
தீபாவளியன்று வைணவர்கள் கோவர்த்தன பூஜையைச் செய்து அன்னதானம் செய்வர்.* வங்காளிகள் காளி பூஜையாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.* வடநாட்டினர் தீபாவளியைக் குபேர பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.* இராஜபுதனர்கள் இந்த நாளை ராமபிரானுக்குரிய நாளாக வழிபடுகின்றனர்.* ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஒரு தீபாவளிநாளில்தான் நிறுவினார்.* ஜைனர்கள் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.* சீக்கியர்கள் மதகுருவான குருநாணக் பிறந்தநாள் தீபாவளியாகும்* மேற்கு வங்கத்தில் தீபாவளியன்று இளம்பெண்கள் தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.* தீபாவளியின்போது நாம் பட்டாசு வெடிப்பது போல் ஜெர்மனி நாட்டில் வசந்த கால விழாவில் பட்டாசு வெடிக்கின்றனர்.*...