.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 9, 2013

ஆன்டிபயாட்டிக் எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா ?


தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.

ொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்…

ஆல்கஹால்-

மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் உடல் நோய் சரியாக வேண்டுமென்றால், இந்த ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்-

பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

நார்ச்சத்து உணவுகள்-

எப்போது ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போதும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

அமிலத் தன்மை உள்ள உணவுகள்-

அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி மற்றும் மற்ற உணவுகள், எப்படி ரோட்டில் சிக்னல் போட்டால், வண்டிகள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறதோ, அதேப்போல் இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்துவிடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

ஹெவி ஃபுட்-

மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு நன்கு சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சி கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

முக பள்பளப்புக்கும் முதுமையை துரத்துவதற்கும் கூட உதவும் தண்ணீர்!

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.

 nov 9 - health Water-and-the-body.


எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.


எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.

அதிலும் நம் உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு

அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை

செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.

சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்

உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்

நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

* உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.

* வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.

* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.

மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.

* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.

* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.

* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.

* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.

* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.

* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

* மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.

* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.

* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.

எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...

From small children to adults, everyone today is chest pain. View payappatukiromo or other pain, chest pain, if you're dying.
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சு வலி என்றால் துடித்துப் போகிறோம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியாகப்  பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலிகளும்  மாரடைப்பின் அடையாளமில்லை...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘மாரடைப்பினால் வரும் நெஞ்சு வலியானது, முதலில் நெஞ்சின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும். மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, வலி இடது  கைக்குப் பரவுவது, நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலிப்பது, மூச்சுத் திணறல், அரிதாக சில நேரம் கழுத்திலும் வலி போன்றவை இருக்கும். ஆனால், மற்ற பிரச்னைகளின் காரணமாக வரக்கூடிய நெஞ்சு வலிக்கும், இதயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நெஞ்சு வலிக்கான முக்கிய காரணங்களில் கழுத்து மற்றும் முதுகெலும்பு பாதிப்பு, தோள்பட்டை வலி, முதுகின் மேல்புற தண்டுவட சவ்வு பாதிப்பு  மற்றும் நெஞ்செலும்பு சந்திப்புகளில் உண்டாகிற தேய்மானம் போன்றவை அடக்கம். தவிர அக்கி எனப்படுகிற இன்ஃபெக்ஷனும் ஒரு காரணமாகலாம்.  வயதானவர்களுக்கு ஏற்படும் முதுகெலும்பு உடைவதன் காரணமாகவும் இந்த வலி வரலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் நாள்பட இருக்கும். மயக்கம், படபடப்பு, மூச்சுத் திணறல் இருக்காது. எனவே வலி வந்ததும், இது ஆபத்தான இதய வலி  இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கல்லீரல் பகுதியில் ஏற்படும் வலிகூட நெஞ்சு வலியாக உணரப்படலாம். எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ  ஸ்கேன் மற்றும் மருத்துவ ஆலோசனையின் மூலம் காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

அக்கி வலியாக இருந்தால், ஒருவித ஊசியின் மூலம் சரிசெய்யலாம். தோள்பட்டை வலியானால், தோள்பட்டை தேய்மானம் மற்றும் வீக்கத்தைக்  குறைக்க, தோள்பட்டை சந்திப்பில் ஊசியின் மூலம் மருந்தைச் செலுத்தி, சில பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படும். நெஞ்செலும்பு சந்திப்புகளில்  வயதானவர்களுக்கு வரும் வலிக்கு மாத்திரைகளும், பயிற்சிகளுமே தீர்வு. முதுகெலும்பு நொறுங்குவதால் வரும் வலி வயதானவர்களுக்கு சகஜம். 11  மற்றும் 12-வது எலும்புகளே இத்தகைய நொறுங்குதலுக்குக் காரணம்.

இது அடி படுவதாலோ, விபத்தினாலோ ஏற்படாமல், கால்சியம் குறைபாடு காரணமாக வரும். மருந்து, மாத்திரைகள் பெரியளவில் உதவாது.  வெர்ட்டிப்ரோபிளாஸ்டி எனப்படுகிற ஒரு ஊசி, எலும்பைப் பலப்படுத்தும் சிமென்ட் போல செயல்பட்டு, எலும்பை பலப்படுத்தி, வலியைக் குறைக்க  உதவும்.  இதைப் போல ஒவ்வொரு காரணத்துக்கான பின்னணியைக் கண்டறிந்து, சரியான சிகிச்சை கொடுத்தாலே நெஞ்சு வலியிலிருந்து மீண்டு  நிம்மதியாக வாழலாம்...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

லெனோவா நிறுவனம் ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் ரூ.42.250 விலையில் அறிமுகம்!

லெனோவா நிறுவனம் டச்ஸ்கிரீன் கொண்ட ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் இந்த புதிய மாடல் 10 புள்ளி மல்டி டச் கொண்ட உலகின் முதல் டூயல் மோட் நோட்புக் ஆகும். இந்த புதிய ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் விலை ரூ.42.250 ஆகும்.

புதிய மாடல் விண்டோஸ் 8 இயக்கத்தளம் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 300 டிகிரி வரை சுழற்ற முயன்ற டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய லெனோவா ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 1366x768p தீர்மானம் கொண்ட ஒரு 14 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நிறுவனத்தின் AccuType கீபோர்டு உடன் வருகிறது.

அதை 4GB ரேம் உடன் நான்காவது தலைமுறையின் இன்டெல் கோர் i3 ப்ராசசர் (வரை i7) உடன் வருகிறது. மற்றும் விருப்பத்தேர்வு 2GB என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடி 740M கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் உள்ள இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ப்ளூடூத் 4.0, USB 3.0, யுஎஸ்பி 2.0 மற்றும் HDMI போர்ட்டுகள், கார்டு ரீடர் மற்றும் RJ45 ஈதர்நெட் போர்ட் ஆகியவை அடங்கும்.

சாதனத்தில் 720p முன் கேமரா மற்றும் 48Wh பேட்டரி உள்ளது. நோட்புக் மற்ற அம்சங்கள் டால்பி உயர்தர ஆடியோ, லெனோவா கிளவுட் ஸ்டோரேஜ், வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் OneKey ரெகவரி உள்ளிட்டவை அடங்கும். இந்த மாடல், வெள்ளி-சாம்பல் விளிம்பு நிறம் கொண்ட கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது, 0.23-இன்ச் திக் மற்றும் 2kg எடையுள்ளதாகவும் இருக்கிறது.

ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் அம்சங்கள்:


366x768p தீர்மானம் கொண்ட ஒரு 14 இன்ச் டிஸ்ப்ளே,

4GB ரேம் உடன் நான்காவது தலைமுறையின் இன்டெல் கோர் i3 ப்ராசசர்,

2GB என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடி 740M கிராபிக்ஸ் கார்டு,

Wi-Fi,

ப்ளூடூத் 4.0,

USB 3.0,

யுஎஸ்பி 2.0,

HDMI போர்ட்டுகள்,

RJ45 ஈதர்நெட் போர்ட்,

720p முன் கேமரா,

48Wh பேட்டரி,

0.23-இன்ச் திக்,

2kg எடை,

விண்டோஸ் 8 இயக்கத்தளம்
 
back to top