.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 2, 2013

தீபாவளி எத்தனை தீபாவளி!

 
 
 
தீபாவளியன்று வைணவர்கள் கோவர்த்தன பூஜையைச் செய்து அன்னதானம் செய்வர்.

* வங்காளிகள் காளி பூஜையாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.

* வடநாட்டினர் தீபாவளியைக் குபேர பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.

* இராஜபுதனர்கள் இந்த நாளை ராமபிரானுக்குரிய நாளாக வழிபடுகின்றனர்.

* ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஒரு தீபாவளிநாளில்தான் நிறுவினார்.

* ஜைனர்கள் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

* சீக்கியர்கள் மதகுருவான குருநாணக் பிறந்தநாள் தீபாவளியாகும்

* மேற்கு வங்கத்தில் தீபாவளியன்று இளம்பெண்கள் தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.

* தீபாவளியின்போது நாம் பட்டாசு வெடிப்பது போல் ஜெர்மனி நாட்டில் வசந்த கால விழாவில் பட்டாசு வெடிக்கின்றனர்.

* தீபாவளியின் போது ஆந்திரா, மகாராஷ்டிரம், வங்காளம் போன்ற மாநிலங்களில் ரங்கோலி கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

* பல்வேறு தகவல்களை அள்ளி வழங்கும் இன்டர்நெட்டில் தீபாவளிப் பண்டிகை குறித்த 3000க்கும் மேலான வெப்சைட்கள் உள்ளன.

* சீக்கியர்கள் தங்கள் சமய குருவான கோவிந்தசிங் எதிரிகளின் சிறையிலிருந்து தப்பி வந்த நாளை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.

* பீகார் மக்கள் கண்ணன் கோவர்த்தனகிரிமலையை குடையாக எடுத்த தினமாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

* தீபாவளி திருமாலின் கிருஷ்ணாவதாரச் சிறப்பையும், ஓணம் திருமாலின் வாமனாவதார சிறப்பையும் கொண்டாடும் பண்டிகையாகும்.

* ஞான நூல்களுள் பகவத்கீதை சிறப்பான இடத்தைப் பெறுவது போல தீபாவளி பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தைப் பெறுவதால் இதனை ஆச்சார்ய ஸ்வாமிகள் பகவத்கீதையின் தம்பி என்று அருளியுள்ளார்கள். லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வம் வளரும் என்று நம்பிக்கை.

* சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளித் திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. அதனால்தான் விக்ரம சகாப்தம் தோன்றியதாகக் கூறுவர்.

* தேனி மாவட்டம் சங்கம்பட்டியில் 24 மனை செட்டியார்கள் வசித்து வருகிறார்கள். பல மாவட்டங்களில் தலை சுமையாக ஜவுளிகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்வது அவர்கள் குல வழக்கம். ஆண்டிப்பட்டி&தேனி சாலையில் அவர்கள் குல தெய்வமாக கல்லால் செதுக்கப்பட்ட யானை சிலையை வைத்து வழிபடுகின்றனர். தீபாவளியன்று மாலையில் அந்த யானைக்கு நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வார்கள். பின் பட்டுத் துணி போர்த்தி பட்டத்து யானையைப் போல் அலங்கரித்துப் பொங்கல் வைத்து விழாக் கொண்டாடுகிறார்கள். அப்போது 24 மனை கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள் குலதெய்வத்தை வழிபட கூடிடுவர்.

* தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் முகலாய வம்சத்தைத் தோற்றுவித்த பாபர் காலத்திலிருந்து ஏற்பட்டது.

* பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்ரவர்த்தி முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் அந்நாளில் ஒளியூட்டப்படும் தீபமே யமதீபம் என்றும் வாமனபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தீபாவளி பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் இந்த விழாவை டோரா நாகாஷு என்றும், ஸ்வீடனில் லுசியா என்றும், தாய்லாந்தில் தீபஆவளி எனும் விளக்குத் திருவிழாகாக லாயகிரதோஸ் என்றும், மியான்மரில் தாங்கிஜி என்றும் சீனாவில் நஹும் ஹூபர் என்றும் கொண்டாடுகின்றனர்.


ஒலி எழுப்பும் பட்டாசுகள் இரவில் வெடிக்கத் தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பண¢டிகை மற்றும் திருவிழா காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை செவிட்டுத் தன்மை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே தீபாவளியன்று கவனக்குறைவு, அலட்சியத்தால் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட¢டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் ஒலி எழுப்பும் பட¢டாசுகளை வெடிக்கக் கூடாது.
திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசு வெடிக்கலாம். குடிசைகள்,

எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வாண வெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதை தவிர்க¢க வேண்டும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. பெரியவர்கள் உடனிருப்பது அவசியம். பட்டாசு வெடிப்பதற்கு முன்பு பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது. இதையும் மீறி வெடிப்பவர்கள் போலீசாரால் நீதிமன்றத்த¤ல் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவர் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரவெடி தீபாவளி அதிரடி தள்ளுபடி


கெனித்பார்கர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிரடி தள்ளுபடியாக 70% விலை குறைப்பு செய்திருக்கிறது. கெனித் பார்க்கர், பிரபல ஆடவர் பிராண்ட், இந்த தீபாவளிக்கு விலை களில் ஆச்சரியம் செய்திருக்கிறார்கள். மீ700/ முதல் மீ2,000/& வரை சந்தை மதிப்புள்ள ஆடைகளை மீ330, மீ460, மீ530 என்ற விலைகளில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஃபார்மல்1, கேஷ்வல்ஸ், செமி ஃபார்மல்ஸ், பார்ட்டி வேர்ஸ் என்று எல்லா பிரிவு களிலும் டிசைனிங் டீம் அசத்தியுள்ள னர். தாம்பரம் மற்றும் திருவல்லிக் கேணியில் புதிய கிளைகளையும் துவக்கியுள்ளனர்.

அஜீத் வாழ்த்து - தீபாவளியை சந்தோஷத்துடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்!


தீபாவளி திருநாளை முன்னிட்டு நடிகர் அஜீத் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தீபாவளியை முன்னிட்டு நேற்று அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டியிருக்கிறது. இத்திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.


இந்நிலையில் சில இடங்களில் ரசிகர்களின் ஆர்வத்தால் சில பாதிப்புகள் வந்தாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனை அடுத்து ‘வீரம்’ படப்பிடிப்பில் இருக்கும் அஜீத் தனது உதவியாளர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தி பின்வருமாரு: திரைப்படம் என்பது அனைவரும் பார்த்து மகிழவே எடுக்கப்பட்டது.எனது ரசிகர்களின் அன்பை நான் அறிவேன். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில திரையரங்கில் ரசிகர்கள் சேதப்படுத்துவதாக வந்த செய்தி என்னை கவலை அடைய செய்துள்ளது. நாம் யார் மனதையும் புண்படுத்தவோ, இல்லை அவர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவோ கூடாது.



தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் சந்தோஷத்துடனும்,பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்.

தமிழ் மக்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் அஜீத்.

தீபாவளி சிந்தனைகள்!

தீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் "தீபாவளி' என்கிற பண்டிகையைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட பண்டிகையாக "தீபாவளி' மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா என்பது தேவையற்ற விவாதம்.


மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்களின் புத்தாண்டுப் பிறப்பை நாம் ஏற்றுக்கொண்டு, கொண்டாடத் தயங்காதபோது, ஆறு நூற்றாண்டுகளாக நமது கலாசாரத்தில் கலந்துவிட்ட பண்டிகையைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? காதலர் தினம் கொண்டாடுவதைவிட, தீபாவளி கொண்டாடுவது எந்தவிதத்தில் தேவையற்றதாகிவிட்டது?


பணக்காரர்களுக்குத் தங்கள் வசதி வாய்ப்புகளை வெளிச்சம்போட இதுபோன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல, ஏழைகளுக்கும் மத்தியதர வகுப்பினருக்கும் நாளும் உழைத்து ஓடாய்த் தேயும் விவசாயி, கூலித் தொழிலாளி போன்ற பாட்டாளி வர்க்கத்தினருக்கும் தீபாவளி பண்டிகை தங்களது குடும்பத்தினருடன் குதூகலமாக இருக்க அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு. பலருக்கும் புத்தாடை வாங்கவோ, பெறவோ தீபாவளி காரணமாகின்றது என்பதுதான் உண்மை.


தீபாவளித் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர் (பர்மா), மொரீஷியஸ், கயானா, சுரிநாம், மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி போன்ற இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நாடுகளில் எல்லாம் அரசு விடுமுறை நாளாக இருப்பதிலிருந்தே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் எத்தகையது என்பது தெரிகிறது.


நாமெல்லாம் தீபாவளி என்பது நரகாசுரனைக் கிருஷ்ணனும் சத்தியபாமாவும் வதைத்ததைக் கொண்டாடும் பண்டிகை என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தீபாவளிக்கு இன்னொரு புராணப் பின்னணியும் உண்டு. தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்துக்கொண்டு ராமபிரான் சீதாப்பிராட்டியுடன் அயோத்திக்குத் திரும்பிய நாள் தீபாவளி என்று கூறப்படுகிறது. இராவணனை அழித்துவிட்டு நாடு திரும்பும் ராமபிரானை, வழிநெடுக விளக்குகளை ஏற்றி வைத்து வாணவேடிக்கை முழங்க அயோத்தி நகர மக்கள் வரவேற்பதைக் குறிக்கும் நாளாக தீபாவளி அறியப்படுகிறது.


பௌத்த மதத்தினருக்கு புத்த பூர்ணிமாபோல, ஜைனர்களுக்கு அவர்களது கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன் நிர்வாணம் அல்லது முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி!
அதேபோல, சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு பண்டிகை நாள்தான். முகலாய மன்னர்களால் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்களுடன் சிறையிலிருந்து தப்பி வந்த தினமாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பி வந்த குரு ஹர்கோவிந்த் அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோவிலில் விளக்கை ஏற்றி மகிழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் எல்லா சீக்கிய குருத்வாராக்களும் தீபாவளி அன்று ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. வாண வேடிக்கைகளும், விருந்துகளும் சீக்கியர்களுக்கும் உண்டு.


நாம் புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகளையும், பலகாரங்களையும் சுவைத்து மகிழும் வேளையில், ஒரு அன்பு வேண்டுகோள். ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியில்லாமல், மாற்று உடை இல்லாமல், தலையில் எண்ணெய் தடவக்கூட முடியாமல் எத்தனை எத்தனையோ பேர் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது; ஏக்கம் இருக்கிறது. தெருவோரமோ, ஓலைக்குடிசையோ... அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள்.


வறுமை என்பது விதி என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அப்படிச் செய்வது சிறுமை. வறுமை கண்ட இடத்து நம்மால் இயன்ற உதவிகளை நல்குவதுதான் நமக்குப் பெருமை.


தீபாவளிப் பண்டிகையை சீரும் சிறப்புமாகக் கொண்டாடுங்கள். அதேநேரத்தில், ஏதாவது ஓர் ஏழைக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த ஓலைக் குடிசையிலும் குழந்தைகள் புத்தாடை உடுத்தி, வயிறார உண்டு, மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்து மகிழ்வதை உங்களது தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்குங்கள். அந்த ஏழைகளின் மகிழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யுங்களேன்.


நலம் பெருகட்டும்! நாடு செழிக்கட்டும்! இல்லை என்பதே இல்லாத, இன்பமயமான உலகம் உருவாகட்டும்!

நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)




கந்தனும், முருகனும் நண்பர்கள்.

கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.

ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.

உடன் கந்தன்...' நான் புதையலைக் கண்டேன்' என்றான்.

அதற்கு முருகன் ...'இல்லை நண்பா..நான் என்று சொல்லாதே...நாம் புதையலைக் கண்டோம்..என்று சொல்' என்றான்.

தனக்கும் அதில் பங்கு உண்டு என்று மறைமுகமாக உணர்த்தினான்.

அவர்கள் சிறிது தூரம் சென்றதும்...அந்த மூட்டைக்கு உரியவன் ...கந்தனும்,முருகனும் தனக்கு சொந்தமான மூட்டையை எடுத்து செல்வதைப் பார்த்து அவர்களை நோக்கி
'திருடன்..திருடன்' என ஓடி வந்தான்.

உடன் கந்தன் முருகனிடம் ' நாம் ஒழிந்தோம்' என்றான்.

அதற்கு முருகன் 'இல்லை நண்பா...நீ முன்னால் சொல்லியபடியே சொல்..நீயே மூட்டையை கண்டெடுத்தாய். நாம்..இல்லை...என்று ஓடிவிட்டான்.

நமக்கு ஆதாயம் வரும்போது நம்முடனும்...ஆபத்து வரும்போது நம்மை விட்டு விலகி இருப்பவனையும் நாம் நண்பனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
அவர்கள் நம் விரோதியை விட கொடியவர்கள்.
 
back to top