.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, October 19, 2013

Lenovo அறிமுகப்படுத்தும் Windows 8.1 டேப்லட்!

Lenovo நிறுவனம் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய வடிவமைப்பான Miix2 எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.


8 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டின் பார்வைக் கோணமானது 178 டிகிரியாக காணப்படுகின்றது. 


மேலும் உயர் ரக கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்களை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தினையும் இந்த டேப்லட கொண்டுள்ளது. 


இவை தவிர சேமிப்பு நினைவகமாக 128 GB கொள்ளளவு, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. 


இதன் விலையானது 299 டாலர்கள் ஆகும்.


கரூர் மாவட்டத்தின் வரலாறு!





இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.


2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.


கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது.

சோழரின் கலைப்பொக்கிஷங்கள் - சுற்றுலாத்தலங்கள்!

    சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
 
 

சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
 
சொக்க வைக்கும் கட்டடக்கலைக்கு சொந்தக்காரர்களில் சோழமன்னர்கள் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழரின் கலைப்பொக்கிஷங்களாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருப்பது உலகளாவிய பெருமை.
 
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்:
 
தஞ்சைப் பெரிய கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். கட்டிய புதிதில் ராஜ ராஜேஸ்வரம் என்றும், பின்னர் வந்த நாயக்கர்கள் காலத்தில் பெருவுடையார் கோவில் என்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
 
பரந்த விரிந்து கிடந்த சோழப்பேரரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த தாரளமான வருவாய், ஆள்பலம், ராஜ ராஜனின் தீவிர சிவபக்தி போன்றவையே கோவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதற்கு முக்கிய காரணங்களாகும். இதன் கட்டுமானப்பணி கி.பி.1003-ம் ஆண்டில் தொடங்கி கி.பி.1010-ம் ஆண்டில் ஏழு ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது.
 
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரதான கோவில் தவிர சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி, கருவூர்த்தேவர் கோவில்களும் இங்குள்ளன. கோபுரத்தின் மீதுள்ள மிகப்பெரிய விமானமும், 14மீட்டர் உயரம், 7மீட்டர் நீளம், 3மீட்டர் அகலம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தியும் இன்றளவும் நீடிக்கும் ஆச்சரியங்கள். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
கோவிலைக் கட்டி முடித்த பிறகும் தனி அக்கறை செலுத்திய ராஜராஜன், கோவிலின் அன்றாடப் பணிகளுக்காக ஏராளமான பூசகர்கள், ஓதுவார்கள், பணியாளர்களை நியமித்துள்ளான். 50ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோவிலில் இருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.
 
கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில்:
 
இது ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும். தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இது கட்டப்பட்டதாம். தஞ்சைப் பெரிய கோவில் மிடுக்கு என்றால் இது நளினம். அழகும், ஆச்சரியமும் கலந்த புதினம்.
 
கோவில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் பின்னணியும் சுவாரஸ்யம் நிறைந்தது. கங்கை உள்பட இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி முழுவதையும் வென்ற ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழன் என அழைக்கப்பட்டான். அதன் நினைவாகவே கங்கைகொண்ட சோழபுரம் என இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது.
 
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்:
 
கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் என்றாலும் அவனது முன்னோர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பின்பற்றிய மகேஸ்வர சிவம் (பெரும் கடவுள் சிவனே) என்ற தத்துவம் இங்கு காணப்பட-வில்லை.

மாறாக, பெண்ணின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைக்கப்-பட்டுள்ளது. இங்கு அம்மனுக்காக தனி சன்னதி உள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிலின் மேற்கூரைகளிலும், சுவர்-களிலும் நடன மங்கைகளின் சிற்பங்கள் காணப்-படுகின்றன.

 தஞ்சைப் பெரிய கோவில் 1987ம் ஆண்டிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்கள் 2004ம் ஆண்டிலும் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, இன்றும் வாழும் பெருங்கோவில்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.
 
எப்படிப் போகலாம்?
 
சென்னையில் இருந்து தஞ்சாவூர் சுமார் 350 கி.மீ தூரம். முக்கிய நகரங்களில் இருந்து தஞ்சாவூருக்கு நல்ல சாலை வசதி உண்டு. ரயில்நிலையம் அமைந்துள்ளது. திருச்சியில்

சோனி நிறுவனம் எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் ரூ.21.490 விலையில் அறிமுகம்!




சோனி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் சமீபத்திய phablet, எக்ஸ்பெரிய சி ரூ.21.490 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் எக்ஸ்பெரிய சி வாங்கிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு ஆக்சிடென்டல் டேமேஜ் கவர் உடன் வருகிறது என்று தெரிவித்துள்ளது.


எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் வாங்கியதை தொடர்ந்து முதல் இரண்டு மாதங்களுக்கு, 1GB இலவச தரவு அணுகல்(data access) ஏர்டெல் உடன்-இணைந்து சோனி வழங்குகின்றது. இந்த மாத தொடக்கத்தில், சாதனம் சில ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் ரூ.20.490 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன.


எக்ஸ்பெரிய சி அம்சங்கள், மீடியா டெக் MTK6589 Quad-core செயலி, 1.2GHz, 5 அங்குல டிஎஃப்டி எல்சிடி qHD (540x960 பிக்சல்) காட்சி மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. இது 1GB ரேம் மற்றும் 4GB உள்ளக சேமிப்பு கொண்டுள்ளது. இது மேலும், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.


சோனி எக்ஸ்பெரிய சி டூயல் சிம் ஸ்மார்ட்போன் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) உள்ளது. எக்ஸ்பெரிய சி Exmor R சென்சார் உடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவில் முகம் கண்டறிதல்(face detection) மற்றும் ஸ்வீப் பனோரமா(Sweep Panorama) போன்ற அம்சங்களுடன் வருகிறது, மேலும் முழு எச்.டி. (1080) முறையில் படப்பிடிப்பு வீடியோ திறன் கொண்டுள்ளது.


0.3-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களான 3G, Wi-Fi,, DLNA, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜி.பி. எஸ் ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போன், வெள்ளை, கருப்பு மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மேலும், சோனி எக்ஸ்பெரிய சி எஃப்எம் ரேடியோ உடன் ஆர்டிஎஸ்,  வாக்மேன் அப்ளிக்கேஷன் மற்றும் 'திரை பிரதிபலிப்பு(screen mirroring)' ஆகியவை இருக்கும். இந்த சாதனத்தில் 2330mAh பேட்டரி கொண்டுள்ளது.


சோனி எக்ஸ்பெரிய சி முக்கிய குறிப்புகள்:



5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட QHD (540x960 பிக்சல்) டிஸ்ப்ளே
1.2 GHz Quad-core மீடியா டெக் MT6589 ப்ராசசர்
1GB ரேம்
32GB வரை விரிவாக்க கூடிய 4GB உள்ளக சேமிப்பு,
எல்இடி பிளாஷ், Exmor R சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் பின்புற கேமரா
0.3-மெகாபிக்சல் முன் கேமரா
microUSB 2.0,
2G,
3G,
Wi-Fi,
DLNA,
ப்ளூடூத் 4.0,
டூயல் சிம் (3G + 2G)
அண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்)
 
back to top