.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, October 25, 2013

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது.



25 - ravi paypal


1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் தேவையில்லை. நேராக மணி கிராம் கடைக்கு சென்று காசை கட்டி பேபால் அக்கவுன்ட்டில் வரவு வைத்து அனுப்ப வேண்டியவங்களுக்கு பேபால் மூலம் பணத்தை அனுப்பலாம்.


2. பேபாலில் பணம் வந்தாலோ அல்லது பணம் எடுக்க 7 – 10 நாட்கள் ஆகும் ஏன் என்றால் பேபால் பணத்தை வங்கியில் தான் நேரடியாய் செலுத்தும். அது வரை நமக்கு ஸ்டக் ஆகிவிடும். இப்போது பணத்தை வித்டிரா செய்யலாம் எப்படி – பணத்தை மணி கிராமாக டிரான்ஸஃபராக மாற்றி உடனே உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் பணத்தை மணி இன் செகன்ட்ஸ் பிரகாரம் உடனே பெறலாம்.

இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டும் சாத்தியம் ஆனால் விரைவில் உலகெம்ங்கும்….

இதை தவிர இப்போது பேபால் ப்ரீபேய்ட் மாஸ்டர் கார்டை இலவசமாக தருகின்றனர். இதன் மூலமும் பேபாலில் நமக்கு வரும் பணத்தை கிரடிட் அல்லது டெபிட் கார்ட் மாதிரி உபயோகிக்கலாம் மற்றும் உலகத்தின் எந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம்.

சார்ஜ் வழக்கம் போல உண்டு.இதுவும் உடனே எடுக்க கூடிய ஒரு விஷயம் தான்.

எனக்கு வேணா ஒரு ஆயிரம் அமெரிக்க டாலர் அனுப்பினா பக்காவா வேலை செய்தான்னு பார்த்து சொல்றேன் – வசதி எப்படி..???

ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

டால்பின்கள், பாலூட்டி வகையை சார்ந்தவை. அவை சமுதாயமாக வாழும் தன்மை கொண்டவை. உணவைப் பெறுவதிலும், குட்டிகளைப் பராமரிப்பதிலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டாக செயல்படும்.
உலகில் 37 வகை டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் 32 வகை டால்பின்கள் கடலில் வாழ்கின்றன. 5 டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன.

25 - tec dolhin rador.2

டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றவை. அவை சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல்மட்டத்திற்கு வந்து `டைவ்’ அடித்துவிட்டுச் செல்லும். ஆபத்து சமயங்களில் 15 நிமிடம் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கும்.அத்துடன் டால்பின்கள் `எகோலொகேசன்’ எனும் முறையில் எதிரொலி முறைப்படி உணவு தேடல் மற்றும் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கிறது.


மொத்தத்தில் மிகவும் அமைதியான விலங்கான டால்பின்,மனிதர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. எனவே டால்பினை வைத்து பல ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.


பொதுவாக டால்பின்கள், நீரில் மூழ்கி உள்ள பொருட்களை ஒலி அலைகளை அனுப்பி அவை என்ன என்று கண்டறிகின்றன. இந்த யுக்தி பயன்படாத நேரங்களில் நீர்குமிளிகளை எழுப்பி பொருட்கள் மீதுள்ள தூசுகளை அகற்றிவிட்டு இரையை அடையாளம் காண்கின்றன.


டால்பின்களின் இந்த ஆய்வு முறையை பின்பற்றி வெடி பொருட்களை துல்லியமாக கண்டறிய உதவும் புதிய ராடார் ஒன்றை லண்டன் சவுத் ஆம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். தற்போதுள்ள ராடார் முறையில் நீரில் மூழ்கியுள்ள அனைத்து பொருட்களுமே தெரிய வரும்.

25 - tec dolhin rador



இதன் மூலம் பல நேரங்களில் தவறான பொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராடார் மூலம் நீரில் மூழ்கியுள்ள வெடி பொருட்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

Dolphins Inspire Rescue Radar Device

**************************************


 British engineers said Wednesday they had taken inspiration from dolphins for a new type of radar device that could easily track miners trapped underground or skiers buried in an avalanche. The device, like dolphins, sends out two pulses in quick succession to allow for a targeted search for semiconductor devices, canceling any background “noise,” the team wrote in the journal Proceedings of the Royal Society A: Mathematical and Physical Sciences.

ஈரோடு மாவட்டத்தின் வரலாறு!


தந்தை பெரியார் பிறந்த மண். 1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தில் மையத்திலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி 01.01.2008 முதல் 'ஈரோடு மாநகராட்சி' யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், காங்கேயம் காளை இரண்டும் ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு.

இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்

தந்தை பெரியார்

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

சீனிவாச ராமானுஜம்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

ஈரோடு மாவட்டம் 5 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பவானி
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்
பெருந்துறை
சத்தியமங்கலம்
இம்மாவட்டத்துடன் இருந்த தாராபுரம், காங்கேயம் வட்டங்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

வா..வா..என்றழைக்கும் கோவா - சுற்றுலாத்தலங்கள்!

      வா..வா..என்றழைக்கும் கோவா

சிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்ட கோவாவில் தரிசிக்க வைக்கும் தலங்களும் நிறைய உண்டு. இவற்றில் பாரம்பரியமிக்க தேவாலயங்களும் அடக்கம். இந்த தேவாலயங்கள் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு கோவாவை மேலும் மிளிர வைத்துக்-கொண்டிருக்கின்றன.
 கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்-டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக இது இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

 போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில் கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை. சே கதீட்ரல், சர்ச் அண்ட் கான்வென்ட் ஆப் செயின்ட் பிரான்சிஸ் ஆப் அசிசி, சேப்பல் ஆப் செயின்ட் காதரின், பாசிலிகா ஆப் போம் ஜீசஸ், சர்ச் ஆப் லேடி ஆப் ரோசரி, சர்ச் ஆப் செயின்ட் அகஸ்டின் போன்றவை பாரம்பரியமிக்கவை. அனைத்தும் 16- 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை. போம் ஜீசஸ் சர்ச் அதாவது குழந்தை இயேசு தேவாலயம், ஆசிய அளவில் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த தேவாலயங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன.

 இவை தவிர கோவா மாநிலம் முழுவதும் பார்த்து ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன. தலைநகர் பனாஜியில் செபாஸ்டியான் சாப்பல், ஜும்மா மசூதி, மஹாலட்சுமி கோவில் போன்றவையும் பனாஜியில் இருந்து 28கி.மீ தொலைவில் உள்ள ஆன்மீக நகரமான போன்டாவில் நாகேஸ் கோவில், மஹால்ஸா நாராயணி கோவில், சாந்தா துர்கா கோவில், ஸ்ரீமங்கேஷ் கோவில்,  தூத்சாகர் பால்ஸ் (பாலருவி), போன்ட்லா வனவிலங்கு சரணாலயம், பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை. மப்பூசா, வாஸ்கோடகாமா (இடத்தின் பெயர்தான்), மார்கோ போன்ற இடங்களும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஒரு முறை சென்று வந்தால் போதும். மீண்டும் வா..வா..என்றழைக்கும் கோவா.
 
back to top