.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 15, 2013

துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கினோம் என்று யோசிக்கும் வகையில் துண்டில் அழுக்கு மற்றும் கறையானது படிந்திருக்கும். இத்தகைய துண்டானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலும் உடலை துடைக்கப் பயன்படுத்தும் துண்டாகட்டும் அல்லது சமையலறையை சுத்தம் செய்ய பயன்படும் துண்டு ஆகட்டும், எதுவானாலும், இவற்றில் படியும் கறைகள் மற்றும் அழுக்குகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று.

அதிலும் அத்தகைய கறைகளைப் போக்க பெரும்பாலானோர் பின்பற்றும் ஒரு செயல் தான், சுடு தண்ணீரில் துண்டை ஊற வைத்து, சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்து துவைப்பது. இருப்பினும், சில நேரங்களில் துண்டில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தேய்ப்பதால் துண்டில் இருந்து நூலானது வெளிவர ஆரம்பிக்கும்.
ஆகவே துண்டு பாழாகாமல் இருக்கவும், துண்டில் உள்ள கறைகளை எளிதில் போக்கவும் ஒருசில எளிய வழிகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி துண்டை சுத்தம் செய்து பாருங்கள்.

சுடுநீர்

சில நேரங்களில் புதிய துண்டு நீரை உறிஞ்சாமல் இருக்கும். அத்தகைய துண்டை சுடுநீரில் 25 நிமிடம் ஊற வைத்து அலசினால், துண்டு தளர்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல், அழுக்கு அதிகம் உள்ள துண்டாக இருந்தால், சுடுநீரில் நன்கு ஊற வைத்து, கைகளாலேயே தேய்த்து துவைத்தால், அழுக்கு போவதோடு, துண்டும் பாழாகாமல் இருக்கும்.

  
டிடர்ஜெண்ட்

வேண்டுமெனில், சுடு தண்ணீரில் சோப்புத்தூள் போட்டு கலந்து, அக்கலவையில் துண்டை நன்கு 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் சோப்பு போட்டு நன்கு துவைத்தால், அழுக்கு நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கொண்டும் துண்டில் உள்ள கறைகளைப் போக்கலாம். அதிலும் நிறம் மாறி உள்ள வெள்ளை நிறத் துண்டை, பேக்கிங் சோடா பயன்படுத்தி துவைத்தால், வெள்ளை நிறத் துண்டை பளிச்சென்று மாற்றலாம்.

வினிகர்

வினிகர் கூட கறைகளைப் போக்க உதவும் ஒரு சூப்பரான பொருள். அதற்கு நீரில் வினிகரை ஊற்றி, அதில் கறையுள்ள துண்டை ஊற வைத்து துவைக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. அதிலும் சோப்பு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து, கறை படிந்த துண்டை ஊற வைத்து துவைத்தால், கறை நீங்குவதோடு, துண்டும் நல்ல மணத்தோடு இருக்கும்.

உப்பு

பெரும்பாலான மக்கள் வெள்ளை நிற துண்டைத் தான் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக வெள்ளை நிற துண்டில் உள்ள கறைகளைப் போக்குவது என்பது கடினம். ஆனால் அந்த வெள்ளைத் துண்டை உப்பு பயன்படுத்தி துவைத்தால், துண்டில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி துண்டு சுத்தமாக இருக்கும்.

ஃபேப்ரிக் சாஃப்ட்னர்

மேற்கூறியவாறெல்லாம் துண்டை துவைத்தப் பின்னர், துண்டில் நல்ல நறுமணம் இருக்க வேண்டுமெனில், துண்டை துவைத்த பின்பு, நீரில் சிறிது ஃபேப்ரிக் சாஃப்னரை கலந்து, அந்த நீரில் துண்டை நனைத்து பிழிந்தால், துண்டு நன்கு மணத்துடன் இருக்கும்.


முட்டை வெந்துவிட்டதா ? அறிந்து கொள்ள எக் டைமர் !!


சமையலறையில் பல புதிய விஷயங்கள் புகுந்துவிட்டன. ஆனால் அது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற விஷயங்களைப் பற்றி பார்த்ததில் எக் டைமர் தான் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே அது பற்றி ஒரு கண்ணோட்டம்…

பொதுவாக உணவு பொருளை நாம் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அது வெந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள, அதனை கையால் நசுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் வெந்துவிட்டதை அறிந்து கொண்டு இறக்கிவிடுவோம்.

அதே போல குக்கரில் வேக வைக்கும் போது உணவு பொருளுக்கு ஏற்ப விசில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அடுப்பை அணைத்து விடுவோம். ஆனால் இதில் எல்லாம் கண்டு பிடிக்க முடியாத ஒரு வகை உணவு பொருள்தான் முட்டை. ஆம். அழுத்திப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. குக்கரிலும் வேக வைக்க முடியாது. எப்படித்தான் முட்டை வேகும் நேரத்தை சரியாக கண்டுபிடிப்பது?

இதென்ன பெரிய விஷயமா? 10 நிமிடம் அல்லது முட்டை ஓடு உடைந்தால் முட்டை வெந்து விட்டதாக அர்த்தம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், முட்டை சரியாக வெந்துவிட்டதா என்பதை கண்டறிய ஒரு சாதனம் உள்ளது. அதுதான் எக் டைமர்.

முட்டை வேக வைப்பதை கண்டுபிடிக்க ஒரு சாதனமா என்று வியக்காதீர்கள். அதிலும் எத்தனையோ வகை உள்ளது என்பது தான் விஷயமே. டிஜிட்டல் டைமர், ஹவர்கிளாஸ் வகை என பல வகைகளில் உள்ளது. டிஜிட்டல் டைமர் என்பது முட்டை வேகும் நேரத்தை டிஜிட்டல் கடிகாரம் போல கணிக்கிறது. ஹவர்கிளாஸ் வகையில், அதில் உள்ள மணல் போன்ற துகள், கீழுள்ள குவளையில் விழுவதைக் கொண்டு முட்டை வேகும் நேரத்தை கணித்துக் கொடுக்கிறது. முட்டையைப் போன்றே வடிவமுள்ள ஒரு சாதனமும் வந்துவிட்டது. அதனை வேக வைக்கும் முட்டையுடன் போட்டுவிட வேண்டுமாம். அது நிறம் மாறியதும் முட்டை வெந்துவிட்டதாக அர்த்தமாம்.

படித்ததில் பிடித்தது!

                                                  படித்ததில் பிடித்தது

ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார். விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.

ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை, பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.

விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை. விருந்தளித்தவர் சொன்னார் ''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே. ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான். எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.

நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது. அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை, சமூக அந்தஸ்து, செல்வச் செழிப்பு எல்லாம். நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள், நண்பர்களே!''

கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் (card skimming) என்றால் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.

சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.

எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?

பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.


தப்பிக்க வழிகள்!!


இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டுஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.


பில்களை நேரடியாக செலுத்துங்கள்


உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.


ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறை


எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.


எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்


எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.



வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்


கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.


போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.


புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.
 
back to top