
சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்கள் மற்றும் எக்மோர் அருங்காட்சியகம் போன்றவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இந்தக் கட்டடங்களுக்கு உரிய வரைபடங்கள் பொதுப்பணித் துறையிடமோ அல்லது அவற்றை மேற்பார்வை செய்து வரும் பொதுத்துறையிடமோ இதுவரை இல்லை. இதனால் இந்த பில்டிங்குகளின் வரைபடங்களைத் தயாரித்து அளிக்க பொதுப்பணித் துறைக்கு பொதுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழமையான கட்டடங்கள் ஒவ்வொன்றையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவற்றை அளவிட்டு வருகிறார்கள்.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களில் அரசுத் துறைகளின் அலுவலகங்கள்...