.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 15, 2013

ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம்!

ஆரோக்கியத்தை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் அன்றாட சந்தோஷத்தை சாட்டிலைட் சானல்களிலும் அடகு வைத்துவிட்ட இன்றைய சமூகம் நிழலைத் தொடரும் நிஜமாக இருக்கிறது.பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தாலும் குழந்தைப் பிறப்பில் எப்போதும் ஏற்றத்துடன்தான் இருக்கிறது. விஞ்ஞானம் இன்று ஒவ்வொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து விட்டுதான் குழந்தையை வெளியில் எடுக்கிறது.


15 - health preganand

 


ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம் புகட்டப்படுகின்றன என்பது புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாக சமூகத்தில் ஆகிக் கொண்டிருக்கிறது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைப்படத்திற்காக தற்கொலை செய்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறோம்.


பகட்டுப் படிப்பு, 12 மணி நேர அலுவல், கைபேசிக் காதல், கணிப்பொறி ஜாதகம் பார்த்து கல்யாணம் என இன்றைய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.பணம் சம்பாதிக்கப் போய் நோய் பெற்று, நோயைத் தீர்க்கப் பணம் கொடுத்து என இன்றைய மனிதன் வேலைகளின் விளைவால் இறுதியில் கடன்பட்டே நிற்கிறான். 


இந்த மாதிரி சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமை கண்ணீரைத் தாண்டிய கொடுமை. 20 வருடங்கள் முன்பு வரை என் அம்மா, என் நண்பனின் அம்மா எல்லோரும் பல குழந்தைகளைப் பெற்று எடுத்தவர்கள். அத்தனையும் சுகப் பிரசவம். இன்று என் சகோதரியின் தோழிகளுக்காட்டும், நண்பர்களின் சகோதரிகளுக்காகட்டும் எனக்குத் தெரிந்த வரையில் சுகப் பிரசவம் என்பதே இல்லை.


ஏவுகணைகளைச் செவ்வாய்க்கு அனுப்பத் தெரிந்த இன்றைய விஞ்ஞானத்திற்கு ஒரு சிசுவை கர்ப்பத்திலிருந்து சுக முறையில் எடுக்கத் தெரியவில்லை. நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது என்பது அடுத்தடுத்த நோய்களுக்கு நாம் எடுத்து வைக்கும் படிக்கட்டு என்று சொன்னால் அது மிகையல்ல.


துரித உணவுகள் தமிழனின் சரிதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. நோய்களுக்குத் தீர்வு மருந்தல்ல. நோயாளியின் நடத்தை. குழந்தையின் பிறப்புக்கு தாய் கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய, குழந்தையின் பிறப்புக்கு தாய்க்கே கருவி தேவைப்படக் கூடாது. கர்ப்பத்தில் அவளுக்கு வேண்டிய முக்கிய மருத்துவம் ஆரோக்கியம் மட்டுமே. உடலுழைப்பு, தியானம், சக்தியிழக்காத காய்கறிகள், பழங்கள், கீரை இவையே வயிற்றிலிருக்கும் சிசுவை வலிமையானதாக்கும். எதையும் சுலபமாக அணுகும் மனம், சிரித்துப் பேசும் குணம் இவையிருந்தாலே நிச்சயமாக ஒரு பெண்ணால் சுகப் பிரசவம் என்னும் சிகரத்தை அடைய முடியும்.



இதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களின் உடம்பில் சுகப் பிரசவம் நிகழ வாய்ப்பில்லாத பல சிக்கல் நிலைகள் இருக்கலாம். அது வேறு. ஆனால், நம்மேல் நமக்கில்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும்?
உடற்பயிற்சிக் கூடம் சென்று உடம்பைக் குறைக்க நாம் மாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயார். ஆனால் ஒரு காசு செலவில்லாமல் ஒரு மணி நேரம் மைதானத்தில் தொடர்ந்து ஓடினால் சில மாதங்களில் உடம்பின் அத்தனைக் கொழுப்பும் இறங்கி அது நாம் இட்டக் கட்டளையை செய்யும். ஆனால், பகட்டாய் வாழ விரும்பும் மனிதன் அதை விரும்புவதில்லை.


பெண்களே! மாற்றுங்கள். நம்பிக்கை ஊசியை உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவிலும் ஏற்றுங்கள். உங்கள் உடற்பயிற்சியை துவங்குங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது அது இருக்கட்டும்.நீரால் குளிக்கும் முன் வேர்வையால் உடல் கசடுகளைக் கழுவுங்கள். சிரித்து பேசுங்கள். ஓய்வு நேரத்தில் சோம்பேறியாக இருக்காமல் விளையாடியே பொழுதைப் பொன்னாக்குங்கள்.


கீரை, கேழ்வரகு, கம்பு, சோளம் – நம் உடல் நல வரலாறு. கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் இருந்து ஒதுக்காதீர்கள்.அது உங்கள் கேச நிறத்தையும், பற்களையும் உங்களிலிருந்து ஒதுக்கி விடும். யோகம் வாழ்வின் முக்கிய ஆதாரம். வாழும் முறையை கற்றுக் கொண்டு நடக்காதீர்கள். நடந்து நடந்து கற்றுக் கொள்ளுங்கள்.

புது அம்சங்களுடன் G Pad 8.3 அறிமுகம்!

பிரபல எல்ஜி நிறுவனம் G Pad 8.3 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.


தென் கொரியாவில் விற்பனை செய்யப்படும் இந்த டேப்லெட், இந்தாண்டு இறுதிக்குள் 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.


இது கறுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் வரும்.


முக்கிய அம்சங்கள்


1.7Ghz Qualcomm Snapdragon 600 CPU.

2GB RAM.

16GB internal storage.

microSD card slot.

5 megapixel rear-facing camera.

1.2 megapixel front facing camera.

8.3 inch 1920 x 1200 HD IPS display.

Android Jelly Bean 4.2.2.


கதவு எங்க போச்சு! நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் பரபரப்பு!

அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. 


இதையடுத்து திரும்பி பார்த்த விமானி விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். 


விமானத்தை தாழ்வாக பறக்க செய்து கதவு எங்கே விழுந்திருக்கிறது என்று தேடினார். 


இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். 


இந்நிலையில், அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டல் மீது விமானத்தின் கதவு விழுந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார். 


எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை சரியில்லாதபோது ஒதுக்க வேண்டிய உணவுகள்!

விடுமுறை நேரம், ஓய்வு நேரம் போன்ற நேரங்களில் நமக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்தோ அல்லது வெளியில் வாங்கியோ தருவார்கள்.நாமும் வஞ்சனை இல்லாமல் அனைத்தையும் ஒரு கட்டு கட்டுவோம். அதனால் பெரும்பாலும் இக்காலத்தில் அடிக்கடி வந்து போகும் சளியும், காய்ச்சலும் உங்களை பிடித்து கொள்ளும் காலம் இது.


இந்த சளியை போக்க பூண்டு, இஞ்சி, நீர் சேர்த்தல் என பல இயற்கை சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது.


இருப்பினும் எந்த உணவு வகையை தவிர்த்தால் இப்படி நோய்வாய் படாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வகை உணவுகளை கண்டுபிடித்து அவைகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால் வெகு விரைவிலேயே குணம் அடையலாம்.


சாதாரண நேரத்தை விட நோய்வாய் பட்டிருக்கும் போது இதனை தவிர்க்க சொல்வதால் அந்நேரத்தில் அதனை சுவைக்க அதிக ஆவல் ஏற்படுவது மனித இயல்பு தான்.


ஆனால் நாவை கட்டுப்படுத்தி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்தால் தான், சீக்கிரமே குணம் அடைய முடியும். சரி, இப்போது நோய்வாய்பட்டிருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று பார்ப்போம்.


இனிப்புகள்

நோய்வாய் பட்டிருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக்லெட் அல்லது பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இனிப்புகளில் அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். சில நேரம் டெசெர்ட் கூட நோய்வாய் படச் செய்யும்.

பதப்படுத்திய இறைச்சி

பதப்படுத்திய இறைச்சி என்றால் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியாகும். இதனை உப்புக்கண்டம் என்று நாம் சொல்வோம்.

இப்படி உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில் உள்ள நைட்ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். மேலும் நோய்வாய் பட்டிருக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த நைட்ரைட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் 

ஆரோக்கியத்தை புதுப்பிக்க ஆரஞ்சு ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் நுண் ஊட்டப்பொருள் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அதனை ஜூஸாக மாற்றும் போது, சோடாவை போல அதிலும் அதிக அளவில் சர்க்கரை வந்துவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. நோய்வாய் பட்டிருக்கும் போது இனிப்புகளை போல சர்க்கரையும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்நேரத்தில் ஆரஞ்சில் உள்ள அமிலமும் வயிற்றை பாதிக்கலாம்.

நட்ஸ்

நோய்வாய் பட்டிருக்கும் போது பல வகையான நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வேர்க்கடலைப் பருப்புகள் அளவுக்கு அதிகமான சளியை உண்டாக்கிவிடும்.

ஏற்கனவே சளியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது, இது கூடுதல் அவஸ்தையாக மாறிவிடலாம் அல்லவா? மேலும் நட்ஸ் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மாட்டிறைச்சி

நட்ஸை போலவே மாட்டிறைச்சியும் உடலை பாதிக்கும். சளி இருக்கும் போது பர்கர் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால் சளியானது, மூக்கு மற்றும் நெஞ்சை விட்டு செல்ல மனமில்லாமல் இன்னும் தங்கிவிடும்.
மேலும் மாட்டிறைச்சியில் கெட்டியான கொழுப்பு இருப்பதால், அதனை கரைத்து செரிமானம் செய்வதற்கு, உடல் சிரமப்படும். உடல்நலம் சரியில்லாத போது, உடல் ஏற்கனவே கடினமாக உழைத்து கொண்டிருக்கும். இந்நேரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மதுபானம்

மதுபானம் என்பது இரசாயன மூளைத்திறன் குறைப்பு மருந்து. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உண்ணும் அனைத்து மருந்தையும் செயலிழக்க செய்துவிடும். மேலும் பல மதுபானம் அமிலத்தன்மை கொண்டவையாகும். இது வயிற்றையும் பாதிப்படையச் செய்யும்.

காப்ஃபைன்

செரிமானத்திற்காக காப்ஃபைனை உடைத்தெறியவும் உடல் கஷ்டப்படும். சோடா, காபி மற்றும் சாக்லெட் உட்கொள்ளுதலை குறைத்துக் கொண்டால், உடல் விரைவிலேயே குணமடையும். காப்ஃபைன் கலந்த பொருட்களில் சர்க்கரையும் கலந்துள்ளதால், கண்டிப்பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்

நோய்வாய் பட்டிருக்கும் போது, உங்களுக்கு காரசாரமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆனால் அதையும் மீறி, அதனை உட்கொண்டால் சளி இன்னும் மோசமடையத் தான் செய்யும். அதிலும் சளி இருக்கும் போது, வாய்வு அல்லது வயிற்று பிரச்சனை இருந்தாலே ஒழிய அவைகளை எடுத்துக் கொள்ள கூடாது.

பச்சை உணவுகள்

உடல்நிலை முன்னேறுவதற்கு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த காய்கறிகள் சமைக்கப்பட்டிருக்க வேண்டும். காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொண்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும்.

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் தான் அதிக அளவிலான கொழுப்புகள் உள்ளது. அதனால் அவை செரிமானத்திற்கு கஷ்டத்தை தருவதோடு நிற்காமல், நோய்வாய் பட்டிருக்கும் சிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்திவிடும்.


 
back to top