.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 24, 2013

தமிழாக மாறிப்போன ஆங்கிலம் !

1) வீட்டுக்கு போனதும் தகவல் சொல்லுனு சொல்வோம் ஆனா இப்போ… message பண்ணு இல்ல missed call கொடு.

2) பாத்து சூதானமா, கோளாற போய்ட்டுவானு சொல்லுவோம் ஆனா இப்போ… Safeஆ போய்ட்டுவா.

3) சரி, ஆகட்டும்னு சொல்லுவோம் இப்போ என்ன சொல்லுறோம் ok, Ok done.

4) முன்னலாம் யாராது தெரியாதவங்கள கூப்பிடனும்னா ஏங்க, அய்யா, அம்மானு கூபிடுவோம் இப்போ hello, hello sir, hello madam.. இங்க என்ன போன்லயா பேசுறீங்க..? hello helloனு.

5) விருந்தினரையோ, நண்பர்களையோ பார்த்தா வணக்கம் சொல்லுவோம் இப்போ hai சொல்லிக்கிறோம்.

6) எனக்கு இதுல விருப்பம், அதுல விருப்பம்னு சொல்லுவோம், இப்போ விருப்பம் intrest ஆ மாறிப்போச்சு..

7) யாரு காலையாவது மிதிச்சுட்டா சிவ, சிவா னு சொல்லுவோம், இப்போலாம் எவன் கால மிதிச்சாலும் sorry தான்.

8 ) நன்றி என்ற ஒரு வார்த்தையை தமிழன் மறந்தே போய்ட்டான்.. எதுக்கேடுத்தாலும் Thank you so much தான்.

9) இது எல்லாத்துக்கும் மேல நம்ம காதலிக்கிற பொண்ணுகிட்ட நான் உன்னை காதலிக்கிறேன்னு அழகு தமிழ்ல சொல்லுறத விட்டுபுட்டு i love you னு சொல்லுறானுகளே..

Wait, dress, thanks, hai, hello, bye, Take Care, Interest, Problem, Miss you, Love you, Hate you, Tv, Phone, Computer, Lap top, Watch, Pin, Safe, Lock, Purse, Key Chain, Cycle, Box, Calling Bell, Bottle, Excuse me, Pen, Pencil, rubber, Scale, File இப்படி பல வார்த்தைகள் தமிழோடு கலந்து விட்டது… இந்த வார்த்தைகளை உச்சரிக்காமல் தமிழே பேச முடியாது என்ற அளவிற்கு அடிமை ஆகிவிட்டான் ஆங்கிலத்திற்கு.

உங்களது கேள்விக்கான பதில்கள் இங்கே!

                                உங்களது கேள்விக்கான பதில்கள் இங்கே

வீட்டில் நாம் செய்யும் சில சின்ன சின்ன வேலைகள் குறித்து நமக்கு பல கேள்விகள் இருக்கும். அதில் சில குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களை இங்கே தந்துள்ளோம்.

மல்லிகைப் பூவை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் போது அது இரண்டு மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்க, பிளாஸ்டிக் டப்பாவை விட, எவர்சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைக்கலாம்.

மேலும், மல்லிகைப் பூவை உலர்ந்த துணியால் சுற்றி எவர் சில்வர் டப்பாவில் வைத்தால் 4 நாட்களுக்குக் கெடாமல் வைத்துக் கொள்ளலாம்.

சீலிங் ஃபேன்கள் சுற்ற ஆரம்பித்த உடனேயே டக் டக் என்று சத்தம் வந்தால் ஃபேன் சரியாக பொருத்தப்படவில்லை என்று அர்த்தம். சரியாக பொருத்தப்படாத ஃபேன்கள் எளிதில் பாழாகும்.

எலுமிச்சை பழத்தை வாங்கி வந்துஅதனை பாயில் பேப்பர் அதாவது ஹார்லிக்ஸ் பேக் செய்யப்பட்டு வரும் சில்வர் பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் காயாமல் பாதுகாக்கலாம்.

டிவி, ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் போன்ற மின்சார சாதனங்களின் ஸ்விட்சுகளை அணைத்தவுடனேயே உடனே போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் கம்பரசரும், டீவியில் பிக்சர் ட்யூபும், ட்யூப் லைட்டில் பாலய்டும் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகிவிடும்.

ப்ரிட்ஜில் துர்நாற்றம் வராமல் இருக்க எலுமிச்சையை துண்டுகளாக்கி ஆங்காங்கே வைக்கலாம். இதனால் துர்நாற்றம் மறைந்து விடும். இனிமேல் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டும் என்றால், எந்த உணவு பண்டத்தையும் திறந்து வைக்காமல் நன்கு மூடி வைக்கவும்.

அடிக்கடி உபயோகப்படுத்தும் எவர்சில்வர் டீ வடிகட்டி அடைத்துக் கொண்டிருந்தால், அதனை சில நிமிடங்கள் நெருப்பில் காட்டியபிறகு கழுவிவிட்டால் அடைப்பு நீங்கி பளிச்சென்று இருக்கும்.

 அயர்ன் பாக்ஸில் துணிக்கறை படிந்துவிட்டால் நகைக்கடையில் பயன்படுத்தும் ஆஸிட்டை லேசாக அயர்ன் பாக்ஸில் தடவி, சுரண்டி எடுத்துவிட்டால் போதும்.


 ஸ்டீல் பீரோ பளபளக்க பழைய துணியினால் தூசியைத் துடைத்துவிட்டு, சிறிதளவு பஞ்சு அல்லது ஸ்பாஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து பீரோவைத் துடைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பஞ்சால் துடைக்க ஸ்டீல் பீரோ பளபளக்கும்.

கெட்டுப் போன உணவுப் பண்டங்களை பிரிட்ஜில் வைப்பதையும், பிரிட்ஜில் ஒரு உணவு பொருளை பல நாட்களாக கவனிக்காமல் விடுவதையும் தவிர்க்கவும்.

கிரைண்டரில் பொருத்தப்பட்டுள்ள கல், தானிய வகைகளை நிரப்பி ஆட்டும்போது எளிதில் தேய்வதில்லை. சிலர் கிரைண்டரைக் கழட்டும்போது கல்லை வெளியே எடுக்காமல், தண்ணீரி ஊற்றி மெஷினை ஆன் பண்ணிக் கழுவுவார்கள். இதனால் வெகு சீக்கிரத்தில் மெஷினிலுள்ள கல் தேய்ந்துவிடும்.

நீண்ட நேரம் ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்தே வைக்கக்கூடாது. திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து, உடனே திறந்து மூடுவது நலம்.

குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக் செய்து விடுவது நல்லது. ஃப்ரிட்ஜை கண்டிப்பாக சமையலறையில் வைக்கக்கூடாது. எரிவாயு கசிந்தால் ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுவுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும்.

ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரீஸரில் ஐஸ் கட்டிகள் சேர்ந்தால் அதை வெளியேற்ற டீஃப்ராஸ்ட் பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. அந்த பட்டன் வேலை செய்யவில்லை என்றால் உடனே சரிபாக்க வேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை வைத்து குத்தினால், அதனுள் செல்லும் இணைப்பு குழாய்கள் வெடித்துவிடும்.

பிரஷர் குக்கரின் வெயிட்டை தினமும் சுத்தம் செய்யுங்கள். அதனுள் சேரும் பசை அழுத்தத்தின் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு அதிக நேரம் கழித்துதான் விசில் வரும். சில சமயம் வெயிட் தூக்கி எறியப்படும்.

ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா - சுற்றுலாத்தலங்கள்!


 
    ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா

ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா
 
 ந்தியாவின் புகழ் பெற்ற குடைவரைக் கோவில்களில் எலிபண்டா குகைகள் முக்கியமானவை. கூடவே... இவற்றில் புதைத்-திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை. 
 மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான தீவு எலிபண்டா. காராப்புரி தீவு என்றும் அழைக்கின்றனர். 17ம் நூற்றாண்டில் போர்ச்சு-கீசியர்களால் கண்டறியப்பட்டது. எலிபண்டா குகைகளில் பலவிதமான புடைப்புச் சிற்பங்களும், சிலைகளும் காணப்படுகின்றன. இவற்றில் திரிமூர்த்தி என்றழைக்கப்படும் சிவன் சிலை அபூர்வமானது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்களின் முகங்களை இவை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. ராஷ்டிரகூடர்களின் அரசுச் சின்னமும் இதுதான் என்பது இன்னொரு ஆச்சரியம். இவை தவிர நடராசர், சதாசிவன், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் காணப்படுகின்றன. இவையும் ராஷ்டிரகூடர்களின் காலத்தை சேர்ந்தவையே.

 தீவைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்களை, தீவின் முகப்பில் காட்சியளித்துக் கொண்டிருந்த ஒற்றைக்கல்லில் ஆன யானை சிலை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை எடுத்துச்செல்ல முயன்றுள்-ளனர். அது முடியாமல் போகவே அப்படியே விட்டுச் சென்று விட்டனராம். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் அந்த யானைச்சிலையை, மும்பை விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்கு (தற்போதைய டாக்டர் பாவ் தஜி லாட் மியூசியம்) கொண்டு சென்று வைத்துள்ளனர்.

 யானைச்சிலை ஞாபக-மாகத்தான் எலிபண்டா தீவு என போர்ச்சுகீசியர்கள் அழைத்து வந்துள்ளனர். மேலும்  இதை துப்பாக்கி சுடும் களமாகப் பயன்படுத்திய போர்ச்சு-கீசியர்கள், சுடுவதற்கு இலக்காக சிலைகளை(?) பயன்படுத்தியதாகவும் கூறப்-படுகிறது. அதனால்தான் பல சிலைகள் இங்கு சிதைந்து காணப்படுகின்றன.

வரலாற்று சிறப்புகொண்ட எலிபண்டா தீவு பல பேரரசுகளின் பகுதியாகவும் விளங்கி வந்துள்ளது. கொங்கன்-மவுரியர்கள், திரிகூடர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், அகமதாபாத்தின் முஸ்லிம் மன்னர்கள், மராட்டியர்கள் என பலதரப்பினரின் கட்டுப்பாட்டில் இது இருந்து வந்துள்ளது. ஷென்ட்பந்தர், மோராபந்தர், ராஜ்பந்தர் என மூன்று கிராமங்கள் இங்குள்ளன. ஷென்ட்பந்தரில்தான் குகைகள் அமைந்திருக்கின்றன. மோராபந்தர் அடர்ந்த காட்டுப்பகுதியாகும்.

 ஆச்சரியங்களைக்கொண்ட, அழகான எலிபண்டா தீவுக்கு படகில்தான் செல்ல முடியும். மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் உள்ள அப்போலோ பந்தரில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் படகில் சென்று விடலாம். காலை 9மணி முதல் மாலை 5மணி வரைதான் குகைகளைக் காண அனுமதி. கட்டணம் உண்டு. யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச்சின்னங்கள் பட்டியலில் எலிபண்டா குகைகள் 1987ம் ஆண்டில் இடம் பிடித்தன

500 திரையரங்குகளில் வெளியாகும் ஆரம்பம்!

கடந்தாண்டை போலவே இந்த தீபாவளிக்கும் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.

காரணம், மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. அதன்படி, அக்டோபர் 31ம் தேதி அஜீத் நடித்த 'ஆரம்பம்' படமும், நவம்பர் 1ம் தேதி விஷால் நடித்த 'பாண்டிய நாடு' படமும், 2ம் தேதி கார்த்தி நடித்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படமும் ரிலீசாகின்றன.


இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் ஏற்கெனவே புக் ஆகிவிட்டது. எதிர்பார்த்தது போல் ஆரம்பம் படம் அதிக திரையரங்குகளை கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான 750 திரையரங்குகளில் 500 திரையரங்குகளை இப்படம் பிடித்துவிட்டது.

இதே திரையரங்குகளில் உள்ள காம்ப்ளக்ஸ்களில் விஷால் நடித்துள்ள 'பாண்டிய நாடு', கார்த்தி நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்கள் வெளியாகின்றன.


அந்த 2 படங்களும் முறையே தலா 300 திரையரங்குகள் வரை புக் செய்துவிட்டன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி படங்கள் மட்டுமே ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
 
back to top