.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 17, 2013

அறிவுத் துளிகள்.......


மாணவர்களே உங்கள் அறிவுத் திறனை பெருக்கி கொள்ள உங்களுக்கான பொது அறிவு தகவல்கள்.

1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது?

2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?

3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?

4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?

5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்?

6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?

7. புல் இயல் (Agrostology) என்பது என்ன?

8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?

9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?

10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?

விடைகள்

1. கொழுப்பு 2. மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல் 3. நகங்கள், மேல்தோல், ரோமங்கள் 4. அயனிச் சேர்மங்கள் 5. ஹிப்போலைட் பிக்ஸி 6. இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்) 7. புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் 8. உணர்ச்சி நரம்புகள் 9. தனிவெப்பநிலை 10. குரோமோசோம்கள்

பயனுள்ள பொது அறிவு தகவல்கள்!


மாணவர்களே உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்...

* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்

* கொசுக்களில் 3500 வகை உள்ளது

சம்பங்கி பூவின் மகத்துவம்!

rajnigandha flowers flower conducive to prayer. rajnigandha flowers flowers in full bloom in a slightly different clinical behavior. Come as soon as possible.

பூஜைக்கு உகந்த சம்பங்கி பூ. மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது சம்பங்கி பூ. அவ்வளவு சீக்கிரத்தில் வாடாது. இதன் பூ இதழ்களும், தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல், பல்வேறு வகைகளில் பலன் தர கூடியதாக உள்ளது. சம்பங்கி பூவின் பலன்களை பார்ப்போம்.

சம்பங்கி தைலம்

அரை கிலோ தேங்காய் எண்ணெயில், 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு நன்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெய் தான் சம்பங்கி தைலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை நன்றாக தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி, 20 கிராம் வெள்ளரி விதை, 20 கிராம் பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஒருசேர மழுமழுவென அரைத்து கொண்டால் பவுடர் ரெடி. இந்ததைலம் தேய்த்து குளிக்கும்போது, பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.

சம்பங்கி பூவின் பலன்கள்

4 சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைத்து சூடு பறக்க நெற்றி பகுதியில் தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 சம்பங்கி பூவை போட்டு, பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, அந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை கண்களை சுற்றி பூசி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். கண் நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி போன்ற பிரச்னைகள் தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்கள் பளிச்சிடும் வகையில் இருக்கும். காய்ச்சிய பாலில் 2 சம்பங்கி பூவை போட்டு ஆற வைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் வீதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால், உடல் தெம்பும், பலமும் பெறும். 200கிராம் நல்லெண்ணையுடன் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு காய்ச்ச வேண்டும்.

இதில் சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால் மற்றும் பாதத்தில் தடவி வந்தால், சொரசொரப்பு, வெடிப்பு மறையும். இதில் விளக்கெண்ணெய் சேர்க்காமல், நன்றாக ஆற வைத்து எலுமிச்சை சாறை கலந்து ரசத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இதை தினமும் காலை, மாலை இரு வேலையும் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மென்மையாகும். சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாத வலி நீங்கும்.

ஒரு கைப்பிடி சம்பங்கி பூவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வாரம் இருமுறை ஆவி பிடித்து வந்தால், முகத்தில் ஏற்பட்ட பருக்கள், தழும்புகள் மறையும். சம்பங்கி பூ 2, தேங்காய் பால் 2 தேக்கரண்டி அளவு கலந்து நன்கு அரைத்து முகத்தில் பூசினால், முகம் புத்துணர்ச்சி பெறும்.

பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..

நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக தெளிவாக இருக்குமானால், எதிரில் இருப்பவர்கள் நம்முடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.

அதுமட்டுமா? நம்முடைய எண்ணங்களை தெளிவான வார்த்தைகளில் கூறுவதன் மூலம் கேட்பவர் மனதிலும் அந்த வார்த்தைகள் அப்படியே பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை சொல்லக்கூடிய தருணம், முகபாவம் ஆகியவை முக்கியம்.

நம்மைவிட பெரியவர்களிடத்தில் எப்படி பேச வேண்டும். சக தோழர்களிடம் எப்படி பேச வேண்டும். சபையோர்களிடத்தில் எப்படி பேச வேண்டும் என ஒரு வரைமுறையே, வரையறையே இருக்கிறது.

பொதுவாக நம்முடைய கருத்தை ஒருவரிடத்தில் சொல்லும்போது தெளிவாக, புன்முறுவல் கலந்து, இயல்பான முகபாவனையுடன் சொல்வோமானால் நிச்சயம் அந்த கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏளனத்துடன், கேலியும் கிண்டலும் கலந்து நீங்கள் உண்மையையே பேசினால் கூட அதை நம்ப மறுப்பார்கள். இந்த முறையாலும் நீங்கள் மற்றவர்களைக் கவர முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், எதிரில் இருப்பவர் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிவிடும் அபாயமும் உண்டு.

கடுகடு முகத்துடன், சிடு சிடு வெனப் பேசி, ஒரு கருத்தைச் மற்றவர்களிடம் சேர்க்க நினைக்கும்போது, அந்த கருத்தால் எதிரில் இருப்பவர் மனம் பாதிப்பதோடு, சொல்லுகிற கருத்தையும் ஏற்றுக்கொள்கிற மனநிலையை நாம் இழக்க வைத்துவிடுகிறோம். இதனால் மேலும் பிரச்னைகள் கூடுமே தவிர, குறையவே குறையாது. இவ்வாறு பேசுவதால் உங்களுடைய கருத்துகளையும் பிறர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மட்டுமல்ல.. உங்களுடைய கருத்திற்கு மதிப்பும் இருக்காது.

எனவே எளிமையாக, இனிமையாக, இயல்பாக மனதில் மகிழ்ச்சி பொங்க சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறுங்கள்.

அவ்வாறு தெளிவாக வார்த்தைகளை உச்சரித்து பேசுவதால், கேட்பவர்களின்  மனதில் உங்களுடைய கருத்து ஆழ பதியும்.  இதற்கு எடுத்துக்காட்டாக நமது ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சுகி சிவம் ஐயா அவர்களைக் கூறலாம். மேடையில் அவர் பேசும்போது உச்சரிக்கும் விதம், வெளிவரும் சொற்களில் ஓசைநயம், அழுத்தம் ஆகியற்றை உன்னிப்பாக கவனித்தால் இக்கலை உங்களுக்கும் கைகூடும்.

உரையாடல் தெளிவாக அமைந்துவிட்டால், அதன் மூலம் நாம் சொல்லக்கூடிய கருத்துகள் மற்றவர்களை அடைவதோடு மட்டுமல்லமால், நல்லதொரு நட்பையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என என் பாட்டி சொன்னதிற்கான சரியான அர்த்தம் இப்போதுதான் எனக்கு புரிபட ஆரம்பித்திருக்கிறது? ஆரம்ப கால  பள்ளி நாட்களில் "வாயுள்ள பிள்ளைப் பிழைக்கும் என்று சொல்கிறீர்களே... அது என்ன வாயு பாட்டி" என்று என் பாட்டியிடம் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.

"சுவாசத்திற்கு தேவையான வாயு ஆக்சிஜனா என்றெல்லாம் கேட்டு கேலியும் கிண்டலும் செய்திருக்கிறேன்." தற்போதுதான் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

வாயுள்ள பிள்ளை - நன்றாக பேசி, தெளிவான வார்த்தைகளை வெளிப்படுத்தி பிறர்மனதில் பதியவைப்பது என்பது தான்  இதனுடைய சரியான அர்த்தம் என்பது இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. புரிந்துகொள்ள முடிகிறது.

உங்களுடைய எண்ணங்களை எதிரில் இருப்பவரிடம் தெளிவான வார்த்தைகளால் வெளிப்படுத்தி, தான் சொல்ல வந்ததை சரியாக எடுத்துச்சொல்லி,  கருத்தைப் பதிந்தாலே போதும். நீங்களும் ஒரு வெற்றியாளர்தான். இதுதான் பேசும் கலை.. இதுவே ஜெயிக்கும் கலை..!

அலுவலகம் ஆனாலும் சரி, பொது இடமானாலும் சரி, வியாபாரத் தொடர்பான உரையாடல் ஆனாலும் சரி.. வேறு தொடர்பு உரையாடல்களானாலும் சரி...

இவ்வாறு தெளிவாக பேசக்கூடியவர்கள் என்றும் வெற்றிபெற்றவர்களாகவே, வெற்றியை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பவர்களாகவே வலம் வருகிறார்கள்.. உங்கள் கருத்துகளை சொல்வதில் நீங்கள் எப்படி ? நீங்களும் வாயுள்ள பிள்ளைதானே...
 
back to top