top