.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 31, 2013

விஸ்வரூபம் ரகசியம்!

vishwaroopam

கமலின் விஸ்வரூபம் படத்தின் ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகநாயகனின் படம் என்றாலே பல சுவாரசியமான செய்திகள் மறைந்திருக்கும்.

ஆனால் அவற்றையெல்லாம் வெளிவிடாமல் ரகசியமாக காத்து வருகிறார் கமல்.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் ரகசியம் ஒன்று வெளிவந்துள்ளது.


 அது என்னவென்றால் படத்தில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் காட்சிகள் அனைத்தும் அடையாறு சத்யா ஸ்டுடியோ மைதானத்தில் எடுக்கப்பட்டவையாம்.

அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்டதாக படத்தில் காட்டப்படும் காட்சிகள் கூட உள்ளூ‌ரில் எடுக்கப்பட்டவைதானாம்.

எல்லாமே கிராபிக்ஸ் வேலைகள் தான் என்ற ரகசியம் இப்போது தான் வெளிவந்துள்ளது.

"தல" ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு மாட்டுகிறார்!

ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தல அஜித்தின் ஆரம்பம் படம் இன்று(அக்டோபர் 31) தமிழகம் எங்கும் வெளியானது.
பில்லா வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்- அஜித் கூட்டணியில் உருவான படம் ஆரம்பம்.


இப்படத்தில் அஜித்துடன் ஆர்யாவும் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா- டாப்சி நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, அதுல் குல்கர்னி, ஆடுகளம் கிஷோர் என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் தயாரித்துள்ளார்.


இப்படம் இன்று தமிழகம் முழுக்க 1400 தியேட்டர்களில் ரிலீசானது.


ஏற்கனவே சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அஜித்தின் ஆரம்பம் படம் ஒருவாரத்திற்கு புக்காகிவிட்டது.
சென்னையில் அதிரடி பட்டாசுகளோடு, ரசிகர்களின் கூட்டம் சென்னை தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது.


சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே படம் வெளியானது.


சென்னை, ராக்கி தியேட்டரில் 4.30 மணிக்கும், காசி தியேட்டரில் 5மணிக்கும் வெளியானது, கோவையில் அதிகாலை 4 மணிக்கு படம் தொடங்கியது.
சென்னையில் ரசிகர்களின் கூட்டத்தோடு சிம்பு, இயக்குநர் ராஜேஷ், டாப்சி, ஞானவேல் ராஜா, பாண்டிராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்களும் அதிகாலையிலேயே அஜித்தின் ஆரம்பம் படத்தை சென்று பார்த்தனர்.


அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர், படத்தில் தல வந்து ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு அதை மாட்டுவார், அ‌ந்த காட்சியை பார்த்துவிட்டு நான் ஒரு நடிகன் என்பதையும் மறந்து ஒரு ரசிகனாக கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.


தயாரிப்பாளர் தாணு, நலிந்து போன தயாரிப்பாளர் ஒருவருக்கு முதன்முறையாக வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் அஜித் தான். அந்த மனப்பான்மை தல ஒருத்தருக்கு மட்டும் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை தவிர்த்து மதுரை, கோவை, திருச்சி, சேலம் என்று அனைத்து ஏரியாக்களிலும் ஆரம்பம் படத்திற்கு கூட்டம் களைகட்டி காணப்படுகிறது.

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.

இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

பீர் பிராண்ட்டுகள்

உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.


பீர் ஃபோபியா


உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?


உண்மையான பீர்

பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.


சளிக்கு சிறந்தது

சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.


இதய நோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.


அழகு

பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.


ஸ்மார்ட்டாக்கும்


எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.


ஆற்றல் பானம்

உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.


விலை உயர்ந்த பீர்


மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'Vielle Bon Secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.

தமிழ் பெயர் படங்களுக்கும கேளிக்கை வரி -ஹைகோர்ட்டில் வழக்கு!

தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது என்றும், வரிச்சலுகை வழங்கிய படத்திற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.

31 - cine tax

கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாள் தமிழக மக்கள் உரிமைக் கழக இணை செயலாளர் புகழேந்தி பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “சினிமா படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 22.7.2006-ல் உத்தரவை பிறப்பித்தது.


 இதன் பின்னர் 4 மாதம் கழித்து மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. பழைய படம், புது படம் எது வேண்டுமானாலும் தமிழ் பெயர் இருந்தால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில் 1950-ம் ஆண்டு எடுக்கப்பட்ட “ரத்தக்கண்ணீர்”, “மனோகரா” உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் “மன்மதன்”, “போக்கிரி” ஆகிய படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டன.


அரசு உத்தரவு எதிரொலியாக ஜில்லுன்னு ஒரு காதல், தமிழ் எம்.ஏ., எம்டன் மகன் ஆகிய பெயர் கொண்ட படங்கள் வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக “சில்லுன்னு ஒரு காதல்”, “கற்றது தமிழ்”, “எம்மகன்” என்று தமிழில் பெயரை மாற்றி வைத்து வரி விலக்கை பெற்று விட்டனர். இந்த வரி சலுகை என்பது படங்களிடையே பாரபட்சமாக உள்ளது. பொதுநலன் கருதிதான் வரிச் சலுகை வழங்க வேண்டும். மற்றபடி வரி சலுகை வழங்க சினிமா சட்டத்தில் இடமில்லை. தமிழ் பெயர் படங்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, சமுதாய வளர்ச்சிக்கோ பயன்படும் வகையில் இல்லை.


இவ்வாறு வீணாக வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை கேளிக்கை வரி இழப்பு ஏற்படுகிறது. 2003-2004-ல் மட்டும் ரூ.75 கோடியே 7 ஆயிரம் கேளிக்கை வரி கிடைத்தது. ஆனால் 2006-ம் ஆண்டு இது 16 கோடியே 35 ஆயிரமாக குறைந்து விட்டது. தமிழ் பெயர் என்பதற்காக வரி சலுகை வழங்குவது அரசுக்கு வரி இழப்பு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே தமிழ் பெயர் கொண்ட படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.”என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். “எந்த படங்களுக்கு வரி சலுகை அளிப்பது, எதற்கு அளிக்க தேவையில்லை என்பதை முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றும், இதில் கோர்ட்டு தலையிட முடியாது” என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் இது குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது என்றும் தீர்ப்பில் கூறியிருந்தனர்.


இந்நிலையில் மற்றொரு வழக்கறிஞர் மோட்சம் இப்போது தாக்கல் செய்துள்ள இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
back to top