.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 6, 2013

கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி - நாட்டுக்கு தலைவர் யார்? அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்த தயார்!

 
 நாட்டுக்கு நான்தான் தலைவர் என அரசியல்வாதி கூறினால் அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஏற்கனவே சொன்னதுபோல் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன். பொழுதுபோக்குகள் சமுதாயத்தை எப்படி வழிநடத்த உதவுகின்றன என்கிறார்கள். சமூகம்தான் பொழுதுபோக்கை வழிநடத்துகிறது. சமூகத்தில் உள்ளதைதான் பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதிபலிக்கின்றன.

தென்னிந்திய நடிகர்கள் பலர் அரசியலில் இருப்பதுபோல் கமல்ஹாசன் 2014ம் ஆண்டு அரசியலுக்கு வருவாரா?’ என்று கேட்கிறார்கள். கமல்ஹாசனுக்கு பார்வையாளர்கள் மட்டுமே தேவை. எப்போதுமே நான் வித்தியாசமாக செய்பவன். குறிப்பிட்ட விஷயத்தில் எதற்காக மற்றவர்கள் செய்ததைப்போல் நானும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

5 வருடத்துக்கு ஒருமுறை எனது அரசியல் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். அது தொழில் ரீதியானதல்ல. ஓட்டு போடும்போது ஒவ்வொருவரும் தங்கள் குரலை உறுதியாக எதிரொலிக்க வேண்டும். அதன்பிறகு, இலவசமாக நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்லும் அரசியல் தொழில் தெரிந்தவர்களிடம் அந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாம் நல்ல சம்பளம் தந்துவிட்டு நாட்டை நல்லமுறையில் வழிநடத்திச் செல்ல அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் நமது பிரதிநிதிகள்தான். தயவுசெய்து அவர்களை தலைவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். மக்கள்தான் தலைவர்கள். எந்த அரசியல்வாதியாவது நான்தான் தலைவர் என்றால் அவர்களுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கமல் கூறினார்.

தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள்!

தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே !

 ~ 01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. ~


02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.


  ~ 03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.

  * 04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.


* 05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.


 * 06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.


* 07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.


 * 08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.

* 09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.


 * 10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.


* 11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.


* 12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.


* 13. ௨வது உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.

சில கண்டிபிடிப்புகள் உருவான கதைகளை அறிந்து கொள்வோம் !!


காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?
...
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு ‘வல்க்ரோ’ என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் ‘வல்க்ரோ’வுக்கு உண்டு.

சோப்


குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.

சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.

‘டூத் பிரஷ்’

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

எச்சரிக்கை! பெண்களுக்காக…



56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையா ….என தெரியவில்லை….
காரணம், அதிகபட்சமான பெண்கள் இதையே உபயோக படுத்துகிறார்கள்...

எனினும் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோகிக்கப் படுவதாகவும், இது வெளிவரும் திரவத்தை gel நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால் சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad களை பயன்படுத்துமாறும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது…

நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது எனவும்… செய்திகள் பரவலாக வருகிறது.

எனவே மக்கள் நலன் கருதி இதை பகிர்கிறேன்…

இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவையில்லை ..

இதை பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது சகோதரிகளுக்கு உதவிடுவோம் …
 
back to top