.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 9, 2013

விஐபிக்களின் உறவினர்களுக்கு விருது : வெளிவந்திருக்கும் புதிய பூதம் !

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில், விஐபிக்களின் உறவினர்கள் பலரும் இடம்பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.




பத்ம விருதுகள் பெற முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் சார்பில் சிலரை விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், சுமார் 1,300 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், பல்வேறு விஐபிக்கள், தங்களது பிள்ளைகள், உடன்பிறப்புகள், உறவினர்களின் பெயர்களையே பரிந்துரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர், தனது சகோதரி உஷா மங்கேஷ்கர், பின்னணி பாடகர் சுரேஷ் வட்கர், சமூக சேவகர் ராஜ்மால் பரக் ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

அதே போல, பத்ம விபூஷன் விருது பெற்ற உஸ்தாத் அம்ஜத் அலி, அவரது மகன்கள் அமான், அயான் மற்றும் பாடகர் கௌஷிகி சக்ரபர்தி, தபலா கலைஞர் விஜய் காடே, கலைஞர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்கிற நடராஜ கிருஷ்ணமூர்த்தி, சித்தார் கலைஞர் நிலத்ரி குமாரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

ஒரு சில பிரமுகர்கள் இதுபோல தங்களது உறவினர்கள், நண்பர்களின் பெயர்கள் என 25 பேரைக் கூட பரிந்துரைத்துள்ளனர்.

விருதுகள் என்பது கலைஞர்களையும் கலைகளையும் ஊக்கு விக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த காலம் போய், அதிலும் ஊழலும், முறைகேடுகளும் நிறைந்துவிட்டன.

மங்கள்யானின் புவி வட்டப் பாதை 3வது சுற்று அதிகரிப்பு!


 



செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், புவி வட்டப் பாதையை அதிகரிக்கும் 3வது சுற்றுப் பாதை இன்று காலை துவங்கியது.

40,186 கி.மீ. ஆக இருந்த சுற்றுப்பாதை தற்போது 71,363 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து 4 மற்றும் 5வது சுற்றுப் பாதைகள் மூலம், புவி வட்டப் பாதையின் தூரம் அதிகரிக்கப்பட உள்ளது.

பல்வலிக்கான வீட்டு வைத்தியம்!


நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.

சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.

திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

எரிவாயு இணைப்பு கொடுக்கும்போது கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் என்ன?

எந்த இடத்தில் எரிவாயு இணைப்பு கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கீழ்க்கண்ட முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை சமையலறையில் பின்பற்றினாலே அது எரிவாயுவினால் ஏற்படும் விபத்துகளுக்கான காப்பீடு போலாகும்.


•எரிவாயு சிலிண்டர் வைக்கும் அறை அல்லது சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடியிருக்கும் அறையில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கக்கூடாது

•எரிவாயு சிலிண்டர், அதன் அழுத்தத்தினை சரி செய்யும் நாப் அல்லது பட்டன், எரிவாயு செல்லும் இரப்பர் குழாய் போன்றவற்றை எளிதில் கையாளுமாறு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட வேண்டும்

•தரைமட்டத்தில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கவேண்டும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழ் அதாவது தரைக்கு கீழ் இருக்கும் தளங்களில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கக்கூடாது.

•சிலிண்டரை அலமாரியில் வைக்கும்போது அதன் தரைத்தளத்திலும் அதன் மேல்தளத்திலும் காற்றோட்டத்திற்கு துளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

•சமைக்க உதவும் எரிவாயு அடுப்பை தரையில் வைக்கக்கூடாது. நின்று கொண்டு சமைப்பதற்கு ஏற்ற வகையில் போதுமான உயரத்தில் அடுப்பை வைக்கவேண்டும். மரப்பலகையினை அடுப்பு வைக்க உபயோகிக்கக்கூடாது. மரத்தினால் ஆன பலகையினை அதன் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வைத்து அதன் மீது அடுப்பு வைக்கவேண்டும்.

•ஜன்னலுக்கு நேராக எரிவாயு அடுப்பினை வைக்கக்கூடாது. ஏனெனில் காற்று வேகமாக வீசும் போது, அது தீயை அணைத்துவிடும். இவ்வாறு தீ அணைந்து விட்டால் எரிவாயு அந்த அறை முழுவதும் பரவி எளிதில் தீ பிடித்து விபத்து நேரிட ஏதுவாகும்

•எரிவாயு அடுப்பினை பலகை அல்லது அலமாரியில் வைக்கும் போது அதன் ஒருபகுதி சுவரை ஒட்டி இருக்குமாறு வைக்கவேண்டும். அதாவது அடுப்பின் பின்பகுதி சுவரின் அருகில் இருக்குமாறு வைக்கவேண்டும். அடுப்பினை ஒட்டி காணப்படும் சுவரில், அலமாரி போன்றவை இருத்தல் கூடாது. அவ்வாரு இருந்தால், அதிலிருக்கும் பொருட்களை அடுப்பு எரியும் போது நீங்கள் முயற்சிக்கும் போது, உங்கள் ஆடை தீ பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது

•ஒரு அறையில் 2 எரிவாயு சிலிண்டர்களுக்கு மேல் வைக்கக்கூடாது. இரண்டு சிலிண்டர்களை வைக்கும்போது சமையலறையின் குறைந்தபட்ச பரப்பளவு 10மீ2 ஆக இருக்கவேண்டும்

•எப்பொழுதும் எரிவாயு சிலிண்டர்களை செங்குத்தாக அதன் வால்வு மேல் பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும. செங்குத்தாக வைக்காமல் படுக்கைவாட்டிலோ அல்லது வேறு மாதிரியாகவோ வைத்தால் எரிவாயு சிலிண்டரிலுள்ள எரிவாயு திறந்த வால்விலிருந்து வெளியேறி அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது

•மின்சார ஓவன், மண்ணென்ணெய் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எரிவாயு அடுப்பிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்குமாறு வைக்கவேண்டும்.

•எரிவாயு சிலிண்டரை வெயில், மழை, வெப்பம், தூசி படியும் இடங்களில் வைக்கக்கூடாது

•சிலிண்டர் மேல் பாத்திரங்களையோ, துணியையோ வைக்கக்கூடாது

•சிலிண்டரின் பாதுகாப்பு மூடியினை சிலிண்டரின் மேல்வளையத்துடன் இணைத்து வைக்கவேண்டும். ஏனெனில் எரிவாயு, வால்வின் வழியாக சிலிண்டரிலிருந்து கசியும்போது இந்த பாதுகாப்பு மூடியினை வால்வின் மேல் வைத்து எரிவாயு கசிவை தடுக்கமுடியும்

•வால்வின் மீது பாதுகாப்பு மூடி போடாமல் காலி அல்லது எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரை வைக்காதீர்கள்

•அழுத்த ரெகுலேட்டரை உபயோகிக்கும் போது, அதன் மேல் பாகத்தில் கூறிய அறிவுரைகளை பின்பற்ற தயங்காதீர்கள்.
 
back to top