
கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை...