|
செயலியின் பெயர் ஒன் டே. அதாவது ஒரு நாள். மாற்றத்துக்கான செயலி இந்த செயலி உங்களை ஒரு நாள் கொடை வள்ளலாக்கும் நோக்கம் கொண்டது. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் கொடை வள்ளலாக்க கூடியது.எப்படி தெரியுமா? இந்த செயலி தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது.உள்ளங்கையில் வந்து நிற்கு இந்த பாலம் வாயிலாக நீங்கள் உங்க்ளை உள்ளம் கவர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கலாம். நன்கொடை என்றால் வாரி வழங்க வேண்டும் என்றில்லை. ஒரு டாலர் கொடுத்தாலும் போதுமானது.
இதற்காக தினமும் இந்த செயலி ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தை அறிமுகம் செய்யும் .அதன் நோக்கம் உங்களை ஈர்த்தால் நீங்கள் ஒரு டாலர் நன்கொடை வழங்கலாம்.கூடுதலாகவும் வழங்கலாம்.
இப்படி ஒவ்வொருவரும் ஒரு டாலர் கொடுத்தால் குறிப்பிட்ட அந்த தொண்டு நிறுவனத்தின் நல்ல நோக்கம் எளிதாக நிறைவேற வாய்ப்பிருக்கிறது.இப்படி தினமும் ஒரு தொண்டு நிறுவனம் முன்னிறுத்தப்படும். தாராள மனம் கொண்டவர்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட தொண்டு நிறுவனங்களை பார்வையிட்டு அவற்றுக்கும் நன்கொடை தரலாம்.நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
பெரும்பாலானோர் கைகளில் செல் இருக்கிறது. பெரும்பாலான செல்லில் பல செயலிகள் இருக்கின்றன.அவை பல விதங்களில் பயன்படுகின்றன.இவற்றோடு இந்த ஒரு நாள் செயலியையும் சேர்த்து கொண்டால் நல்ல நோக்கத்தோடு செயல்படும் சேவை அமைப்புகளுக்கு கை கொடுத்தது போல இருக்கும்.
இவ்வுலகில் எல்லோரும் நல்லவரே. ஆனால் அவசர யுகத்தில் பலருக்கு நன்கொடை வழங்குவதற்கான வழியை தேர்வு செய்ய முடியவில்லை. நல்ல நம்பகமான நோக்கம் என உறுதியாக தெரிந்தால் எவரும் கையில் இருப்பதில் சிறு தொகையை தாராளமாக தருவார்கள். ஆனால் அதை தெரிந்து கொள்வது எப்படி?
இப்படி என்று வழிகாட்டுகிறது இந்த செயலி.
செல்லில் குறுஞ்செய்தி பார்க்கவும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் பார்க்கவும் செல்விடும் நேரத்திற்கு நடுவே இந்த செயலியையும் கவனித்தால் நன்கொடை தேவைப்படும் செயல்களை அறிந்து உதவலாம்.
அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியை அதன் நோக்கம் மற்றும் தாக்கம் ஏர்படுத்தக்கூடிய அதன் ஆற்றலுக்காகவும் இங்கே அறிமுகம் செய்கிறேன். தவிர தேடியந்திர முதல்வனான கூகுல், பல தன்னாரவ செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அறிமுகமாகியுள்ள ஒரு நாள் செயலி வாழ்க.
செயலி முகவரி;http://www.google.com/onetoday/