.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 14, 2013

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு 'பிரியாணி'?

 

கிறிஸ்துமஸ் விடுமுறையை மனதில் கொண்டு, 'பிரியாணி' படத்தினை வெளியிடலாமா என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க, வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் 'பிரியாணி'. இது யுவன் இசையமைத்திருக்கும் 100 வது படம். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

'பிரியாணி' படம் தான் கார்த்திக்கு முதலில் வெளிவருவதாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடியாததால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை வேகமாக தயார் செய்து தீபாவளிக்கு வெளியிட்டார்கள். படம் படுதோல்வியைச் சந்தித்தது.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் தீபாவளிக்கும், 'பிரியாணி' படம் பொங்கலுக்கும் வெளியாகும் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொங்கலுக்கு 'ஜில்லா', 'வீரம்', 'கோச்சடையான்' என பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்து, கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.

டிசம்பர் 20ம் தேதி வெளியிட்டால், கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருவதால், சீக்கிரமாக பிரியாணியை பரிமாறி, கல்லா கட்டலாம் என்ற முடிவில் இருக்கிறது படக்குழு.

செல்வாக்கான இளைஞர் பட்டியலில் மலாலா, ஒபாமா மகள் தேர்வு!



நியூயார்க்கில் இருந்து வெளிவரும் டைம் இதழ் 2013ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த 16 இளைஞர்கள் பட்டியலை கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ளது.


 இந்த பட்டியலில் ஒபாமா வின் மகள் மாலியா (15), பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (16) மற்றும் சமூக சேவை, இசை, விளையாட்டு, தொழில்துறை விஞ்ஞானம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள்  இடம்பெற்றுள்ளனர்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியாவின் பேச்சு மற்றும் செயல்பாடு கள் பெரியவர்களின் செயல்பாட்டுக்கு ஒப்பாக அமைந்துள்ளது என்று டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.


மலாலாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடியவர், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.


இதைத்தவிர பாடகர்கள் லார்டு (17), ஜஸ்டின் பைபர் (19), ஒலிம்பிக் நீச்சல் வீரர் மிஸ்ஸி பிராங்க்ளின் (19) உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சச்சின் பற்றி சில சுவாரசியங்களும்!


* சச்சின் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், ஒருபோதும் 3வது வீரராக களம் இறங்கியது இல்லை.

* இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் மீதான அபிமானத்தால், தன்னுடைய மகனுக்கு அப்பெயரை சேர்த்துக்கு கொண்டார் சச்சின் டெண்டுல்கரின்   தந்தை.

* ஒருமுறை பிரபல குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் பேட் பட்டு, பந்து உடைந்து தெரிப்பது போன்ற நடிக்க வேண்டும் என்று சச்சினிடம்   கேட்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட்டின் மீதுள்ள அபிமானத்தால் தன்னால் அதுபோன்று நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

* 1990ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்து மும்பை திரும்பியபோது, விமான நிலையத்தில் முதல் முறையாக தன்னுடைய வருங்கால   மனைவி அஞ்சலியை சந்தித்தார்.

* அணியினர் பயணம் செய்யும் பஸ்சில், எப்போதுமே முதல் வரிசையில் இடதுபுறம் உள்ள ஜன்னலோர இருக்கையில்தான் சச்சின் அமர்வார்.

* 1987ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து உலகப்கோப்பை அரையிறுதிப் போட்டியின்போது, பவுண்டரி லைனில் பந்தை எடுத்துப்போடும் சிறுவனாக   சச்சின் இருந்துள்ளார்.

* 2002ல் பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் ஸ்டம்பிங் ஆனார். டெஸ்ட் போட்டியில் இதுதான் அவரது   ஒரே ஸ்டம்பிங்காக பதிவாகி உள்ளது.

சிகரத்துக்கு கிடைத்த கவுரவங்கள்!


* சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தொடர்ந்து, இதன் நினைவு தபால்தலை இன்று வெளியிடப்படுகிறது. இந்தியாவில்   முதல் முறையாக உயிருடன் இருக்கும் நபருக்கு தபால்தலை வெளியிடப்பட்ட பெருமையை பெற்றவர் அன்னை தெரசா மட்டுமே (1980 ஆகஸ்ட்   27).   இதற்கு அடுத்தபடியாக சச்சின் இப்பெருமையை பெறுகிறார்.

* 1999ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வென்றார்.
* விஸ்டனின் உலக லெவன் நிரந்தர கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை சச்சினையே சாரும்.

* விமானப்படையின் பின்னணி இல்லாமல், குரூப் கேப்டன் என்ற கவுரவ பதவியை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் சச்சினுக்கே   கிடைத்துள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடனான போட்டியில், குறைந்தபட்சம் 2 செஞ்சூரிகளை அடித்த இந்தியர் என்று பெருமை.

* டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களை கொண்டவர் என்ற பெருமை பெற்ற இந்தியர்.
 
back to top