.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 7, 2013

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


nov 7 - sugar chart.1


தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

அது சரி! சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?எப்படி என்கிறிர்களா?

முதலில் சாதாரண ரத்த பரிசோதனை பற்றி பார்ப்போம்:ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் – அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 – அதற்கு கீழ் இருந்தால் ‘இயல்பான நிலை’ என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.


இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும்குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.


2 ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை:முன்னரே சொன்னது போல் நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).
                            

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்- மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

nov 7 - sugar chart
 

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.

சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போம்

மெட்டல் பொருட்கள்:

சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.

வாணலி:

பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம். ஆனால், இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால், அடிபிடிக்காமல் இருக்கும்.

அடிப்பிடித்தல்:

வெங்காயம் வாணலியில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது ஏதேனுமூ அடி பிடித்துவிட்டால், அவை நீண்ட நாட்கள் போகாமல் இருக்கும், அந்த கறை நீங்குவதற்கு, சிறிது வெங்காயத்துண்டுகளை எடுத்து, அந்த வாணலியில் தேய்த்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கறைகள் நீங்கிவிடும்.

கிரில் மிசின்:

வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும் வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து, நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.

நாற்றம்:

வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது எவ்வளவு நேரம் தான் மூக்கை மூட முடியும். ஆகவே அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்.

வீட்டிலேயே நகைகளை சுத்தம் செய்ய சில குறிப்புகள்!

அம்மோனியா

வைரங்கள் தான் ஒரு பெண்ணின் உற்ற நண்பன். ஆனால் அவை அழுக்காக இருக்கும் போது அல்ல. ஆகவே ஒரு கப் வெந்நீருடன், 1/4 கப் அமோனியாவை கலந்து வைர நகைகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மென்மையான டூத் பிரஷால் மீதம் இருக்கும் அழுக்கை அகற்றவும். குறிப்பாக, அமைப்புகளின் பிளவுகளிலும், வைரத்தின் அடிப்பகுதிகளிலும் நன்றாக தேய்க்கவும்.

வினிகர்

வெள்ளை வினிகர் கொண்டு தங்கம் மற்றும் கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்வது சுலபமானது அல்ல. ஆகவே ஒரு ஜார் வினிகரில் நகைகளை 10-15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அதுமட்டுமின்றி அவ்வப்பொழுது கலக்க வேண்டும். பின் மென்மையான பிரஷால் தேய்த்து மீதம் இருக்கும் அழுக்கை அகற்றவும்.


ஆன்டாசிட்

ஆன்டாசிட் மாத்திரை வயிற்றை தணிப்பது மட்டுமல்லாது, நகைகளையும் சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு வெந்நீரில் 2 ஆன்டாசிட் மாத்திரைகளை போட்டு, அதில் நகைகளை போட்டு, 2 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து அலச வேண்டும்.

அலுமினியத்தாள்

அலுமினியத்தாள் கொண்டு வெள்ளிப் பாத்திரங்களை சுத்தம் செய்வது போல், வெள்ளி நகைகளையும் சுத்தம் செய்யலாம். ஆகவே ஒரு தட்டில் ஒரு துண்டு அலுமினியம் பாயில் வைத்து, அதன் மேல் நகைகளை வைக்கவும். பின் அதில் சிறிது சமையல் சோடா தெளித்து, வெந்நீர் ஊற்றவும். இது நகைகளில் பட்டு பாயிலுக்கு செல்லும். குறிப்பாக வெந்நீரை ஊற்றும் போது, நகைகளின் எல்லா பக்கமும் படும்படி சுற்றி ஊற்ற வேண்டும். பின்னர் அதனை வெளியே எடுத்து தண்ணீரால் அலச வேண்டும்.


தண்ணீர் மற்றும் சோப்பு

மென்மையான துளைகள் உள்ள முத்து மற்றும் டர்கைஸ் நகைகளை சிறப்பாக சுத்தம் செய்வதற்கு, சோப்பு மற்றும் தண்ணீரை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. எனவே 2 கப் வெந்நீருடன் சிறிது மைல்டு சோப்பு பவுடர் கலந்து, அதில் முத்து மாலையை ஊற வைத்து, பின் ஒவ்வொரு முத்தையும் காய்ந்த மென்மையான காட்டன் துணி கொண்டு துடைத்து, காய வைக்கவும். (முத்து நகைகளை அதிக நாட்கள் உபயோகித்தாலும், அதன் பளபளப்பு எளிதில் குறையாது. அதனால் அணிவதற்கு தயக்கம் வேண்டாம்). டர்கைஸ் நகைகளை சுத்தம் செய்வதற்கு சோப்பு கூட தேவை. இல்லை. மென்மையான பிரஷை வெந்நீரில் ஊற வைத்து கற்களை தேய்த்து, சுத்தமான துணியால் துடைத்து, நீண்ட நேரம் காய வைத்தாலே போதும்.

பீர்

தங்க நகைகள் நன்கு ஜொலிக்க வேண்டுமெனில், தங்க நகைகளை பீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, மென்மையான துணி கொண்டு துடைத்தால், நகைகளில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.


டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் சில்வர் நகைகளை பளிச்சென்று மின்ன உதவும். அதற்கு டூத் பேஸ்ட்டை சில்வர் நகைகளின் மீது 10 நிமிடம் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

உப்பு

நகைகளில் தங்கியுள்ள மறைந்துள்ள அழுக்குகளையும் உப்பானது நீக்கிவிடும். அதற்கு உப்பை நீரில் கலந்து, அதில் நகைகளைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் உப்பானது நகைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கிவிடும்.


கெட்சப்

என்ன ஆச்சரியாமாக உள்ளதா? ஆம், கெட்சப் கொண்டு கல் பதித்த நகைகளை சுத்தம் செய்தால், கற்கள் நன்கு ஜொலிக்கும். அதற்கு கல் பதித்த நகைகளில் சிறிது கெட்சப்பை தடவி, வட்ட நிலையில் தேய்த்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்.

குறிப்பு:

மென்மையான கற்களான ஓபல் மற்றும் முத்து நகைகளை, கெமிக்கல் அல்லது கடுமையான சிராய்ப்பான் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு தான் கழுவ வேண்டும்.

பாசிட்டிவ் & நெகடிவ் எண்ணங்கள் நல்லதுதான் ( எல்லாம் நன்மைக்கே )

பொதுவா ஏதாவதொரு விசயம் நடக்கணும்னு நெனச்சு, ரொம்ப நம்பிக்கையா அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கும்போது, அந்த விசயம் நடக்காதுங்குற மாதிரி யாராவது பேசினா நமக்கு எவ்ளோ கோவம் வரும்Huh?


“ஏய்.. அபசகுனமாப் பேசாதே“னு அவங்கள திட்டுவோம். சகுனம் பாக்குற பழக்கம் தவறுங்குறது பலருடைய கருத்து. ஆனா அப்டி நெனைக்கிறவங்க கூட, அபசகுனமா பேசுறத விரும்புறதில்லை. ஆனா நா இங்க சொல்ல வர்றது என்னனா.. அபசகுனமான எண்ணங்களும் நமக்குள்ள வேணும்குறது தான்.


நமக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் இருப்பது நல்லதுதான், ஆனா எப்போதும் அதுவே பழக்கமாகிவிடும் பட்சத்துல, நெகடிவ்வாக நடக்கும் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் பலருக்கு இருப்பது கிடையாது. “ஓவர் கான்ஃபிடன்ட், உடம்புக்கு ஆகாது“னு சொல்வாங்க.. அது கிண்டலுக்கு சொல்றதுனு தோணலாம். ஆனா அதுதான் உண்மையும் கூட. அளவுக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு வைக்கும்போது, ஒருவேளை அது ஏமாற்றம் குடுத்துவிட்டால், அதைத் தாங்கும் மன வலிமை நமக்கு ஏற்படுவதில்லை.


அதுக்காக தன்னம்பிக்கை இருக்கக் கூடாதுனு சொல்ல வரல. எந்த விதமான மாற்றத்துக்கும் மனதைப் பழக்கப்படுத்திக்கணும்னு சொல்ல வர்றேன். நமக்குப் பிடிச்சமாதிரியான சூழல்கள்ல மட்டுமே நம்மள பொருத்திப் பாக்குறது தான் மனித நடைமுறை. நமக்குப் பிடிக்காத அல்லது நமக்கு எதிரான ஏதாவது சம்பவம் நடந்துருச்சுனா உடனே.. “எனக்கு மட்டும் ஏன் தான் இப்டி நடக்குதோ“னு நொந்துக்குறது தான் மனுஷங்களோட இயல்பு.


உதாரணத்துக்கு ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு, அந்த வேலை கட்டாயம் தனக்கு கிடைக்கும்னு அபாரமான நம்பிக்கைல, முதல் மாசம் வாங்கப்போற சம்பளத்துல என்னென்ன செலவு பண்ணலாம்குறது வரைக்கும் திட்டம் போட்டு வச்சிருப்பாங்க. சட்டுனு அந்த வேலை அவங்களுக்கு கிடைக்காதுங்குற சூழ்நிலை வரும்போது, அந்த ஏமாற்றத்த அவங்களால தாங்கிக்க முடியிறதில்ல. தனக்கு இனிமே வேலையே கிடைக்கப் போறதில்லையோங்குற மாதிரியான விரக்தி நிலைக்குப் போயிட்றாங்க.


ஒரு விசயம் நடக்கணும்னு நெனைக்கலாம்.. ஆனா அதே விசயம் நடக்கலனா மேற்கொண்டு என்ன பண்றதுன்னும் முன்கூட்டியே யோசிக்கணும். நேர்மறையாவே யூகம் பண்ணிட்டு, ஒருவேளை எதிர்மறையா நடக்கும்போது அந்த நேரத்துல என்ன செய்றதுனு தெரியாம முழிக்க கூடாது.


ஆனா.. அடுத்தவன் ஏதாவது காரியத்துக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருக்கும்போது லூசு மாதிரி “இதெல்லாம் நடக்காதுடா, விட்டுடு“னு சொல்லி அடி வாங்கிடாதீங்க.. நா சொல்றது உங்களோட தனிப்பட்ட உணர்வுகளப் பத்தி மட்டும் தான்.


இன்னும் தெளிவா சொல்லணும்னா... உதாரணத்துக்கு காதல் விசயத்த எடுத்துக்கலாம். (இப்ப படிப்பீங்களே..). ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணும்போது ரொம்பவே நம்பிக்கையோட அவகிட்ட சொல்லலாம். ஆனா உங்க லவ்வ அந்தப் பொண்ணு ஒருவேளை நிராகரிச்சுட்டா, மனசுடஞ்சு போய்டாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும்.


மறுபடியும் அவளுக்குப் (பிடிச்ச மாதிரி) புரிய வைக்க முயற்சி பண்ணணும். இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். (லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).


காதல், வேலை வாய்ப்புனு மட்டுமில்ல.. நம்மளோட சின்னச் சின்ன விசயத்துல கூட ஏதாவதொரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டு தான் இருக்கும். குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்னு நாம எந்தளவு நம்புறோமோ.. அதே அளவு, அந்த சம்பவம் நடக்காமலும் போகலாம்.. அப்ப அடுத்தகட்ட நடவடிக்கையா என்ன பண்றதுணும் யோசிச்சு வைக்கணும். அப்படி எதிர்மறையான விளைவுகளப் பத்தியும் முடிவெடுத்து வைக்கிறது, நம்மல தோல்வியால ஏற்பட்ற பாதிப்புல இருந்து மீட்கும்.


அதுக்காக எப்ப பாத்தாலும், தோத்துடுவோம்னு நெனச்சுகிட்டே எந்த முயற்சியும் பண்ணாம இருக்குறது முட்டாள் தனம். நம்மளால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணணும். அது நடக்காத பட்சத்துல அந்த முடிவ ஏத்துகிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுக்கணும். அந்த ஏமாற்றத்தோட பாதிப்புலயே மூழ்கிடக் கூடாது.    ஆல் த பெஸ்ட்.

 
back to top