.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 12, 2013

300 திரையரங்குகளில் வெளியாகிறது இரண்டாம் உலகம்!

 

இரண்டாம் உலகம்’ திரைப்படம் 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் இயக்கியிருக்கும் மெகா பட்ஜெட் படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் தமிழகம் முழுவதும் 22ம் தேதி 300 திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதற்காக திரையரங்குகளை புக் செய்யும் பணியில் பிவிபி நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இப்போதைக்கு தீபாவளி படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படியும் 22ம் தேதிக்கு முன்பாக ‘ஆரம்பம்’, ‘பாண்டிய நாடு’ படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்துவிடுவார்கள் என்பதால் ‘இரண்டாம் உலகம’ படத்துக்கு முக்கியமான திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படாது.

மேலும் இரண்டாம் உலகம் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் அதேநாளில்தான் ஆந்திராவிலும் ரிலீஸாகிறது.  தெலுங்கில் இப்படம் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் த்ரில்லான அனுபவமாக படம் இருக்க வேண்டும் என்று திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் செல்வராகவன்.

17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த ‘ரோஜா’ மதுபாலா!

 

சுமார் 17 ஆண்டுகள் கழித்து ‘ரோஜா’ மதுபாலா தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

‘காதலில் சொதப்புவது எப்படி’ இயக்குனர் அடுத்து இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘வாயை மூடி பேசவும்’ . இதன் மூலம் மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

இவைதவிர, ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்த நடிகை மதுபாலா தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகிறார். இந்தப் படத்தில் அவர், நஸ்ரியாவின் உறவினராக, ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலான மதுபாலா சுமார் 17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறார்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை. மூணாரில் நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் வரும் 19ஆம் தேதி முதல் மதுபாலா கலந்துகொள்கிறார்.

மங்கல்யான் வெற்றிகரமாக 1.20 லட்சம் கி.மீ உயரத்தில் நிறுத்தம்...


செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக  1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான்  விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது. இதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.

இந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது. இறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும். விண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் நட்சத்திர பலன்கள்!

ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.

1.அசுவினி: கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை, கடவுள் பக்தி அதிகமிருக்கும்.

2.பரணி: சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.

3.கிருத்திகை: கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.

4.ரோகிணி: செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.

5.மிருகசிரிடம்: சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.

6.திருவாதிரை: குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.

7.புனர்பூசம்: பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.

8.பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.

9 ஆயில்யம்: அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.

10.பூரம்: சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.

11.உத்திரம்: சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.

12.அஸ்தம்: சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.

13.சித்திரை: வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.

14.சுவாதி: ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.

15.விசாகம்: சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.

16.அனுஷம்: தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.

17.கேட்டை: சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.

18.மூலம்: குரோதமானவர்கள். வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.

19.பூராடம்: குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.

20.உத்திராடம்: பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.

21.திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.

22.அவிட்டம்: சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். பெருந் தன்மையானவர்கள். கருணை மிக்கவர்கள். நேர்மையானவர்கள்.

23.சதயம்: பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப் பாக இருப்பவர்கள்.

24.பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.

25.உத்திரட்டாதி: பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.

26.ரேவதி: சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.

27.மகம்: ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். பாசம் மிக்கவர்கள்
 
back to top