.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 15, 2013

கவுதம் மீது சூர்யாவுக்கு என்ன கோபம்? பகீர் தகவல்!

கவுதம் மேனன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சூர்யா. சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தில் நடிக்க முடியாமல்போனால் அல்லது நடிக்க விரும்பாவிட்டால் பேசாமல் அதிலிருந்து விலகிவிடுவார்கள். கவுதம் இயக்க இருந்த படங்களே அதற்கு உதாரணம் கூறலாம். கவுதம் படத்தில் அஜீத் நடிக்க இருந்தார். ஆனால் அந்த முடிவை அஜீத் மாற்றி, சரணுக்கு வாய்ப்பு தந்தார். யோவான் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை கவுதம் இயக்க, விஜய் நடிக்க இருந்தார்.




அந்த படமும் வேண்டாம் என விஜய் ஒதுங்கிவிட்டார். இதுபோல் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இப்போது நடந்தது இண்டஸ்ட்ரிக்கே ஆச்சரியம் தருகிறது. திடீரென நேற்று முன்தினம் இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டார் சூர்யா. அதில், கவுதமின் திசை வேறு. எனது திசை வேறு. அவரது துருவ நட்சத்திரம் படத்தில் நான் நடிக்கவில்லை. கதையை உருவாக்காமல் 6 மாதங்கள் என்னை காக்க வைத்துவிட்டார் என கோபமாக கூறியிருக்கிறார்.


கவுதமின் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதில்லை என்பது எப்போதோ முடிவாகிவிட்டது. அதை சூர்யாவே சூசகமாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் லிங்குசாமி படத்தில் நடித்தபடியே நலன் குமாரசாமி இயக்கும் படத்திலும் நடிக்க அவர் திட்டமிட்டார். ஆனால் இப்போது திடீரென அறிக்கை மூலம் கவுதம் படத்திலிருந்து விலகியதை அவர் சொல்ல என்ன காரணம் என கோடம்பாக்கத்தில் விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல் கிடைத்தது.


நீதானே என் பொன்வசந்தம் படத்தின் படுதோல்விக்கு பிறகு கவுதமுக்கு அடுத்த படம் இயக்க பைனான்ஸ் சிக்கல் ஏற்பட்டது. அதை சரிகட்ட ஒரே வழி சூர்யாதான் என முடிவு செய்தார். சூர்யா டாப் ஹீரோ. அவரை வைத்து படம் எடுக்க தொடங்கினால், பைனான்சியர்கள் தானாகவே கியூவில் நிற்பார்கள் என்பது கவுதமுக்கு தெரியும். நட்பின் காரணமாக சூர்யாவின் கால்ஷீட்டையும் எளிதில் வாங்கிவிடலாம் என முடிவு செய்தார்.


சூர்யாவும் கவுதமுக்கு உதவ முன்வந்தார். ஆனால் கவுதம் சொன்ன கதை பிடிக்காமல் சூர்யா ஒதுங்க ஆரம்பித்தார். ஆனாலும் கவுதம், சூர்யா படத்தை இயக்கப்போவதாக அடிக்கடி டுவிட்டரில் குறிப்பிட்டு வந்தார். பைனான்ஸ் பிடிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். கதையே பிடிக்காமல் நான் ஒதுங்கியபிறகு என் பெயரில் பைனான்ஸ் பிடிப்பதா என கடும் கோபமாகிவிட்டாராம் சூர்யா. இந்த கோபமே அவரது திடீர் அறிக்கைக்கு காரணம் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக கூடாது:மலேசியா கோர்ட் தீர்ப்பு!

‘அல்லா’என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.


15 -allah word

 


மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களது கடவுள்களை குறிக்கும் வகையில் மலாய் மொழியில் ‘அல்லா’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சொல் அரபு மொழியில் இருந்து மலாய் மொழிக்கு மருவி வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கத்தோலிக்க கிருஸ்துவ நாளிதழான ‘தி ஹெரால்ட்’ கடந்த 2009-ம் ஆண்டு கடவுளை குறிப்பிட ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தது.இதனையடுத்து, மலேசியாவில் பெரும் கலவரம் வெடித்தது. மசூதிகள் மற்றும் கிருஸ்துவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக கீழ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது.மலேசியா பைபிள்களில் கூட கடவுளை குறிப்பிடுகையில் ‘அல்லாஹ்’ என்று கூறப்பட்டுள்ளதாக ‘தி ஹெரால்டு’ நாளிதழ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.


இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அந்த சொல்லை மலேசியா என்ற தனிநாடு உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே பல்வேறு மதத்தினரும் பயன்படுத்தி வந்துள்ளதால், அதேபோன்று இனியும் பயன்படுத்த தடையில்லை என்று தீர்ப்பளித்தார்.


உடனே  இந்த தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த அப்பீல் மனுவின் மீது நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அப்போது “‘அல்லா’ என்ற சொல், தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும்.


கிருஸ்துவ மதத்தின் நம்பிக்கையின்படி இந்த சொல் அம்மதம் சார்ந்த ஒரு பகுதியாக காணப்படவில்லை. எனவே, முஸ்லிம்கள் மட்டுமே இந்த சொல்லை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இதன் பயன்பாடு சமூகத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாகி விடும்” என்று நீதிபதி முஹம்மது அபாண்டி அலி தீர்ப்பு வ்ழங்கியுள்ளார். மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது.



மேலும் மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர்.


Christian newspaper must not use ‘Allah’, Malaysian court rules


#########################################################



A Christian newspaper in Malaysia may not use the word “Allah” to refer to God, a court has ruled, in a landmark decision on a matter that has fanned religious tension and raised questions over minority rights.Monday’s unanimous decision by three Muslim judges in Malaysia’s appeals court overturned a 2009 ruling by a lower court that allowed the Malay language version of the newspaper the Herald to use the word Allah – as many Christians in Malaysia say has been the case for centuries.

Monday, October 14, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 3...!

பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம். ஒரு வித்தியாசமான உலக வரைபடம், இதில் இந்தியா, ஆப்ரிக்கா, அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளின் அமைவிடங்களை காணலாம். நவீன உலக வரைபடங்களை பார்த்த நமக்கு இந்த வரைபடம் சற்று நகைச்சுவையாக தான் தெரியும்.




 

துருக்கியர்களால் பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது போன்று இது வரையப்பட்டிருகிறது




 


                       கி.பி 1040 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்




 

Isidorean mappamundi,11th century 

 

 

Y-O map, from Macrobius' Commentarium in somnium, 11th century.

 

 

 

T-O map, from 11th century MS. edition of Beatus' Commentary

 

 

St. Sever world map after Beatus, 1030 A.D.

 

 

al-Biruni world map of the distribution of land and sea, 1029 A.D.

 

 

Ibn al-Wardi world map, 1001 A.D.

 


பன்னிரெண்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




 


                                  கி பி 1192 இல் வரையப்பட்ட உலக வரைபடம்




 


      12 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆசிய கண்டத்தின் வரைபடம்


 

             ஜெர்மானியர்களால் கி.பி 1190 இல் வரையப்பட்ட உலக வரைபடம்




 
இத்தாலியர்களால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் 
 


Abu Abd Allah Muhammad al-Idrisi என்னும் அரபியரால் கி பி 1154 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம் 
 

Macrobian World Map from a French MS, 12th century

 

 

Map of Jerusalem, 12th century

 

 

Beatus world map, London copy, 1109 A.D.

 

 

Beatus world map, Turin copy, 1150 A. D.

 

 

Beatus world map, Altamira copy, 12 th century.
(oriented with East at the top)

 

 

zonal world map, Lambert of St. Omer, Martianus Capella,Ghent copy,1120 A.D.

 



[Map of China and the Barbarian Countries]
.1137 A.D.

தொடரும்...

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வரலாறு!



சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.



கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.



நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது 'நாவல் பட்டிணம்' -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
 
back to top