
நடிகர் சிம்பு ‘வாலு’, ‘வேட்டைமன்னன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களையும் நீண்டகாலமாக கடத்தி வந்த சிம்பு சமீபகாலமாக ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட ‘வேட்டை மன்னன்’ படம் குறித்து சிம்பு வாய் திறக்காமலே உள்ளார். இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில், சிம்பு பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில்...