.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, October 25, 2013

வா..வா..என்றழைக்கும் கோவா - சுற்றுலாத்தலங்கள்!

      வா..வா..என்றழைக்கும் கோவா

சிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்ட கோவாவில் தரிசிக்க வைக்கும் தலங்களும் நிறைய உண்டு. இவற்றில் பாரம்பரியமிக்க தேவாலயங்களும் அடக்கம். இந்த தேவாலயங்கள் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு கோவாவை மேலும் மிளிர வைத்துக்-கொண்டிருக்கின்றன.
 கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்-டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக இது இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

 போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில் கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை. சே கதீட்ரல், சர்ச் அண்ட் கான்வென்ட் ஆப் செயின்ட் பிரான்சிஸ் ஆப் அசிசி, சேப்பல் ஆப் செயின்ட் காதரின், பாசிலிகா ஆப் போம் ஜீசஸ், சர்ச் ஆப் லேடி ஆப் ரோசரி, சர்ச் ஆப் செயின்ட் அகஸ்டின் போன்றவை பாரம்பரியமிக்கவை. அனைத்தும் 16- 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை. போம் ஜீசஸ் சர்ச் அதாவது குழந்தை இயேசு தேவாலயம், ஆசிய அளவில் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த தேவாலயங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன.

 இவை தவிர கோவா மாநிலம் முழுவதும் பார்த்து ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன. தலைநகர் பனாஜியில் செபாஸ்டியான் சாப்பல், ஜும்மா மசூதி, மஹாலட்சுமி கோவில் போன்றவையும் பனாஜியில் இருந்து 28கி.மீ தொலைவில் உள்ள ஆன்மீக நகரமான போன்டாவில் நாகேஸ் கோவில், மஹால்ஸா நாராயணி கோவில், சாந்தா துர்கா கோவில், ஸ்ரீமங்கேஷ் கோவில்,  தூத்சாகர் பால்ஸ் (பாலருவி), போன்ட்லா வனவிலங்கு சரணாலயம், பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை. மப்பூசா, வாஸ்கோடகாமா (இடத்தின் பெயர்தான்), மார்கோ போன்ற இடங்களும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஒரு முறை சென்று வந்தால் போதும். மீண்டும் வா..வா..என்றழைக்கும் கோவா.

கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.

சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர்.

இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு விட்டு விடாமல், இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்வது அவசியமாகின்றது. இங்கே எதனால் இரத்த போக்கு ஏற்படுகின்றது என்று பார்ப்போம்.

இது எதனால் நிகழ்கின்றது?

கருவின் கழுத்து பகுதியில் பாதிப்பில்லாத மாற்றங்கள் நிகழும் போது சில திசுக்கள் உடைந்து இரத்தப் போக்கு வெளிர் நிறத்தில் வெளியேறும். சில பெண்கள் பிரசவ காலம் முழுவதும் மாதவிடாய் அடைவார்கள். ஆனால் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கும். இது மட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் உள்ளது.

கரு முட்டை உருவாதல்

முதல் மாதத்தில் கரு உருவாக ஆரம்பிக்கும் போது, கருப்பையில் மாற்றம் ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்படலாம். அப்பொழுது இரத்தம் வெளிரிய நிறத்தில் இருக்கும். அதுவும் ஒன்று இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது

கர்ப்பப்பை வாயில் தொற்று நோய்

அதே போல் கர்ப்பமாக இல்லாத போதும், இந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இதை ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.
குறிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதால், கருப்பையின் வாயில் எரிச்சல் ஏற்பட்டு சிறிது இரத்தம் வடியும். இந்த வகையான இரத்தப்போக்கு உடலுறவுக்கு பிறகு நடக்கும் பின்னர் மிகவும் விரைவாக நின்றுவிடும்.

சளிப்பிளவு

பிரசவ வலி ஏற்படும் போது கருப்பையின் உள்ள சளி போன்றது உடைந்துவிடும். அப்பொழுது இரத்த கசிவு ஏற்படும். ஒருவேளை இது முன்னரே உடைந்தால், குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னரே பிரசவம் நடக்க போகின்றது என்று அர்த்தம்.

நஞ்சுக்கொடி நகர்வு

நஞ்சுக்கொடி பகுதி கருப்பையின் உள்ளிருந்து வெளிவரும் போது இரத்தப்போக்கு ஏற்படும்.

கருப்பை

கருப்பை மிகவும் இறங்கிய நிலையில் இருந்தாலும், இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருந்தால் கருப்பையின் கனம் தாங்க முடியாமல் இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடம் மாறிய கர்ப்பம்

கருமுட்டை கருப்பையின் வெளியே கருத்தரித்தால், இரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக ஒரு கருமுட்டை குழாயில் கருத்தரிக்கும் போது, இந்த பாதிப்பு ஏற்படும். அப்பொழுது கடுமையான வயிற்று வலி இருக்கும். இவ்வகை பிரச்சனை இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கருச்சிதைவு

இரத்தப் போக்கு கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்க முடியும். ஆனால் இது மூன்று மாதத்திற்கு பின் ஏற்படாது.

நரியின் புத்திசாலித்தனம் (நீதிக்கதை)

 
ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது.

அதனால் தனித்து அதற்கான உணவைத் தேடமுடியவில்லை.

அது தனக்கான உணவு தன்னை நாடி வர வேண்டும் என்பதற்காக ஒரு தந்திரம் செய்தது.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தியைப் பரப்பி..தன் குகையிலேயே இருந்தது.அதன் நலன் விசாரிக்க வரும் மிருகங்களை குகைக்குள்ளேயே அடித்துக் கொன்று உண்டு வந்தது.

ஒரு நாள் நரி ஒன்று சிங்கத்தின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க வந்தது.அது குகையின் வாயிலில் நின்று, 'சிங்க ராஜாவே! எப்படியிருக்கிறீர்கள்?" என வினவியது.

இந்த நரிதான் இன்றைய என் உணவு என்று தீர்மானித்த சிங்கம்,'நரியாரே!..என்னால் எழக் கூட முடியவில்லை..நீங்கள் குகைக்குள் வாருங்கள்' என்றது.

அதற்கு புத்திசாலியான நரி கூறியது,'சிங்க ராஜாவே! உங்கள் குகைக்குள் மிருகங்கள் வந்த தடயங்கள் தெரிகின்றது..ஆனால் அவை திரும்பிய தடயங்கள் இல்லை..அதனால் அம்மிருகங்களுக்கு என்ன ஆகியிருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.அதனால் நானும் உள்ளே வந்தால் திரும்ப முடியாது என உணர்கிறேன்'

இப்படிக் கூறிவிட்டு நரி அகன்றது.சிங்கம் தனது கெட்ட எண்ணம் நரியிடம் நடக்கவில்லையே என ஏமாந்தது.

இதற்கிடையே..நரியும் ,மற்ற மிருகங்களிடம் சென்று சிங்கத்தைப் பற்றி கூறி,'இனி யாரும் அதன் குகைக்குச் செல்ல வேண்டாம்' என்றது.

நம்மைச் சுற்றி நடைபெறுவதை உன்னிப்பாகக் கவனித்து...தீமைகளை உணர்ந்து, அதற்கேற்றார் போல புத்திசாலித்தனத்துடன் செயல் பட வேண்டும்.

என்ன கொடுமை சார்!

 ’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்’” ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்!

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம்.


24 - gold toilet paper


‘டாய்லெட் பேப்பர் மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர் ஆகும். ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு சாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து வீட்டுக்கே டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை விற்பனைக்கு தயாரிக்கவில்லை.
துபாயில் உள்ள நிறுவனம், வெஸ்டன் டாய்லெட்டுகளுக்கான இருக்கையை (டாய்லெட் சீட்) முழுக்க முழுக்க தங்கத்தினால் தயாரித்திருப்பதைப் பார்த்து, தங்க டாய்லெட் பேப்பர் ரோல் தயாரிக்கும் எண்ணம் உருவானதாக ‘டாய்லெட் பேப்பர் மேன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Toilet paper made of gold for sale in Australia

**************************************************
n Australian company is set to take the idea of extravagant living to another level with an eccentric new product – toilet paper made of gold! The 22-carat gold toilet paper is priced at a staggering USD 1,376,900 million per roll.
 
back to top