.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, October 19, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 5...!

பதினைந்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
உலக புகழ் பெற்ற கொலம்பஸ் உலக வரைபடம் கி பி 1490 இல் வரையப்பட்டது. அது வரை கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் தொகுப்பாக வரையப்பட்ட புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி பி 1493 இல் வெளியிடப்பட்ட உலக வரைபடம் ஆசியா,ஆப்ரிக்கா,ஐரோப்பா கண்டங்களை தெளிவாக காணலாம்.
கி பி 1436 இல் Andrea Bianco என்ற இதாலியரால் வெளியிடப்பட்ட உலக வரைபடம்.

கி பி 1482 இல் ஜெர்மனியை சேர்ந்த Johannes de Armsshein என்பவரால் வெளியிடப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி.பி 1448 இல் ஜெர்மானியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம்

 கி பி 1402 இல் கொரியர்களால்(Korea) வெளியிடப்பட்ட உலக வரைபடம் மேலும் ஆசிய கண்டத்தின் பழமையான வரைபடமாகும்.
கி.பி 1457 இல் இதாலியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம் 

Macrobian World Map, 1483

Isidore of Seville's tripartite world map,1472
(the first printed map in Europe)

T-O map, circa 1500, Venice (Brown)

T-O map from Jean Mansel's La fleur des histoires
(Lambert of St Omer), 15th century

தொடரும்...

சிங்கமும்,மானும்,முயலும்....(நீதிக்கதை)



 
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காததால் மிகவும் பசியுடன் இருந்தது.



அப்போது...அருகில் இருந்த புதர் ஒன்றில் முயல் ஒன்று தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தது.அதை பிடித்து உண்ணலாம் என்று நினைத்தபோது ....
 

சிறிது தூரத்தில் கொழுத்த மான் குட்டி மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
உடனே முயலை பிடிப்பதை விட்டுவிட்டு ...மான் குட்டியை பிடிக்க விரைந்தது.முயலும் முழித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தது.
 

சிங்கம் ஓடி வந்த சப்தத்தைக்க்கேட்டு மான்குட்டி விரைந்து ஓடியது.
நெடுந்தூரம் ஓடியும் மானை பிடிக்க முடியாத சிங்கம் முயலையாவது சாப்பிடலாம் என எண்ணித் திரும்பியது.
 

முயலோ...சிங்கம் திரும்பி வந்தால் தான் இறப்பது உறுதி என அறிந்து அங்கிருந்து ஓடிவிட்டிருந்தது.


முயலும் போய்...மானும் போய் சிங்கம் பசியால் தவித்தது.
"கைப்பிடியில் இருந்த முயலை விட்டுவிட்டு ...பேராசையால் தூரத்தில் இருக்கும் மானை நாடிச் சென்றதால்....உள்ளதும் பறிபோனது' என வருந்தியது சிங்கம்.


நாமும் நம் கையில் உள்ளதை வைத்து திருப்திக் கொள்ளவேண்டும். கிடைக்காததற்கு ஆசைப்படக்கூடாது.
 

Thursday, October 17, 2013

Square Cash ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தோற்றம் பெற்ற ஒரு சேவையாக ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை விளங்குகின்றது.

தற்போது உள்ள ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் Paypal ஆனது பிரபல்யம் வாய்ந்ததாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் காணப்படுகின்றது. 

இந்நிலையில் Paypal - ற்கு நிகரான Square Cash எனும் பிறிதொரு ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் இச்சேவையானது முதன் முதலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. 

இதற்காக iOS மற்றும் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலும் இதன் மூலம் பயனர் ஒருவர் வாரம் ஒன்றிற்கு 2,500 டொலர்களை ஆகக்கூடுதலான தொகையாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Flipkart இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி S3 ரூ.19,499 விலையில் கிடைக்கும்!



கடந்த ஆண்டு கொரியாவின் மிக சிறந்த ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S3, இப்போது இணையத்தில் ரூ.20,000-க்கும் குறைவாக கிடைக்கின்றது. சாம்சங் தயாரிப்பாளர் ரூ.25,400-ல் விற்பனை செய்துகொண்டிருந்த சாம்சங் கேலக்ஸி S3 கடந்த வாரத்திலிருந்து கைப்பேசிகளின் விலை குறைத்துள்ளது.


ஆனால் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart இணையதளத்தில் இப்போது ஒரு பெரிய தள்ளுபடி விலையில் கேலக்ஸி S3 விற்பனை செய்கின்றது. அதாவது இந்தியாவில் கேலக்ஸி S3 விலை ரூ.24,899-க்கு விற்பனை செய்தாலும் அதனை Flipkart இணையதளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் பரிமாற்றம் செய்துகொண்டால் மட்டுமே, ரூ.5,400 தள்ளுபடி செய்து ரூ.19,499 விலையில் வழங்கி வருகிறது.



இந்திய சந்தையில் உத்தரவாத இழப்பு இல்லாமல் ரூ.19,499-க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. சாம்சங் கேலக்ஸி S3 தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர்-ல் இப்போதும் ரூ.25,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அமேசானில் சாம்சங் கேலக்ஸி S3 கைப்பேசி ரூ.23,950-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இது மற்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடம் சுமார் ரூ.25,000 விலையில் கிடைக்கின்றது.
 
back to top