.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 23, 2013

வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி..?



வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும். வாஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் ஹீட்டரை இயக்க வேண்டும்.

வாஷிங்மெஷினில் அதிகமாக நுரை தள்ளும் சோப்புகளை பயன்படுத்தக்கூடாது. நுரை டிரம்புகளில் புகுந்து தொல்லை தரும். வாஷிங்மெஷினில் கிழிந்த துணிகளை போட்டு துவைக்க வேண்டாம் ஏனெனில் மேலும் துணிகள் கிழிந்து விடும். வாஷிங்மெஷினில் துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், மின்சார சப்ளை மெயினை ஆப் செய்துவிடவும்.

வாஷிங்மெஷினில் துணிகளை சலவை செய்யும் போது நீலத்தை அதனுடன் கலக்கக்கூடாது. ஏனெனில் இயந்திரத்திலுள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும். இயந்திரத்தில் எத்தனை சுற்றுகள் சுற்றலாம் என உள்ளேதோ அத்தனை சுற்றுகள் தான் சுற்றவேண்டும்.

வாஷிங்மெஷினை உபயோகித்து முடித்ததும் நன்கு துடைத்து உலரச் செய்ய வேண்டும். மேல் பகுதியில் உள்ள ரப்பர் ரிம்மை துடைக்க வேண்டும்..ஹோசில் ஆங்காங்கே கிளாம்ப் போடவேண்டும்.

தாலி கட்டுவது ஏன்?

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

Tuesday, October 22, 2013

தண்ணீர் பாட்டிலில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

packaged-drinking-water-bottle-i13
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களால் தான் தண்ணீரை சேகரித்து வைத்து பயன்படுத்துகிறோம். 



அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரானது சேகரித்து வைப்பதால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசுகிறது என்று அவற்றை தூக்கிப் போட்டு, தினமும் ஒரு பாட்டில் வாங்க முடியுமா என்ன?
மேலும் பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுவதால், சுற்றுச்சூழல் தான் மாசுபடும். ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள, பாட்டிலை தூக்கிப் போடாமல், அவற்றை துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போமா.


பிளாஸ்டிக் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது டிஷ் வாஷ் நீர்மத்தை விட்டு, நன்கு குலுக்கி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாட்டிலில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஒருவேளை அழுக்குகள் இன்னும் இருந்தால், மீண்டும் இந்த செயலை தொடர்ந்து செய்யுங்கள்.
 
 

அழுக்குகள் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலில் அரிசி மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 30-45 நிமிடம் ஊற வைத்தால், அரிசியானது பாட்டிலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். பேக்கிங் சோடா கிருமிகளை அழித்துவிடும். இந்த முறையை அழுக்கு மற்றும் துர்நாற்றம் நீங்கும் வரை செய்யலாம்.
 

மற்றொரு முறை வினிகரை பாட்டிலில் நிரப்பி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து சோப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிது நேரம் வினிகர் வாசனை வரும். ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். அதே நேரம் அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, பாட்டில் புதிது போன்று காணப்படும்.
 

அடுத்து செய்தித்தாளை பாட்டிலில் போட்டு நிரப்பி, இரவு முழுவதும் மூடி வைக்க வேண்டும். இதனால் அதிலிருந்து வெளிவரும் நாற்றம் அனைத்தும் போய்விடும்.

கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா? 


அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், 


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
 
back to top