.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 15, 2013

புது அம்சங்களுடன் G Pad 8.3 அறிமுகம்!

பிரபல எல்ஜி நிறுவனம் G Pad 8.3 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.


தென் கொரியாவில் விற்பனை செய்யப்படும் இந்த டேப்லெட், இந்தாண்டு இறுதிக்குள் 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.


இது கறுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் வரும்.


முக்கிய அம்சங்கள்


1.7Ghz Qualcomm Snapdragon 600 CPU.

2GB RAM.

16GB internal storage.

microSD card slot.

5 megapixel rear-facing camera.

1.2 megapixel front facing camera.

8.3 inch 1920 x 1200 HD IPS display.

Android Jelly Bean 4.2.2.


கதவு எங்க போச்சு! நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் பரபரப்பு!

அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. 


இதையடுத்து திரும்பி பார்த்த விமானி விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். 


விமானத்தை தாழ்வாக பறக்க செய்து கதவு எங்கே விழுந்திருக்கிறது என்று தேடினார். 


இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். 


இந்நிலையில், அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டல் மீது விமானத்தின் கதவு விழுந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார். 


எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை சரியில்லாதபோது ஒதுக்க வேண்டிய உணவுகள்!

விடுமுறை நேரம், ஓய்வு நேரம் போன்ற நேரங்களில் நமக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்தோ அல்லது வெளியில் வாங்கியோ தருவார்கள்.நாமும் வஞ்சனை இல்லாமல் அனைத்தையும் ஒரு கட்டு கட்டுவோம். அதனால் பெரும்பாலும் இக்காலத்தில் அடிக்கடி வந்து போகும் சளியும், காய்ச்சலும் உங்களை பிடித்து கொள்ளும் காலம் இது.


இந்த சளியை போக்க பூண்டு, இஞ்சி, நீர் சேர்த்தல் என பல இயற்கை சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது.


இருப்பினும் எந்த உணவு வகையை தவிர்த்தால் இப்படி நோய்வாய் படாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வகை உணவுகளை கண்டுபிடித்து அவைகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால் வெகு விரைவிலேயே குணம் அடையலாம்.


சாதாரண நேரத்தை விட நோய்வாய் பட்டிருக்கும் போது இதனை தவிர்க்க சொல்வதால் அந்நேரத்தில் அதனை சுவைக்க அதிக ஆவல் ஏற்படுவது மனித இயல்பு தான்.


ஆனால் நாவை கட்டுப்படுத்தி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்தால் தான், சீக்கிரமே குணம் அடைய முடியும். சரி, இப்போது நோய்வாய்பட்டிருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று பார்ப்போம்.


இனிப்புகள்

நோய்வாய் பட்டிருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக்லெட் அல்லது பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இனிப்புகளில் அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். சில நேரம் டெசெர்ட் கூட நோய்வாய் படச் செய்யும்.

பதப்படுத்திய இறைச்சி

பதப்படுத்திய இறைச்சி என்றால் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியாகும். இதனை உப்புக்கண்டம் என்று நாம் சொல்வோம்.

இப்படி உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில் உள்ள நைட்ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். மேலும் நோய்வாய் பட்டிருக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த நைட்ரைட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் 

ஆரோக்கியத்தை புதுப்பிக்க ஆரஞ்சு ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் நுண் ஊட்டப்பொருள் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அதனை ஜூஸாக மாற்றும் போது, சோடாவை போல அதிலும் அதிக அளவில் சர்க்கரை வந்துவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. நோய்வாய் பட்டிருக்கும் போது இனிப்புகளை போல சர்க்கரையும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்நேரத்தில் ஆரஞ்சில் உள்ள அமிலமும் வயிற்றை பாதிக்கலாம்.

நட்ஸ்

நோய்வாய் பட்டிருக்கும் போது பல வகையான நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வேர்க்கடலைப் பருப்புகள் அளவுக்கு அதிகமான சளியை உண்டாக்கிவிடும்.

ஏற்கனவே சளியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது, இது கூடுதல் அவஸ்தையாக மாறிவிடலாம் அல்லவா? மேலும் நட்ஸ் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மாட்டிறைச்சி

நட்ஸை போலவே மாட்டிறைச்சியும் உடலை பாதிக்கும். சளி இருக்கும் போது பர்கர் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால் சளியானது, மூக்கு மற்றும் நெஞ்சை விட்டு செல்ல மனமில்லாமல் இன்னும் தங்கிவிடும்.
மேலும் மாட்டிறைச்சியில் கெட்டியான கொழுப்பு இருப்பதால், அதனை கரைத்து செரிமானம் செய்வதற்கு, உடல் சிரமப்படும். உடல்நலம் சரியில்லாத போது, உடல் ஏற்கனவே கடினமாக உழைத்து கொண்டிருக்கும். இந்நேரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மதுபானம்

மதுபானம் என்பது இரசாயன மூளைத்திறன் குறைப்பு மருந்து. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உண்ணும் அனைத்து மருந்தையும் செயலிழக்க செய்துவிடும். மேலும் பல மதுபானம் அமிலத்தன்மை கொண்டவையாகும். இது வயிற்றையும் பாதிப்படையச் செய்யும்.

காப்ஃபைன்

செரிமானத்திற்காக காப்ஃபைனை உடைத்தெறியவும் உடல் கஷ்டப்படும். சோடா, காபி மற்றும் சாக்லெட் உட்கொள்ளுதலை குறைத்துக் கொண்டால், உடல் விரைவிலேயே குணமடையும். காப்ஃபைன் கலந்த பொருட்களில் சர்க்கரையும் கலந்துள்ளதால், கண்டிப்பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்

நோய்வாய் பட்டிருக்கும் போது, உங்களுக்கு காரசாரமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆனால் அதையும் மீறி, அதனை உட்கொண்டால் சளி இன்னும் மோசமடையத் தான் செய்யும். அதிலும் சளி இருக்கும் போது, வாய்வு அல்லது வயிற்று பிரச்சனை இருந்தாலே ஒழிய அவைகளை எடுத்துக் கொள்ள கூடாது.

பச்சை உணவுகள்

உடல்நிலை முன்னேறுவதற்கு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த காய்கறிகள் சமைக்கப்பட்டிருக்க வேண்டும். காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொண்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும்.

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் தான் அதிக அளவிலான கொழுப்புகள் உள்ளது. அதனால் அவை செரிமானத்திற்கு கஷ்டத்தை தருவதோடு நிற்காமல், நோய்வாய் பட்டிருக்கும் சிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்திவிடும்.


எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் வளைமேற்பரப்பினைக் கொண்ட G-Flex!

எல்.ஜி நிறுவனமானது வளைந்த மேற்பரப்பினை உடைய தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்துகின்றது.


6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 0.44 மில்லி மீற்றர்கள் தடிப்பையும், 7.2 கிராம் நிறையையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. 


இதற்கிடையில் சம்சுங் நிறுவனமும் தனது வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
back to top