நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்…இட்லி:*****பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா… எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!சோறு:******தரமான சோறுன்னா, சோத்துப்...
Monday, October 21, 2013
கோபம் இல்லாத மனைவி தேவையா? -இதோ சில டிப்ஸ்!
9:16 PM
Unknown
No comments
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக் கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:1. மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.2. மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.3. முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது...
ஊட்டச் சத்து குறைபாடா? சிறு தானியங்களுக்கு மாறுங்களேன்!
5:44 PM
Unknown
No comments
உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான்.அதிலும் இப்போது பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்புவரை தமிழக மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் வரகு, கேழ்வரகு, கவுளி அரிசி, தினை, சாமை, குதிரைவாலி போன்ற புஞ்சை தானியங்களை சார்ந்து இருந்தது....
உங்களுக்கு யார் ரத்த தானம் செய்யலாம் தெரியுமா?
5:14 PM
Unknown
No comments
ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். நாம் தானம் செய்யும் ரத்தம், 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள் போதும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்.சர்க்கரை நோய், பல்வேறு நோய் தடுப்பூசிகள் போட்டிருப்பவர்கள், ஹார்மோன் தொடர்பான மருந்துகள், போதை மருந்து உட்கொண்டவர்கள் ரத்ததானம் செய்யக்...