.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 29, 2013

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி!

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு.


இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி.


ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில் மண்ணை தூவிட்டு தளங்களுக்குள் நுழைந்துவிடும் கில்லாடிக்கு கில்லாடிகளும் இருக்கவே செய்கின்ற‌னர்.


கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிபுணர்களும் புதிய பாதுகாப்பு வழிகளை உருவாக்கி கொண்டே இருக்கின்றனர்.


பொதுவாக இத்தகைய சாப்ட்வேர்களும் பாதுகாப்பு வழிகளும் ஹைடெக்காக இருக்குமே தவிர சுவாரஸ்யமானதாக இருக்க வாய்ப்பில்லை.ஒரு பயர்வால் செயல்ப‌டும் விதம் பற்றி அறிய யாருக்கு ஆட்வம் இருக்கும் சொல்லுங்கள்.


 ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில் அறிமுகமாகியுள்ள பாதுகாப்பிற்கான புதிய சாப்ட்வேர் கொஞ்ச‌ம சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.அந்த சாப்ட்வேர் செயல்படும் விதம் அட என வியக்க வைத்து புன்னகைக்கவும் வைக்கிறது.


 பொதுவாக் எல்லா பாதுகாப்பு சாப்ட்வேர்களும் கம்ப்யூட்டர் கொள்ளையர்களை தடுத்து நிறுத்துவதில் கவன்ம் செலுத்துகின்றன என்றால் மைகோனோஸ் என்னும் இந்த புதிய சாப்ட்வேர் கம்ப்யூட்டர் திருடர்களையும் கொள்ளயர்களையும் உள்ளே அழைத்து அதன் பிறகு அவர்களுக்கு போக்கு காட்டி வெறுப்பேற்றி களைப்படைய வைத்து விட்டால் போதும் என புற முதுகிட்டு ஓட வைக்கிறது.


மற்ற சாப்ட்வேர்கள் பூட்டு போல செயல்ப‌டுகின்றன என்றால் இந்த சாப்ட்வேரோ இல்லாத ஒரு கதவை உருவாக்கி அதன் வழியே கம்ப்யூட்டர் திருடர்களை நுழைய வைத்து அவ‌ர்களுக்கு தவறான தகவல்களாக அள்ளிக்கொடுத்து குழப்பி விடுகிறது.


மைகோனோஸ் சாப்ட்வேர் இதனை செய்யும் விதம் கச்சிதமானது.ஒரு விழிபான காவலாளி போல இது திருடர்கள் யாரேனும் அத்துமீறி நுழைய முயல்கின்றனரா என்பதை சரியான நேரத்தில் கண்டு பிடித்து உஷாராகி விடுகிற‌து.


அனால் அதன் பிறகு அவசரப்படாமல் திருடனோடு மல்லுக்கட்ட தயாராகிறது.உடனே அது பொய்யான பாஸ்வேர்டுகளை எடுத்து சம‌ர்பிக்கிறது.மேலும் திருட்டு ஆசாமி தளத்திற்குள் முன்னேறி செல்வது போன்ற உண‌ர்வை ஏற்படுத்தி அங்கும் இங்கும் அல்லாட‌ அவைக்கிறது.
வழக்கமாக ஒரு மணியில் முடிய வேண்டிய வேலையை பல மணி நேரத்திற்கு இழுத்தடிக்கிறது.அதன் பிறகு பார்த்தால எல்லாம் போலியான தகவல்கள் என்ற உண்மை திருடனை வெறுப்பேற்றும்.


இப்படி திருட வந்த கில்லாடியின் உழைப்பை விரையமாக்கி இந்த சாப்ட்வேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்.திருடனும் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் வேறு தளம் பார்க்க சென்று விடுவார்.அதற்குள் ஊடுருவ முயன்ற ஆசாமியின் அடையாளத்தை அறிய உதவக்கூடிய தகவல்களை இந்த சாப்ட்வேர் சேகரித்து விடும்.


கம்ப்யூட்டர் திருடர்களை தடுக்க எவ்வளவு தான் பாதுகாப்பான‌ வ‌ழியை உருவாக்கினாலும் அதனை உடைக்ககூடிய வழியை கண்டுபிடித்து விடும் நிலை இருப்பதால் இந்த புதுமையான சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் மைகோனோஸ் நிறுவன தலைவர் டேவிட் கோயர்ட்ஸ்.


இந்த சாப்ட்வேர் கப்ம்யூட்டர் திருடர்களின் முயற்சியை வீண‌டித்து அந்த செயலுக்கான பயனையே கேள்விக்குள்ளாக்கி விடுவதாகவும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் கூறுகிறார்.


சாப்ட்வேரும் கூட சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்கிறார்.


உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்!





முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)

இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்

மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்


நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்

ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்

ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)

ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)

எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.கருணாநிதி நடத்தினார்.

தமிழ்த் திரை உலகில் முதன்மைகள்!


முதன்முதலில் தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை லட்சுமி

முதல் ஆர்வோ கலர் படம் பட்டினப்பிரவேசம் (1977)

முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்

முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜ ராஜ சோழன் (1973)


முதன் முதலில் செவாலியர் விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசன்

முதன் முதலில் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் மலைக்கள்ளன்

முதல் 3டி படம் மைடியர் குட்டிச்சாத்தான் (1984)

ஆடல் பாடல் இடம் பெறாத திரைப்படம் அந்த நாள்

கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

1415447 


கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம்.

மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் .

இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த ஓவியங்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது.மைக்ராஸ்கோப் எனப்படும் நுண்நோக்கி வழியே மட்டுமே இவற்றை காணலாம். நகக்கணு அளவிலான இடத்தில் சிப் செயல்பாட்டிற்கு தேவையான முழு சர்க்யூட்டையும் உருவாக்கிவிடும் தொழில்நுட்ப கலையில் கைதேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் இதே திறமையை பயன்படுத்தி சிப்பின் பயன்படுத்தப்படாத ஒரு மூலையில் ஒரு சித்திரத்தை வரைந்து வைத்து விடுகின்றனர்.

ஓவியர்கள் தாங்கள் வரைந்த படைப்பின் கீழ் உரிமையுடனும் பெருமித்த்துடனும் கையெழுத்திடுவது போல் சிப் வடிவமைப்பாளர்களும் தங்களது முத்திரையாக மைக்ரோ ஓவியங்களை வரைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஓவியங்கள் எந்த அளவு சிறியவை தெரியுமா? நமது தலை முடி இருக்கிறது அல்லவா? அதன் அகலத்தில் பாதி தான் இவற்றின் அளவு இருக்கும்!

சாதரணமாக சிப்பை பார்க்கும் போது இந்த ஓவியங்கள் இருப்பதே தெரியாது.அதனால் தான் சிப்புக்குள் இருக்கும் இந்த ஓவியங்களும் உலகம் அறியாத ரகசியமாகவே இருந்தன.

யாரும் பார்க்க முடியாத இந்த ஓவியங்களை வடிவமைப்பாளர்கள் வரைந்து வைத்தது ஏன்? இதை ஒரு வித சுய திருப்தி எனலாம். சுய வெளிப்பாடு ஏன்றும் சொல்லலாம்.முழுமையான ஒன்றை உருவாக்கிய மகிழ்ச்சியில் ஒரு படைப்பாளியாக வடிவமைப்பாளர்கள் தங்கள் முத்திரையை பதிக்கும் வழியும் கூட!’

ஆரம்ப காலத்தில் இவற்றிக்கு நடைமுறை பயனும் இருந்தது. சிப் வடிவமைப்பை வேறு ஒரு நிறுவனம் காபி அடித்து விட்டால், அவை எங்களுடையவை என்று அடையாளம் காட்டுவதற்கான வழியாகவும் இந்த ஓவியங்கள் அமைந்திருதன. ஆனால் 1984 ல் அறிமுகமான காப்புரிமை சட்டத்திருத்தம் இந்த பழக்கத்தை தேவையில்லாமல் செய்து விட்டது.
இந்த ஓவியங்களை சிப் கலை, சிலிக்கான் கலை, சிலிக்கான சித்திரம் என்று பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். நாம் சிப்போவியம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் சிப் உருவாக்கப்பத்துவங்கிய காலத்தில் இருந்தே இந்த மைரோ ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அன்றைய மைக்ரோசாப்டான டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் உருவாக்கிய ஆரம்ப கால சிப்களில் சிப்போவியத்தை காணலாம். பொதுவாக சிப் வடிவமைப்பாளர்கள் தங்களுக்கு பிடித்த கார்ட்ட்டுன் பாத்திரம், செல்லப்பிராணிகள், வாகனங்கள் போன்றவற்றை வரைத்து வைத்துள்ளனர். டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவன வடிவமைப்பாளர்கள் நிலவில் கால் பதித்த சாதனை போன்றவற்றையும் சிப்போவியமாக தீட்டியுள்ளனர்.

இந்த ஓவியங்கள் பெரும்பாலும் சிப் செயல்பாட்டில் குறுக்கிடாதவையாக இருக்கும் என்றாலும் இவற்றால் சிப் செயல்பாட்டில் குழப்பம் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு.

வடிவமைப்பாளர்கள் தங்கள் குழுவில் உள்ள சக வடிவமைப்பாளர்களை கேலி செய்யவும் இந்த ஓவியங்களை பயன்படுத்தியதுண்டு. எது எப்படியோ இவற்றை பெரும்பாலும் யாரும் பார்த்து ரசிக்க முடியாது. சிப்பை மேம்படுத்தும் போது இவை வடிவமைப்பாளர்கள் கண்ணில் படலாம். ஒரு சில வடிவமைப்பாளர்கள் இந்த மைக்ரோ ஓவியங்களை பெரிதாக்கி தங்கள் அலுவலகங்களில் மாட்டி வைத்ததும் உண்டு.ஆனால் அவற்றை அலுவலக ஊழியர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

நவீன குகை ஓவியங்களாக மறைந்திருந்த இவற்றை உலகின் பார்வைக்கு வெளிச்சம் போட்டு காட்டியது மைக்கேல் டேவிட்சன் என்பவர்.

 
back to top